பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்

பலவகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத ஒன்று பாகற்காய்.

அதே நேரத்தில் பாகற்காய் உடலுக்கு தேவையான நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாகவும் உள்ளது.

பாகற்காயை பார்த்தவுடன் நமது நினைவுக்கு வருவது கசப்பு மட்டும் தான். பெரும்பாலான மக்கள் பாகற்காயை சாப்பிடவே மாட்டார்கள்.

ஆனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து கொண்டால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

அதை அறிந்தால் பாகற்காயை ஒருவரும் தவிர்க்கவே மாட்டார்கள். பாகற்காய் பச்சை, வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.

பாகற்காயை ஜுஸ் போட்டு அருந்தலாம். மேலும் பாகற்காய் பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

பாகற்காயில் உள்ள சத்துக்கள்

  • வைட்டமின் ஏ
  • வைடமன் பி
  • வைடமன் சி
  • வைடமன் பி12
  • இரும்பு சத்து
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • பீட்டா-கரோட்டின்
  • ஃப்ளேவோனாய்டுகள்
  • லூடின் 

பாகற்காய் பயன்கள்

நீரழிவு நோய்

நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது.

பாகற்காயில் உள்ள ஒரு வகை வேதிப் பொருள் இன்சுலின் போல் செயல்பட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

பாகற்காய் பயன்கள் pavakkai benefits tamil

இதயநோய்

பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது.

இதன் மூலமாக இதய நோய் வருவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

செரிமானம்

பாகற்காயானது செரிமானத்திற்கு சிறந்தது.

இது செரிமான பிரச்சனையில் இருந்து நிவாரணம் அழிப்பதோடு குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கள் இருந்து விடுவிக்கும்.

பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.

இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு, வேகமாக உடல் எடை குறைய செய்கிறது.

சிறுநீரகம்

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும்  உதவுகின்றது.

சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது.

ஆற்றல்

பாகற்காயை ஜுஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். வலிமை அதிகரிக்கும்.

எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட குளிர்பானங்களை பருகாமல் பாகற்காய் ஜுஸ் பருகுங்கள்.

புற்றுநோய்

நம் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல வகையான மாற்றங்களால், உடலில் சேரக்கூடிய பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினால் புற்றுநோய் ஏற்படுகிறது.

அன்றாடம் பாகற்காய் பொரியல் அல்லது கூட்டு சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

பாகற்காயானது இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்டது.

இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மேலும்

பாகற்காயானது உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் காய்ச்சலை தடுக்கும். பாகற்காய் சாறு கொண்டு மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.

பாகற்காயை இலைச் சாற்றுடன் மோர் கலந்து குடித்தார் மூல நோய் குணமாகும்.

வாரத்திற்கு இரண்டு முறை பாகற்காய் சாப்பிட்டு வர வேண்டும்.

அவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது.

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

இதனால் இதய நோய் வருவதைத் தடுக்கும்.

பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

உணவில் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

பாகற்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

இதனையும் படிக்கலாமே
English Overview:

Here we have Pavakkai benefits in Tamil. It is also called பாகற்காய் or பாகற்காய் பயன்கள் or பாகற்காய் நன்மைகள் or பாகற்காய் மருத்துவ பயன்கள் or pagarkai or pagarkai in tamil or pagarkai payangal in tamil or pagarkai health benefits in tamil or pagarkai nanmaigal or pagarkai health benefits or pagarkai uses in tamil or pagarkai payangal or Pavakkai payangal in Tamil or Pavakkai maruthuvam in Tamil or Pagarkai maruthuva payangal in Tamil

 

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning