இரத்த சோகை ஏற்பட காரணம் | Ratha Sogai Arikurigal in Tamil
.இன்று நிறைய பேருக்கு ரத்த சோகை பிரச்சனை உள்ளது. இது எதனால் வருகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்? ஹீமோகுளோபின் என்றால் என்ன? ஹீமோகுளோபினை அதிகரிக்க வழிகள் என்ன? இவற்றைப் பற்றி பார்ப்போம்.
ரத்த சோகை என்றால் என்ன?
பொதுவாக சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் ரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.
அதாவது நமது ரத்தம் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுகள் மற்றும் பிளாஸ்மாவால் ஆனது. சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனுள் இருக்கும் ஹீமோகுளோபின்கள் என்ற நிறமிகளின் எண்ணிக்கையும் குறையும்.
அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது.
ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் அனீமியா என்ற ரத்த சோகை நோய் ஏற்படும்.
பொதுவாக ரத்த சோகை என்றதும் மருத்துவரிடம் சென்று இரும்பு சத்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், இயற்கையாக பல வழிகளில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
இரத்தசோகை அறிகுறி
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அதன் அறிகுறி எப்படி இருக்கும்? எப்பொழுதும் சோர்வாக இருக்கும். வேலை ஏதும் செய்யாத போதே மூச்சு வாங்குதல் இதனால் அன்றாடம் செய்யும் வேலைகளை செய்ய முடியாமை.
நகம், விரல்கள், முகம், கண்கள், நாக்கு போன்றவை வெளுத்து காணப்படுதல். மேலும், கை, கால், முகம் போன்றவை வீக்கமாக காணப்படுதல் போன்றவை.
குழந்தைகளை பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வளர்ச்சி, குறைவாக இருக்கும். படிப்பில் கவனம் இல்லாமலும், விளையாட சக்தி இல்லாமலும் இருப்பார்கள்.
பொதுவாக குழந்தைகள் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
இப்படி ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பயப்படத் தேவையில்ல. நமது உணவு முறையில் சில நல்ல மாற்றங்களை செய்தாலே போதும் ஹீமோகுளோபின் அளவினை சரியாக வைத்து கொள்ளலாம்.
ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க
தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு வெதுவெதுப்பான வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ஹீமோகுளோபின் அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நல்ல உறக்கம் வரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை செய்யலாம். முக்கியமாக ரத்த சோகையை போக்க உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான முருங்கைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை போன்ற கீரைகளையும், பழங்களில் பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி, கொய்யாப்பழம், தர்பூசணி, அன்னாசிப்பழம் போன்ற பழங்களில் தினமும் ஏதாவது ஒன்றை சாப்பிடுவது அவசியம்.
இதனால், ரத்த விருத்தி அடைந்து ரத்த சோகை முற்றிலும் நீங்கும்.
பெண்கள்
கேழ்வரகில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பெண்களை பொறுத்தவரையில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.
அவர்கள், கேழ்வரகை தினமும் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். மேலும், கருவுற்ற பெண்கள் தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்துக் கொள்ளலாம்.
பேரீச்சம் பழம் மற்றும் உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து இருப்பதால்,இதனை கர்ப்பிணிகள் தின்பண்டங்கள் ஆக சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
தினமும் ஒரு மாதுளையில் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் ரத்த சோகை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஆண்கள்
ஆண்களைப் பொறுத்தவரையில் மதுப்பழக்கம் மற்றும் புகை பழக்கம் போன்றவை கெட்ட பழக்கங்கள் என்று சொல்வதற்கு பின்னால் ஆரோக்கிய ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் ரத்த சோகையும் முக்கிய காரணம். அதுமட்டுமல்ல துரித உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் அடிக்கடி சாப்பிடுவது போன்ற பழக்கங்களினாலும் ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு குறைந்து ரத்த சோகை ஏற்படுகிறது.
மேலும் சரிவிகித உணவு உண்ண வேண்டும் என்பதிலும் பெரும்பாலான ஆண்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இதனால் ஏற்படும் சத்து குறைபாடுகளாலும் ரத்த சோகை ஆண்களுக்கு வருகிறது.
மேலும் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை குடல் சரியாக உறிஞ்சிக் கொள்ளாத பிரச்சனையாலும் இரும்புச் சத்து குறைபாடு ஆண்களுக்கு ஏற்படுகிறது.
அதாவது அதிகம் காபி, டீ சாப்பிடும் பழக்கத்தாலும் இந்த பிரச்சனை உண்டாகிறது. பொதுவாக வெல்லத்தில் அதிக இரும்புச் சத்து உள்ளது.
மேலும்
சோளம், நிலக்கடலை, கம்பு, கொள்ளு, எள்ளு, சோயா, காராமணி, பட்டாணி, மொச்சை முதலான தானியங்கள் மற்றும் கடலை மிட்டாய், கடலை உருண்டை, பனங்கற்கண்டு கலந்த பால், பொறி உருண்டை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டாலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
அதே போன்று பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடலாம். முக்கியமாக உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள ரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்தத்தில் கலக்கிறது. எனவே உடற்பயிற்சியில் ஓடுதல் போன்றவை செய்யலாம்.
எனவே இங்கே சொன்னது போன்று செய்தாலே மருந்து, மாத்திரை இல்லாமலே,ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இதனால் ரத்த சோகையை தவிர்க்க முடியும். எனவே ரத்த சோகை உள்ளவர்கள் கவலைப்படாமல் இவற்றை செய்து பயன்பெறுங்கள்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
- பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
8 Comments
Comments are closed.