பச்சை பட்டாணி பயன்கள் | Pachai Pattani in Tamil

பச்சை பட்டாணி பயன்கள் | Pachai Pattani in Tamil

பச்சை பட்டாணி, fabaci குடும்பத்த சேர்ந்த, ஒரு கொடி வகை தாவரம் ஆகும். இது தோட்டங்களில் சாதாரணமாக வளர்க்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு வருகிறது.

கனடா நாடுதான் பட்டாணி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக பிரான்ஸ், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் வருகின்றன. .

பச்சை பட்டாணி எப்படி இருக்கும்?

பச்சை பட்டாணி இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பச்சை பட்டாணி இனிப்பானது. காய்ந்த பிறகு இளம் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும் இனிப்பு சுவையும் குறைந்துவிடும்.

peas in tamil

நார்சத்து

பட்டாணியை வேக வைப்பதற்கு முன் கொஞ்ச நேரம் ஊற வைத்தாலே போதும். பட்டாணியில் கரையும் நார்ச்சத்து கரையாத நார்ச்சத்து அதிகம் உண்டு.

ஒரு கப் பட்டாணியில் பத்தொன்பது கிராம் நார்ச்சத்து இருக்கும். நார்ச்சத்து குடலைத் தூய்மைப்படுத்தக் கூடியது.

பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்

ஒரு கப் பட்டாணியில் 16 கிராம் புரத சத்து இருக்கிறது. சைவர்களுக்கு புரதம் ஒரு வரப்பிரசாதம். பட்டாணியில் கால்சியம், இரும்புச் சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ் , மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் உண்டு.

பட்டாணியில் வைட்டமின் சத்துக்களும் அதிகம். வைட்டமின் A, vitamin E, vitamin K,நியாசின், தையமின் போன்றவை உள்ளன.

pattani paruppu in tamil

கொழுப்பு

பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு இதில் உள்ள phytosterols உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக்கூடியது.

எலும்பு வலுவிழப்பு நோயை குறைக்கும் நரம்பு சிதைவை குறைத்து alzheimer நோயையும் கட்டுப்படுத்தும்.

உடல் எடை

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் மேம்படுத்துவதாலும் விரைவாக சாப்பிட்ட நிறைவை தருவதாலும் எடை குறைப்புக்கும் பச்சை பட்டாணி உதவும்.

pattani in tamil

இரும்பு சத்து

இரும்புச் சத்து குறைபாடு உடையவர்களுக்கு இது நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். அதனால், குழந்தைகள் கருவுற்ற தாய்மார்கள் மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.

வைட்டமின் சி சத்து

மேலும், இதில் vitamin C மிக அதிகம். ஒரு நாளைக்குத் தேவையான, vitamin Cயை இதிலிருந்தே பெறலாம்.

Vitamin C, Ascarbic அமிலத்தைத் தருகிறது. நீரில் கரையக்கூடிய இந்த வேதிப்பொருள், நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடக் கூடியது. நோய்த் தடுப்பாற்றலை பெருக்கும்.

Vitamin K, எலும்பை வலுப்படுத்தி எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு நன்மை தரும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம், பீட்டா கரோட்டின் பட்டாணியில் நிறைந்து கிடக்கின்றன.

நீரிழிவு நோய்

ரத்த சர்க்கரை அளவை சீர்படுத்தும் என்பதால், நீரிழிவு நோயை குறைக்கும் தன்மையும் உண்டு.

green peas in tamil

முக்கிய குறிப்பு

இதை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலும் சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி தான் கிடைக்கும். இதை தவிர்ப்பது நல்லது.

பட்டாணியை சிறிது நேரம் ஊற வைத்தால் நீர் பச்சை நிறமாக மாறுவதைக் கொண்டு சாயம் சேர்க்கப்பட்டதை கண்டு பிடிக்கலாம்.

பச்சைப் பட்டாணிகள் அதிகமாக கிடைக்கும் நாட்களில் வாங்கி உங்கள் வீட்டிலேயே நீங்கள் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். அதனை பின்னர் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning