கேழ்வரகு பயன்கள் | Kelvaragu Benefits in Tamil

 பயன்கள் | Kelvaragu Benefits in Tamil

கேழ்வரகு பயன்கள் Kelvaragu Benefits in Tamil

இன்றைய காலகட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலோனோர் உணவாக உட்கொள்வது அரிசி மற்றும் கோதுமை இவை இரண்டு மட்டுமே.

இதற்கு மாற்றாக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

கேழ்வரகு பழங்கால தமிழர்களின் மிகவும் முக்கியமான ஒரு பாரம்பரிய உணவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இது ஒரு புல் வகைத் தானியம் ஆகும் 2000 முதல் 4000 காலகட்டங்களில் கேழ்வரகு இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகின்றது.

கேழ்வரகு ஆனது கிழக்கு ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. இது குளிர்ந்த பிரதேசங்களில் வளரக் கூடிய தானியம்.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள்

 • புரதம்
 • கொழுப்பு சத்து
 • மாவு சத்து
 • சுண்ணாம்பு சத்து
 • நார்சத்து
 • இரும்பு சத்து
 • வைட்டமின் ஏ
 • தைமின்
 • அமினோ அமிலங்கள்

புரதசத்து

கேழ்வரகு தானியம் ஆனது அதிக அளவு புரதச்சத்து கொண்டதாகும். இது உடலின் ஆரோக்கியமான சீரான இயக்கத்திற்கும் பிராணவாயு உடலிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு உணவில் உள்ள புரத சத்து பயன்படுகிறது.

ஆகவே தினசரி சிறிதளவாவது கேழ்வரகை கொண்டு தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது

எலும்பு

கேழ்வரகில் நாம் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய அரிசி கோதுமை இவைகளை விட அதிக அளவு கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்தானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே கேழ்வரகு தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக எலும்புகள் வலுவாகும்.

வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம் ஆனது ஏற்படாமல் தடுக்கவல்லது.

கேழ்வரகு பயன்கள் Kelvaragu Benefits in Tamil

நார்சத்து

கேழ்வரகில் நார்ச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே நாம் உண்ணக்கூடிய உணவுகள் எளிதில் செரிமானம் ஆவதற்கு நார்ச் சத்து மிக முக்கியமான ஒன்று.

அஜீரணக் கோளாறுகள் அவதிப்படுபவர்கள் நார்ச்சத்து மிகுந்த கேழ்வரகை சாப்பிடலாம். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக செரிமான உறுப்புகளில் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும்.

ஒரு சில உணவு வகைகளில் நார்ச்சத்து மிகவும் குறைவான அளவில் இருக்கும் காரணத்தினால் எளிதில் செரிமானம் ஆவதில்லை, அப்படிப்பட்ட சமயங்களில் சிறிது அளவு கேழ்வரகு சாப்பிட்டு வருவதன் மூலம் உணவு எளிதில் செரிமானம் அடையும்.

குழந்தைகளின் ஆரோக்கியம்

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பெரும்பாலான கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.

இயற்கை உணவான கேள்வரகினை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதன் மூலம் உடல் வலுப்பெறும்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல்நலத்திற்கும் வேகமான வளர்ச்சிக்கும் கேழ்வரகு கொடுப்பது மிகவும் நல்லது.

கேழ்வரகு தினை மாவாக அரைத்து கஞ்சி வைத்தோ அல்லது தோசை சுட்டு குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம்.

உடல் எடை

பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளனர்.

அவர்கள் எளிதில் உடல் எடையை குறைக்க ஆங்கில மருந்துகளை நாடிச் சென்று ஒரு சில பக்க விளைவுகளுக்கு உள்ளாகின்றார்கள்.

ஆகவே எந்தவித பக்க விளைவும் அற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேழ்வரகின் சாப்பிடுவதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம்.

இதில் இருக்கக்கூடிய ட்ரிப்டோபான் கூடிய ஒரு அமிலம் பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது.

எனவே பசி உணர்வு குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

முதுமை தோற்றம்

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுகின்றது. இவர்கள் கேழ்வரகு கூல் செய்தோ அல்லது செய்தோ சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் மிதியோனின்,லைசின் அளவு அதிகரிக்கிறது.

இதன் மூலமாக தோல்களில் ஏற்படும் சுருக்கங்கள் படிப்படியாக குறைந்து சருமம் பளபளப்புடன் தோற்றமளிக்கும்.

கேழ்வரகு பயன்கள் Kelvaragu Benefits in Tamil

தாய்ப்பால்

கேழ்வரகு கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடிய ஒரு தானியம் ஆகும்.

இது தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க செய்கின்றது.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகபடியான ரத்தப் போக்கினை சரி செய்கிறது.மேலும் ஹீமோகுளோபின் அளவானது குறையாமல் சமன் செய்கிறது.

கேழ்வரகு பயன்கள் Kelvaragu Benefits in Tamil

உடல்சூடு

கோடை காலம் வந்து விட்டாலே வெப்பத்தின் அளவு சற்று அதிக அளவில் தான் இருக்கும்.

கோடைக்காலங்களில் உடலின் வெப்பநிலையானது அதிகரிக்கிறது. ஆகவே உடலில் வியர்வை மூலமாக உடலில் உள்ள ஒரு சில அத்தியாவசியமான சத்துக்கள் வெளியேறுகிறது.

இந்த சத்துக்கள் அனைத்தையும் சமன் செய்வதற்கு கேழ்வரகை கூல் செய்தோ அல்லது கலி போன்றோ சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலின் சூடு குறைந்து உடலில் உள்ள அனைத்து சத்துக்களும் சமநிலை ஆகும்.

சர்க்கரை

அரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அரிசியினை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுவார்கள்.

இதில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் தாராளமாக பயன்படுத்தலாம்.

கேழ்வரகானாது லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படக்கூடிய உணவு வகையினை சார்ந்தது.

அதாவது கேழ்வரகினால் ஆனா உணவுகளை உட்கொண்ட பின்னர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது உடனடியாக அதிகரிக்காது.

சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை கூழாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனை களியாக செய்தோ அல்லது ரொட்டியாக செய்தோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

கேழ்வரகு பயன்கள் Kelvaragu Benefits in Tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் கட்டாயம் நமது வலைத்தளத்தின்  Disclaimer பக்கத்தினை படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning