காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil

காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil

பொதுவாக நிறைய பேர் தங்கள் உணவுகளில் பயிறு வகைகளை அவ்வளவாக சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் பயறு வகைகளில் அதிக மருத்துவ நன்மைகள் கொட்டிக் கிடப்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

குழந்தைகள் முதல் டீனேஜ் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவரும் ஏதாவது ஒரு பயிறு வகையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

நன்றாக முதிர்ந்த பயிர் வகைகளில் அதிக சத்துக்கள் இருக்கும். அந்த வகையில் வியக்கத்தக்க வகையில் சத்துக்கள் கொண்ட காராமணி பயிரைப் பற்றி பார்ப்போம். இதற்கு தட்டைப் பயிர் என்ற வேறு பெயரும் உண்டு.

இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்க வல்லது.

karamani in tamil

எலும்புகளின் வலிமை

காராமணி பயிரில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை அதிகம் உள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிடு பொழுது எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

செரிமான பிரச்சனை

அதே போன்று, இது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளதால் செரிமானத் தன்மை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

இதய ஆரோக்கியம்

காராமணியில் காணப்படும் வைட்டமின் பி இதயத்தின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த வைட்டமின் இதய செயலிழப்பை தடை செய்கிறது. மேலும் இப்பயரில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள், இதயத்தை நன்றாக செயல்பட உதவுகிறது.

சிவப்பு காராமணி பயன்கள்

கொலஸ்ட்ரால்

இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடை செய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் உதவுகிறது. மேலும், குறைந்த அளவு எரிசக்தியையும், கொலஸ்ட்ராலையும் கொண்டுள்ளது.

உடல் எடை குறைய

காராமணியில் கலோரிகளும், கொழுப்புகளும் குறைவாகவே உள்ளது. மேலும், நார்ச்சத்து வளமையாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதற்குக் காரணம் இதனை உட்கொள்ளும் பொழுது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கும்.இதனால் அடிக்கடி நொறுக்கி தீனியை மனம் நாடாது.

சரும ஆரோக்கியம்

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் சி, புரதம் ஆகியவை சரும மேம்பாட்டிற்கு உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் சருமம் முதிர்வதைத் தடை செய்கிறது. சரும எரிச்சல் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

இதில் காணப்படும் புரதச் சத்தானது பழுதான செல்களை சரி செய்வதோடு திசுக்கள் வளரவும் உதவுகிறது.

மேலும், இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சரும இளமையை பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணும் பொழுது இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. மற்ற பயிறு வகைகளில் உள்ளத விட தட்டைப் பயிறுகளில் உள்ள கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளது.

மேலும்

காராமணியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள வெளியேற்ற உதவுகிறது.

புற்றுநோய் ஏற்படாத வண்ணம் உடலைப் பாதுகாக்கிறது.

அதே போன்று ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை தடை இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.

காராமணியில் மெக்னீசியம் குறிப்பிட்ட அளவு உள்ளதால் உடல் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகுக்கிறது.

காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை தடை செய்கிறது.

காராமணி பயன்கள்

முக்கிய குறிப்பு

அதிக அளவு காராமணியை உட்கொள்ளும் பொழுது அது வாய்வை பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிடு பொழுது பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதே நேரத்தில், இதை முறையாக பயன்படுத்தும் பொழுது உடலுக்கு மிகுந்த வலிமையை கொடுக்கக்கூடியது. எனவே தினமும் ஐம்பது கிராம் அளவு சாப்பிடலாம்.

தனியாக வேகவைத்தும், குழம்பு, பொரியல், அவியல், துவையல், சூப்கள், சாலடுகள் போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.

முக்கியமாக இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடு பொழுது அதிக புரதத்தை உடலில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக விலை கொடுத்து வாங்கும் உணவுகளில்தான் சத்துக்கள் அதிகம் என்பதல்ல. இது போன்ற விலை மலிவான உணவுப் பொருட்களிலும் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, நீங்களும் காராமணிப் பயிரை, உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

Related Posts

8 Comments

  1. Pingback: naga356
  2. Pingback: hostel bangkok
  3. Pingback: Technology

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning