தினமும் வெந்நீர் குடிப்பதால் இவளவு பயன்கள் உள்ளதா
தினமும் வெந்நீர் குடிப்பதால் இவளவு பயன்கள் உள்ளதா வாருங்கள் பார்ப்போம்.
நோய் வராமல் தடுக்க,மலசிக்கலினால் அவதிப்படுபவர்களுக்கு,முடி வளர்ச்சிக்கு,வயதான தோற்றமும் வராமால் இருக்க,உடல் எடையை குறைக்க,பருக்கள் வராமல் இருக்க,உணவு செரிமானம் ஆக இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
எல்லாருக்கும் நன்றாக தெரிந்தது தான் என்னவென்றால் நமது உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் மட்டுமே நாம் வெந்நீரை குடிக்கின்றோம்.
ஆனால் வெந்நீரை தினமும் சில வேளைகளில் குடித்து வரும் பட்சத்தில் நமது உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
நோய் வராமல் தடுக்க
தினசரி காலையில் எழுந்த உடன் ஒரு இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் போதும். எளிதில் நமது உடலை எந்தவிதமான நோயும் வராது.
வெந்நீர் க்கு இணையான ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை.
சூடான வெந்நீர் நம்ம உடம்பிற்குள் போகும்போது நமது உடலில் இருந்து வியர்வை வெளியரும். அந்த வியர்வையில் நீர், உப்பு இது மாதிரியான கழிவுகள் அனைத்தும் உடலினை விட்டு வெளியேறி விடும்.
மலசிக்கலினால் அவதிப்படுபவர்களுக்கு
சிலர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் அதிகமான கழிவுப் பொருள் எல்லாம் நம்முடைய குடலிலேயே தங்கி விடுவதுதான்.
இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் இறகு போன்ற பிரச்சனைகள் எல்லாம் வரும்.
இவர்கள் தினமும் வெந்நீர் குடித்து வந்தால் இந்த மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
உடம்பில் உள்ள உணவுகள் எல்லாம் உடனே செரிமானம் ஆகி, அந்த கழிவுகள் எல்லாம் உடனே வெளியேறிவிடும்.
இரவு தூங்க போவதற்கு முன் வெந்நீர் குடித்து வந்தால் புளிச்ச ஏப்பம், வாயு பிடிப்பு இவை அனைத்தும் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சிக்கு
அடிக்கடி வெந்நீர் குடித்து வந்தால் தலை முடி நன்றாக வளரும். அதோடு முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பு ஆகி மேலும் முடி வளர்வதற்கு இது வழிவகுக்கும்.
உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெந்நீர்ரோடு சிறிது எலுமிச்சை சாரையும் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வருவதன் உடல் எடை குறையும்.
வெந்நீர் குடிக்கும் போது நம்ம குடல் பகுதியில் உள்ள பழைய என்சைம்கள் எல்லாம் வெளியேறி, புது அமிலங்கள் உற்பத்தி ஆகும்.
இதனால் அன்றைக்கு முழுக்க செரிமான பிரச்சனையே இருக்காது.
பருக்கள் வராமல் இருக்க
இளம் பருவத்தில் உள்ள ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அங்கே அங்கே பருக்கள் எல்லாம் வர ஆரம்பிக்கும்.
இந்த பருக்களை விரட்டுவதற்கு வெந்நீர் ஒரு அருமையான மருந்து.
மாதவிடாய் காலங்களில்
மாதவிடாய் ஏற்படுகின்ற நாட்களில் பெண்களுக்கு வலி அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் வெந்நீர் குடித்தார்கள் என்றால் அது வலியைக் குறைக்கும்.
உணவு செரிமானம் ஆக
சாப்பிடுவதற்கு நீங்கள் அரை மணி நேரத்திற்கு முன்னாடி வெந்நீர் கொடுத்தீர்கள் என்றால், அந்த சாப்பாடு நல்ல செரிமானம் ஆகும். எந்த நேரத்திலும் நீங்கள் வெந்நீர் குடிக்கலாம்.
இருந்தாலும், அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கிறது ரொம்ப நல்லது.
வயதான தோற்றமும் வராமால் இருக்க
வெந்நீர் குடிப்பதனால் நரம்பின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். நம் உடம்பில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் இந்த வெந்நீர் வெளியேற்றி விடுவதனால் நமக்கு வயதான தோற்றமும் வராது.
வெந்நீர் குடித்தோம் என்றால், நாம் இரத்த குழாய்கள் விரிவடையும்.
இதனால் உடல் ,முழுவதும் இரத்த ஓட்டம் சீரா இருக்கும்.
உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸ்சிஜன் இவை அனைத்தும் சரியாக கிடைக்கும். இதனால் நம்ம உடம்புக்கு எந்தவிதமான நோயும் வராது.
சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக என்ன பலகாரம், இனிப்பு இதெல்லாம் சாப்பிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நெஞ்சுக் கரிக்க ஆரம்பித்துவிடும்.
இது மாதிரி சமயங்களில் இரண்டு டம்ளர் வெந்நீரை குடித்துப் பாருங்கள். அந்த நெஞ்சு கரிசல் எல்லாம் உடனே போய் விடும்.
தினமும் காலையில் வெண்ணீர் குடிப்பதனால் இன்னும் பல நன்மைகள் உள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். மன அழுத்தம் குறையும்.சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் வராது.
சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை அனைத்தும் பலம் பெரும். இருமல், சளி வரும் பொழுது சூடாக வெந்நீர் குடிக்க வேண்டும்.
அவ்வாறு குடிப்பதனால் வெந்நீர் சளியை கெட்டியாக்கி உடம்பில் இருந்து வெளியில் தள்ளுகிறது.
குளிர் காலத்தில் நம் மூக்கு, தொண்டை இவ்விடங்களில் எதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் வெந்நீரை குடித்தீர்கள் என்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
உணவில் இடையூறாக இருக்கும் என நினைத்து நாம் ஒதுக்கும் கருவேப்பிலை, மருத்துவ குணங்கள்
இதனையும் படிக்கலாமே
- பாதாமில் உள்ள சத்துக்கள்
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- கேழ்வரகு பயன்கள் | Kelvaragu Benefits in Tamil
- பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil
- பயத்தங்காய் மருத்துவ பயன்கள் | Thatta Payaru in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
4 Comments
Comments are closed.