மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்

வெந்தயம் மருத்துவகுணம்

நமது நாட்டின் பூர்வீக மூலிகைகள் பல நம்ம அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் வெந்தயம். இந்த வெந்தயம் பல வகையான உடல் நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வாக விளங்குகிறது. அது என்னென்ன என்பதை பற்றி இன்று அறிந்துகொள்ளலாம்.

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் அடிக்கடி உணவில் வெந்தயத்தினை எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

சரும நோய்கள்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் நமது தோலில் கிருமித் தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் கொப்பளங்கள் புண் போன்றவை ஏற்படுகின்றது. அதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரிமஞ்சள் இணை கலந்து இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். அதனை அரிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்ட இடத்தில்தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர சரும நோய்கள் குணமடையும்.

செரிமானம்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் ஒரு மனிதனுக்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை செரிமானம் செய்யக்கூடிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் ஏற்படாமல் நலமாக வாழ முடியும்.

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் நாம் அன்றாடம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை நன்றாக அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர செரிமான பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

நீரிழிவு நோய்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் கணையத்தில் இன்சுலின் என்கின்ற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையி ணை கட்டுக்குள் கொண்டுவரும். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்கிறது.

சிறுநீரக கற்கள்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

வயிற்றுப் புண்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவு குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேக வைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வரலாம். இதனால் உடல் பலம் பெறும் வயிற்றுப் புண் குணமடையும்.

தலை முடி

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் தலைமுடி, உச்சந்தலை வெளிப்புற சீதோஷங்களிலிருந்து காக்கிறது ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்ந்து ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.

தாய்ப்பால்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் புதியதாக குழந்தை பெற்ற  தாய்மார்கள்   சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினைகள் உள்ளன. 

இதற்கு அந்த பெண்கள் தினமும் வெந்தயத்தை இரண்டு வேளை உணவில் உட்கொண்டுவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்க வல்லது.

புற்றுநோய்

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிரத் தன்மையும் குறையும்.

மாதவிடாய்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானது தானே! ஆனால் சில பெண்களுக்கு மட்டும் வலி நிறைந்ததாக மாறி விடுகிறது.  இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரையும் அருந்தி வர அந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

வெந்தயம் தீமைகள்

கர்பமாக உள்ள பெண்கள் அதிக அளவில் வெந்தயம் சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள டெரடோ ஜெனிக் திறனானது பிறப்பு குறை பாடுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறப்படுகின்றது. 

ஆகவே கர்பமாக உள்ள பெண்கள் கண்டிப்பாக சேர்க்க கூடாது. 

இரத்தப்போக்கு பிரட்சனை உள்ளவர்களுக்கு இந்த வெந்தயம் தீங்கு தரக்கூடியது.

 வெந்தயம் ஒரு சிலருக்கு ஒவ்வாமயயை ஏற்படுத்தும்.

ஒவ்வாமைக்கு அறிகுறி முகத்தில் வீக்கம்,மார்புவலி, உணவு விழுங்கும் பொழுது சிரமம் ஏற்படுதல் போன்றவை ஆகும்.

எந்த உணவாக இருப்பினும் வரையறுக்கபட்ட விகிதத்தில் சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் நலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

வெந்தயத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவதனால் நெஞ்செரிச்சல்,அஜீரணம், வாயு,வீக்கம்,சிறுநீர் துர்நாற்றம் இது போன்ற பிரட்சனைகள் ஏற்படும்.  

இதனையும் படிக்கலாமே

வெந்தயத்தினை பற்றிய காணொளியை காண இங்கே சொடுக்கவும்.

காணொளி

வெந்தயத்தினை பற்றி ஆங்கிலத்தில் படிக்க கீழே சொடுக்கவும்.

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம்
சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள்
இருந்தால்
contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contuct Us

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning