நெல்லிக்காய் நன்மைகள் | Nellikai Benefits in Tamil

நெல்லிக்காய் நன்மைகள் | Nellikai Benefits in Tamil

 

அறுசுவையில் உப்பு சுவையை தவிர மற்ற ஐந்து சுவையும் நெல்லிக்காயில் அடங்கி உள்ளது.

இரத்த சோகை

நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமா இருக்கும் காரணத்தினால் இரத்த சோகைக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.

எலும்பு சிதைவு

நெல்லிக்காயில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் தாதுக்கள் எலும்பின் அடர்த்தியை மேம்படுத்துவதால் எலும்பு சிதைவு நோய்க்கு இது ஒரு நல்ல பலனை தருது. சி

பித்தம்

பலருக்கு உடலில் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், உடல் சூடு, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
இந்த பிரட்சனை உள்ளவர்கள் நூறு மில்லி நீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு சேர்த்து குடிக்கவும்.

கெட்ட கொழுப்புகள்

குடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய நூறு மில்லி சுடு நீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.

உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

மேலும் தோளில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

பெண்களுக்கு ஏற்றது

பெண்களுக்கு உடல் சூடு காரணமா ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சினைப்பை கட்டி தொந்தரவு போன்றவற்றிற்கு நெல்லிக்காயை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும்.

தலைமுடி

நெல்லிக்காய் தலைமுடி உதிர்தலை குறைக்கிறது. தலைமுடி கருமையாக வளரவும் பொடுகை நீக்கவும் உதவுகிறது.

சூடு

நூறு கிராம் காய்ந்த நெல்லிக்காயை இருநூறு மில்லி மோரில் இரவு தூங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் ஊறிய பின்பு குளிப்பதன் மூலமாக கண் சூடு நீங்கும்.

பார்வை தெளிவாகும், முடி உதிர்தல் நிற்கும், பொடுகு பிரட்சனை சரியாகும் மேலும் மனஅழுத்தம், தூக்கமின்மை, தலைவலியும் நீங்கும்.

இதை வாரம் ஒருமுறை செய்து குளிக்கலாம்.

சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்து. சர்க்கரை நோய்க்கு முழுமையான நிவாரணம் தரக்கூடியது.

குழந்தைகளுக்கு ஏற்றது

இது குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல், ஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் நெல்லிக்காய் ஒரு நல்ல மருந்து.

நெல்லிக்காய் உடலில் உள்ள கழிவுகளை சிறந்த முறையில வெளியேற்றுகிறது. முதலில் பிராண வாயுவை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

2 Comments

  1. Pingback: slot gacor
  2. Pingback: sex women

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning