உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
உளர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி பார்ப்போம் .
உளர் திராட்சை ஏராளமான நன்மைகளை தன்மை கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
உலர் திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை மற்றும் கோல்டன் ஆகிய மூன்று நிறங்களில் நம் அன்றாட வாழ்வில் கிடக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி மற்றும் சி போலிக் ஆசிட் இரும்புச்சத்து, பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இந்த உலர் திராட்சையினை , எந்த ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எந்தவித அச்சமும் இன்றி சாப்பிடலாம். குறிப்பாக, உளர் திராட்சையினை நீரில் ஊற வைத்தோ அல்லது இதைனை நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிடுவதன் மூலமாக பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
இரத்த சோகை உள்ளவர்கள் இதனை தினமும் சாப்பிட்டு வந்தாலோ, அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உலர் திராட்சை உட்கொண்டு வந்தாலும், இ ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே, அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கி உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்l குறையும்.
சிறுநீரக பாதையில் நோய் தொற்று எதாவது ஏற்பட்டு இருந்தால், அதைனை குணமாக்க, ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத்தான். அது என்னவெனில் இரவில் நாம் தூங்கும் முன்னர் ஒரு கப் நீரில் ஒரு பத்து உலர் திராட்சையினை ஊறவைத்து அதனை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் இருபத்தைந்து உலர் திராட்சையை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து நாள் முழுவதும் அந்த நீரை குடித்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தா உடல் வெப்பம் தணியும்.
மலச்சிக்கலால் சிரமப்படுபவர்கள் ஒரு கப் நீரில் உளர் திராட்சையினை போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி மசித்து, அதில் தேனை கலந்து தினசரி இரண்டு வேளை குடித்து வருவதால் , மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
கர்ப்ப காலத்தில், இப்பிரச்சனை, கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே, கர்ப்பிணிகளும், இந்த முறையைப் பின்பற்றலாம். மலட்டுதன்மை குறைபாட்டினால் கஷ்டப்படுபவர்கள், தினசரி உலர் திராட்சையை ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் தடுக்க , உலர் திராட்சையினை நம் அன்றாடம் சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில், இது நம் எலும்பின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவைபடுகின்ற கால்சியம் வளமாக இருக்கும்.
உளர் திராட்சை பற்றிய ஆங்கில வலைபதிப்பு
உளர் திராட்சை பற்றிய காணொளி
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம்
சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள்
இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.