பேரீச்சம் பழத்தின் நன்மைகள் | Dates Benefits in Tamil
பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடு பழக்கத்தைக் கொண்ட மக்கள் எந்த வித நோயாலும் பாதிக்கப்படுவதில்லை.
நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை.
உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவாகவும் உடலின் பல குறைகளை நீக்கவும் உதவும் ஒரு அருமையான பழம் பேரிச்சம்பழம். இந்த பேரிச்சம் பழத்தை உண்பதால் ஏற்படும், நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் நாம பார்க்கலாம்.
எலும்பு
பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் குறைக்கிறது.
மேலும், எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது பேரீச்சம் பழம். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கண்
ஒவ்வொருவருக்கும் கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டியது மிக அவசியம். உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண் பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றது.
தினந்தோறும் பேரிச்சம்பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வைத்திறன் மேம்பட்டு கண்புரை போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
இரும்புசத்து
பேரீச்சம் பழம், இரும்பு சத்து, அதிகம் நிறைந்தது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
கருவுற்றிருக்கும் பெண்கள், பேரிச்சம் பழங்களை, அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரீச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்பு வலுப்பெற்று ஆண்மை குறைபாடு நீங்கும்.
ஒவ்வாமை
நாம் சில குறிப்பிட்ட பொருட்களை சாப்பிடும் போதோ, சுவாசிக்கும் போதோ உடல் அதை ஏற்க முடியாமல், எதிர்வினை ஆற்றுவது ஒவ்வாமை எனப்படும்.
இந்த ஒவ்வாமை, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பேரீச்சம் பழங்களை அடிக்கடி அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை
மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் இயல்பான எடை குறைவால் உடல் எடை கொண்டவர்கள், தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து அதை சூடான பாலில் கலந்து இரண்டு வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும்.நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.
போதை பழக்கம்
இன்று பலரும், புகையிலை, சிகரெட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து, உடல் மற்றும், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம் கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். மேலும், உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
வயிற்றுப் போக்கு
கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும்.
இந்த வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளையும் சில பேரீச்சம் பழங்களை, சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
புற்றுநோய்
பேரீச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்க கூடிய சக்திகள் அதிகமாக உள்ளது. பேரிச்சம்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும், பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக, பல மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
மலசிக்கல்
மாமிசம் மாவுப் பொருளால் ஆன உணவுகளை அதிகம் உண்பது அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ஆகியவையால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளையும் உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
இதனையும் படிக்கலாமே
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்.
5 Comments
Comments are closed.