கொய்யா பழம் நன்மைகள் | Koyya Palam Benefits in Tamil
பொதுவாக எல்லாருக்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதன் விலையை நினைத்தால் பழங்கள் சாப்பிடும் ஆசையே போய்விடும்.
உண்மையில் எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க வேண்டும் என்றால் அது கண்டிப்பா கொய்யாப்பழங்கள்தான். சொல்லப் போனால் இது விலை மலிவாக எளிதாக கிடக்கிறது என்பதாலேயே இதை நிறைய பேர் அலட்சியப்படுத்துகிறார்கள்.
உண்மையில் ஆப்பிளை விட பல மடங்கு சத்துக்கள் கொண்டது இந்த கொய்யாப்ப பார்க்கலாம். அந்த வகையில் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் முழு பலன்களையும் பெறுவதற்கு எப்படி சாப்பிட வேண்டும்? சர்க்கரை நோயாளிகள் இதை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? என்று பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
பொதுவாக ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வைட்டமின் சி உள்ள உணவுகள் தினமும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இதில் வைட்டமின் சி மிக அதிக அளவில் உள்ளது. அதாவது, ஆரஞ்சை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி இதில் உள்ளது. மேலும் மோசமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கொள்ளும் பண்புகளும் இதில் உள்ளன.
எனவே தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் நோய்த் தொற்றுகள் வருவதைத் தடுக்கும்.
ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின் என்பது நம் சுவாசிக்கும் ஆக்சிஜன் மற்றும் நாம் சாப்பிடு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவும் புரதமாகும்.
இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை இரத்தத்தில் குறைவாக இருக்கும் பொழுதுதான் ரத்த சோகை ஏற்பட்டு உடலை எப்பொழுதும் சோர்வாக மாற்றுகிறது.
அந்த வகையில் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வரும் பொழுது இதில் உள்ள அதிக இரும்பு சத்து ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
முக்கியமாக, இதில் விட்டமின் சியும் உள்ளதால் நாம் சாப்பிடு உணவில் உள்ள இரும்பு சத்தை எளிதில் உறிஞ்ச உதவும் என்பதால் தினமும் கொய்யா சாப்பிட்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை உயரும். இதனால் ரத்த சோகை நீங்கி நம்மை சுறுசுறுப்பாக மாற்றும்.
அதுமட்டுமல்ல கொய்யாவில் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இது, நாம் உண்ணும் உணவில் இருந்து மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உடலுக்கு உதவுகிறது.
புற்றுநோய்
உடலில் உள்ள புற்றுநோய் செல்களை நடுநிலையாக்கவும் குறைக்கவும் செய்கிறது. இதனால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இன்றைய முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் அதிகரித்து வரும் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.
வயிறு சம்பந்தமான கோளாறுகள், வருவதையும் தடுக்கும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பழங்கள் சாப்பிடுவதில் இவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படும். ஆனால் கொய்யாப்பழம் சாப்பிடு பொழுது சர்க்கரை அளவு அதிகரிக்காது.
மாறாக கொய்யாவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதாலும் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயராமல் தடுக்கும் பண்பு கொண்டது.
உடல் குளிர்ச்சி
கனிந்த பழமாக இல்லாமல் செங்காயாக பார்த்து வாங்கி சாப்பிடுவது நல்லது. அதே போன்று தினமும் ஒரு கொய்யாப்பழத்தை, சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
மேலும் செரிமான உறுப்புகளையும் வலுப்படுத்தும் ஆற்றல் அது மட்டுமல்ல, வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் இவைகளையும் வலுப்படுத்தும்.ஜீரணக் கோளாறுகளையும் தடுக்கும்.
மலசிக்கல்
இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது. அதாவது இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இது மலத்தை இறுக விடாமல் இலகுவாக்குகிறது.
உண்மையில் ஒரு கொய்யாவில் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் பன்னெண்டு சதவீதம் உள்ளது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் கொய்யாப்பழ சாப்பிட்டு வந்தால் விரைவில் மலச்சிக்கல் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
இளமையான தோற்றம்
இதிலுள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி, லைகோபின் போன்ற சத்துக்கள், முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, முகப்பொலிவை அதிகப்படுத்துகிறது.
எனவே தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய முகம் எப்பொழுதும் இளமையாக இருக்கும். மேலும் உள் உறுப்புகளை ஆக்சிஜனேற்றம் எண்ணும் சிதைவுகளில் இருந்து காக்கிறது.
ரத்த அழுத்தம்
இதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவது மிகுந்த நன்மை தரும்.
இது நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
அதே போன்று இதில் உள்ள மக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கக்கூடியது.
கர்ப்பிணி பெண்கள்
இது, கர்ப்பிணி பெண்களுக்கும் நல்லது. அதாவது, இதில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி, கருவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
எந்த ஒரு நரம்பியல் கோளாறுகள் வருவதையும் தடுக்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மேலும் கொய்யாவில் லைகோபீன் அதிகம் உள்ளதால் மார்பக புற்றுநோய் செல்களை இது அழிக்கக்கூடியது.
கண் ஆரோக்கியம்
இதில் அதிகம் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கண்புரை மற்றும் கண் பார்வை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
தைராய்டு
கொய்யாப்பழத்தில் காப்பர் சத்து அதிகம் உள்ளது. இந்த காப்பர் சத்து மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் தன்மையை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
எனவே தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
வளரும் குழந்தைகள்
இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சி தருவதோடு எலும்புகளுக்கு பலத்தையும் தருகிறது.
முக்கிய குறிப்பு
முக்கியமாக கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே கொய்யாப் பழத்தை நன்றாக கழுவி, தோல் நீக்காமல் அப்படியே பற்களால் கடித்து சாப்பிடுவது நல்லது.
பொதுவாக, கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் செரிமான பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும். எனவே கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். மேலும் இருமல் இருக்கும் போதே சாப்பிட்டால் இருமல் மேலும் அதிகமாகும்.
அதே போன்று இதை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழி வகுக்கும்.
முக்கியமாக சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதை சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.
அதே போன்று கொய்யாவை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
உண்மையில் இயற்கை நம்முடைய ஆரோக்கியத்தை காக்க இது போன்ற எளிய உணவுகளை நமக்காக படைத்துள்ளது.
எனவே விலை அதிகம் உள்ள பழங்களை விட நூறு மடங்கு அதிக சத்துக்கள் கொண்ட இந்த கொய்யாப்பழத்தைப் பார்த்தால் உடனே வாங்கி சாப்பிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
9 Comments
Comments are closed.