கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil

கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil

கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil  இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் கண்ணாடி அணிந்தே காணப்படுகிறார்கள். LKG படிக்கும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த கண் பார்வை குறைபாடு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.

கண் பார்வை குறைபாடு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் உணவு முறையும் முக்கிய காரணம்.

அந்த வகையில் கண் பார்வை குறைபாடு நீங்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், சர்க்கரை நோயாளிகள் கண் பார்வையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? மற்றும் அனைத்து விதமான குறைபாடுகளையும் நீக்கும் சில பயிற்சிகள் பற்றியும் இங்கே பார்ப்போம்.

இவற்றை கடைபிடித்தாலே போதும், கண்ணாடி அணிய தேவையே இருக்காது.

பார்வை குறைபாடு, கண் மங்கலாக தெரிவது, கண்களில் வலி, கண் பாதிப்பால் வரும், தலை வலி மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாட்டை போக்க சில உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்து வர வேண்டும்.

அது மட்டுமல்ல சில வீட்டு வைத்தியம் மூலமும் இதற்கு தீர்வு காண முடியும். அதோடு இங்கே பார்க்கப்போகும் பயிற்சிகளையும் செய்தால் எந்தவித கண்பார்வை குறைபாடுகளும் நீங்கும்.

கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil

கேரட்

கேரட்டில் கண் பார்வை திறனை அதிகரிக்கும் சத்தான வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு சிறந்த உணவு.

வாரத்திற்கு மூன்று முறை இந்த கேரட்டை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் ஏற்படாது. அதே போன்று கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை பிரச்சனை உங்களுக்கு இருந்தால் தினமும் ஒரு கேரட்டை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் நன்மைகள் தீமைகள்

 

பப்பாளி பழம்

கண்பார்வை சிதைவு காரணமாக கண் பார்வை வயதுக்கு ஏற்ப பலவீனம் அடைகிறது. அந்த வகையில் பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் இது கண்பார்வைத் திறனை,மேம்படுத்துகிறது.

முருங்கைப் பூ

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பசும்பாலில் முருங்கைப் பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை, மாலை என, இரண்டு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும்.

இதன் மூலமும் கண் பார்வை தெளிவு பெறும்.

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits

மீன்

மீன்களில் குறிப்பாக காலா மீன், கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள் வயதான பின் ஏற்படும் பார்வை பிரச்சனைகளை சரி செய்கிறது.

இந்த மீன்களில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் இதயத்துக்கு மட்டுமல்ல மூளைக்கும், கண்களுக்கும் மிக மிக நல்லது.

எனவே அசைவம் சாப்பிடுபவர்கள் இந்த வகை மீன்களை சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவாகும். மேலும் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் சாப்பிட்டு வரலாம்.

கருவாடு வகைகள்

முட்டை

முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும். அது மட்டும் இல்லாமல் இது கண்புரை உண்டாவதையும் தடுக்கும்.

காரணம் இதிலுள்ள லுடின் மற்றும் வைட்டமின் ஏ உள்பட பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் அதிகரிக்கிறது.

கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil

ஆளி விதை

மீன்களில் ஒமேகா மூன்று உள்ளது போன்றே ஆளி விதையிலும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன.

இதை வறுத்து பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். அல்லது முளைகட்டவைத்தும் சாப்பிடலாம்.

இதனால் கண்களில் ஏற்படும் வறட்சியை குறைக்கும். இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் கண் நரம்புகள் கண் நோய்களுள் ஒன்றான தசை திசு சிதைவு ஏற்படும் அபாயத்தை குறைக்கக்கூடியது.

ஆளி விதை பயன்கள்

பொன்னாங்கண்ணிக்கீரை

பொன்னாங்கண்ணிக்கீரையை கூட்டு, பொரியல், துவையல் என்று நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத் திறனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்

பெரிய நெல்லிக்காய்

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

அதே போன்று இரவில் படுக்கும் முன்பு ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கி விட்டு நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, தினமும் குடித்து வந்தால் கண் பார்வை மேம்படும்.

தண்ணீர்

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் வேண்டும். இதனால் உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையிலிருந்து பாதுகாக்கும்.

கண் பார்வைக்கு சிறந்த உணவு | Best Food For Eyes in Tamil

கண் பார்வை தெளிவாக வீட்டு வைத்தியம்

சீரகம், கொத்தமல்லி விதை இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக அரைத்து சலித்து வைத்துக்கொண்டு இதனோடு சிறிது இடித்த வெல்லத்தையும் சேர்த்து தினமும் இரண்டு வேளையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.

பார்வைத் திறனை அதிகரிக்கும் பயிற்சிகள்

உண்மையில் இந்த பயிற்சிகளை செய்து வந்தாலே கண் பார்வை சம்பந்தமான எந்த வித குறைபாடாக இருந்தாலும் நீங்கி விடும்.

முதல் பயிற்சி

வெண்மையான சுவற்றைப் பார்த்து தலையை அசைக்காமல், திருப்பாமல், கண்களால் எட்டுப்பட வேண்டும்.

இது போன்று ஐந்து முறை செய்து வந்தால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனை, சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாம் பயிற்சி

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை வைத்துக்கொண்டு அதில் கண்களை வைத்து பத்து முறை கண் சிமிட்ட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது கண்ணில் உள்ள தூசு அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்து வருவது நல்லது.

மூன்றாம் பயிற்சி

ஒரு நாற்காலியில் வசதியாக நேராக உட்கார்ந்து உள்ளங்கையை தேய்த்து உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது கருவிழிகளின் மேல் அதிக அழுத்தம் வேண்டாம். மூக்கையும் மூடிக் கொள்ளும்படியாக முக்கோணவாக்கில் கைகள் அமைய வேண்டும்.

கண் பார்வைக்கு சிறந்த உணவு Best Food For Eyes in Tamil

நான்காம் பயிற்சி

மெழுகுவர்த்தியின் சுடரை கண்களின் மட்டத்திற்கு நேரே வைத்து மூன்றடி தூரத்தில் இருந்து நூறு எண்ணும் வரை பார்க்க வேண்டும். அபப்டி செய்தால் பார்வை குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

ஐந்தாம் பயிற்சி

அமைதியாக உட்கார்ந்து கண்களை இடதுபுறமாகவும், பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்ட வேண்டும்.

அதே போன்று தலையை அசைக்காமல் மேலும், கீழுமாக பார்க்க வேண்டும். இப்படி எட்டு முறை செய்தல் வேண்டும்.

பின்னர் இடது, வலது என அசைக்க வேண்டும். இதையும் எட்டு முறை செய்தல் வேண்டும். இப்படி தினமும் பயிற்சி செய்து வந்தால் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு

முக்கியமாக TV பார்க்கும் பொழுது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்குப்பின் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணினியி ல் வேலை பார்க்கும் பொழுது, சிறு சிறு இடைவெளிகளை எடுத்துக்கொண்டு, பச்சை நிற செடி, கொடிகளை பார்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளின் கட்டுப்பாடு இல்லாத ரத்த சர்க்கரை அளவுகள் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் இருக்கும் ஒளி உணர்திறன் திசுக்களுக்கு வழங்கப்படும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும்.

இது விழித்திரையில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் ரத்தக்குழாய்கள் பலமிழந்து ரத்தப்போக்கு, நீர்க்கட்டி ஏற்படும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கண் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

அதே போன்று சர்க்கரை நோய் உள்ளவர்கள் இங்கே பார்த்த கண் பயிற்சிகளை கட்டாயம் செய்து வருவது முக்கியம்.

இதனால் அவர்களின் கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். உண்மையில் இங்கே சொன்னவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய இருக்காது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning