சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி | How to Identify Pure Honey in Tamil

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி | How to Identify Pure Honey in Tamil

பொதுவாக யாராவது இனிமையாக பேசினால் நீங்கள் தேன் போன்று இனிமையா பேசுறீங்க என்போம். உண்மையில் தேனில் இனிப்பு தன்மை மட்டுமா உள்ளது? ஏராளமான மருத்துவ நன்மைகளும் கொட்டிக் கிடக்கிறது.

சொல்லப்போனால் ஒரு பூச்சி தயாரித்து மனிதன் சாப்பிடும் அருமையான உணவு இந்த தேன். பொதுவாக, தேனீக்கள் பூக்களின் இருந்து நேரடியாக தேனை உறிஞ்சி வந்து தேன் கூட்டில் சேகரித்து வைக்கிறது என்றுதான் நாம் நினைப்போம்.

ஆனால் உண்மை என்னவென்றால் பூக்களில் இருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு தேனியின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒருவித திரவமே இந்த தேன். இதுதான் உண்மை.

உண்மையில் இதன் ஒவ்வொரு நன்மைகளும் தெரிந்தால் நமக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்த வகையில் தேனை எப்படி பயன்படுத்த வேண்டும்? எதனோடு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? கலப்பட தேனை துல்லியமாக எப்படி கண்டுபிடிப்பது? இது போன்ற தேன் பற்றிய உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வினை இங்கு பார்ப்போம்.

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி

அந்த காலம் முதலே பல உடல்நல பிரச்சனைகளுக்கு தேனை பயன்படுத்தி வந்துள்ளார்கள். இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இல்லை என்றே சொல்லலாம்.

அதாவது இருநூறு கிராம் தேனில் ஒண்ணே கால் லிட்டர் பால் மற்றும் ஒன்றரை கிலோ இறைச்சி இவற்றில் எத்தனை சத்துகள் உள்ளதோ அதற்கு இணையான சத்துக்கள் தேனில் உள்ளன.

இது அறிவியல் பூர்வமான உண்மை என்றும் கூறப்படுகிறது. இதை சிறிய குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

நோய்வாய்ப்பட்டவர்களும் கூட தேன் சாப்பிடலாம். காலை இரவு படுக்கும் முன்பு என்று, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். முக்கியமாக சில உணவுகளுடன் கலந்து சாப்பிட்டால், குறிப்பிட்ட ஆரோக்கிய பலன்களை பெற முடியும். அவைகள் என்ன? என்று இப்பொழுது பார்ப்போம்.

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி?

சுத்தமான தேனை, காகிதத்தில் ஊற்றினால் ஊராது. மேலே அப்படியே நிற்கும். முத்து போல உருண்டு நகரும். ஆனால் கலப்படத் தேன் என்றால், காகிதம் உறிஞ்சி விடும். அதே போன்று சுத்தமான தேனை தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போன்று அடியில் போய்விடும்.

ஆனால், கலப்பட தேன் என்றால் தண்ணீரில் உடனே கரைந்து விடும். இதன் மூலம் உண்மையான தேனை கண்டு பிடிக்கலாம்.

மாதுளம்பழமும் தேனும்

மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊரும். ரத்தமும் சுத்தமாகும். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். எலுமிச்சை பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குறையும். அதே போன்று, உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தேனை, வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் பருத்தவுடன் இளைக்கும்.

uses of honey in tamil

வெங்காய சாறும் தேனும்

வெங்காய சாற்றுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவடையும். இரவில் தூங்கும் முன்பு, சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும். ஆண், பெண் மலட்டுத் தன்மையும் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரில், தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சல்ல இருந்து, நிரந்த விடுதல கிடைக்கும். மேலும் இது, தொண்டையில் ஏற்படும் புண் மற்றும் வறட்டு இருமலையும் தடுக்கும்.

தேன் கலந்த நீரில் நொதிகள் விட்டமின்கள் மற்றும் கனிம சத்து வளமாக இருக்கும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாக்கும்.

பேரீச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்பு வலிமையாகும். Hemoglobin எண்ணிக்கை அதிகரிக்கும்.

honey weight loss tips in tamil

அல்சர்

சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர் குறையும்

குழந்தைகள் நலம்

இரவில் படுக்கையில் சிறுநீர் போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு தேக்கரண்டி தேன் கொடுத்தால் சில நாட்களில் இந்த பிரச்சனை சரியாகும்.

குழந்தைகளுக்கு இரவில் படுக்கும் முன்பு தினமும் பாலில், தேன் கலந்து கொடுத்தால், கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை, உடலுக்கு கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி

ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்கு கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் குணம் தெரியும்.

honey benefits in tamil

ஆஸ்துமா

அரை தேக்கரண்டி மிளகுப் பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட இருமலாக இருந்தாலும் கட்டுப்படும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும். இதனுடன், இஞ்சி சாரும் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் உட்பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கல்லீரல்

கல்லீரல் இரவு நேரத்தில் செயல்படுவதற்கு,போதுமான எரிபொருள் தேவை. இந்த எரிபொருள் தேனிலிருந்து அதிகம் கிடைக்கும்.

கொழுப்பு

முகத்தில் வறட்சி, அதிக கொழுப்பு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும், தேன் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில், தேனை கலந்து சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்துவிடும்.

முக்கியமாக தேன் நமது உடலில் உள்ள நல்ல கொலஸ்டராலின் அளவை, அதிகரித்து, கெட்ட கொலஸ்டராலின் அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு இதய நோயின் அபாயம் குறையும்.

நச்சுக்கள்

தேனை, வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு குடித்தால் அது செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.

மேலும் தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும், கிருமிகளையும், அழிக்க உதவும்.

honey benefits in tamil language

முக்கிய குறிப்பு

மூன்று மாதம், தொடர்ந்து தேனை அருந்தி வந்தால் மூட்டு வலி குணமாகும். மற்று, சிறுநீரக நோய் மற்றும் கண் சம்பந்தமான நோய்கள், குணமாகும்.

மிகவும் சூடான தண்ணீரில் தேனை கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள, மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காது.

எனவே வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அடுத்து சர்க்கரை நோயாளிகள், தேன் சாப்பிடலாமா? உண்மையில் சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு ஏறாது.

அதே போன்று வெறும் தேனை, அப்படியே குடிக்கக் கூடாது

தேனை ஒரு சிறிய தேக்கரண்டியில் எடுத்து நன்றாக நாவில் படும்படி வைத்து, உமிழ் நீருடன், கலந்து சாப்பிட வேண்டும்.

நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட insulin சுரக்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning