நீ எல்லாம் எனக்கு ஒரு சுண்டக்காய் மாதிரி என்று ஒரு சிலர் கேலியாக சொல்வதை பார்த்திருப்பீர்கள்.
காரணம் இதன் அளவில் மிகச்சிறியது என்பதால் அவ்வாறு கிண்டல் செய்வார்கள். உண்மையில் இது அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மிரள வைக்கும் மருத்துவ நன்மைகள் தெரிந்தால் நீங்களும் கண்டிப்பாக வியப்படைவீர்கள்.
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் பழைய சாதத்திற்கு, சுண்டைக்காய் வத்தல் வைத்துதான் சாப்பிடுவார்கள்.
அதன் ருசியும் தனியாக இருக்கும். மருத்துவ குணமும் மிக மிக அதிகம். அதனால் தான் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள்.
சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம். பல மருந்து தயாரிபிற்கும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
இதில் வைடமன் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிக அளவிலும், தயாமின், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.
சுண்டக்காய் பயன்கள்
வயிறு சுத்தமாக
ண்டக்காயினை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும்.
பொதுவாக நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்கக்கூடிய ஒரு உறுப்பாகும்.
ஆனால் உடலுக்கு கெடுதல் தரும் நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும், அதிலும் குழந்தைகள் சாப்பிடுவதாலும் அவர்களின் வயிற்றில் பூச்சித்தொல்லை ஏற்படுகிறது.
இதற்கு சுண்டைக்காய் வத்தலை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து குடல் மற்றும் வயிறு சுத்தமாகும்.
முக்கியமாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் வராது.சுண்டைக்காய் வத்தல் சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகள் கரைவது மட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கசடுகளையும் நீக்கிவிடும்.
வாரத்தில் ஏதேனும் மூன்று நாட்கள் சுண்டைக்காய் சாப்பிட்டு வர வயற்றில் உள்ள கிருமி, மூலக் கிருமிகள் நீங்கும்.மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
அஜீரணம்
கண்ட கண்ட நேரங்களில் அதிகம் சாப்பிடுவது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படக்கூடும்.
அஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு டம்ளர் மோரில் இரண்டு சிட்டிகை சுண்டைக்காய் வற்றல் தூளை சேர்த்து பகலில் குடித்து வந்தால் குணமாகும்.
தாய்பால் சுரப்பு
குழந்தை பெற்ற பெண்களுக்கு முன்பெல்லாம் பத்திய சாப்பாட்டில் சுண்டக்காயும் சேர்ந்திருக்கும்.
காரணம் சுண்டைக்காய் தாய்ப்பால் சுரக்க வைக்கும் திறன் மற்றும் செரிமானக் கோளாறுகளை நீக்கி, உடல் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உடையது.
மேலும் அவர்களுக்கு அங்காய பொடி என்று ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமாக சேர்க்கப்படுவது இந்த சுண்டக்காய் தான்.
வாயு பிரச்சனை
சிலர் அடிக்கடி வாயு பிரச்சனைகளால் மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களுக்கு சுண்டக்காய் அருமருந்து.
இவர்கள் வாரம் இரண்டு முறை சுண்டக்காய் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட முடியும்.
எலும்பு வலு பெற
நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வரும்.
ஆனால் சுண்டக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டிகிறது. இதனால் மூட்டு வலி, இடுப்பு வழி போன்றவை வராமல் தடுக்கபடுகிறது.
அது மட்டுமல்ல சுண்டக்காய் நரம்பு மண்டலத்திற்கு அபரிமிதமான சக்தியை கொடுக்ககூடியது.
மூல நோய்
மூலம் நோய்க்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கடுமையான மலசிக்கல், அதிகம் காரமான உணவுகளினை சாப்பிடுவது மற்றும் உடல் உஷ்ணம் போன்றவற்றால் உருவாகிறது.
மூல கடுப்பு நீங்க நெய்யுடன் ஒரு கைப்பிடி அளவு சுண்டக்காயினை வதக்கி சாப்பிடு வர குணமாகும்.
மேலும் மூல நோயால் உண்டாகும் இரத்தக்கசிவும் நீங்கிவிடும்.
இரத்த சுத்திகரிப்பு
இரத்தத்தில் கொழுப்பு சேர்வதனால் இரத்த குழாய்களில் படிவதை தவிர்கிறது.
இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
அதே போன்று நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவில் மற்றும் அருந்தும் பானங்கள் என்று அனைத்திலும் மாசுகள் நிறைந்துள்ளன.
இந்த மாசு மற்றும் நச்சுகள் அனைத்தும் நமது இரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர் காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் சுண்டக்காய் குழம்பு, சுண்டக்காய் கூட்டு என்று அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தம் பெறும்.முக்கியமாக இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது.
சளி தொல்லை
அடிக்கடி சளியினால் அவதிப்படுபவர்கள் பிஞ்சு சுண்டக்காயை கொண்டு மிளகு, சீரகம் சேர்த்து காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால், தொண்டை மற்றும் நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.
சுவாச பிரச்சனைகள்
முக்கியமாக சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், அதாவது ஆஸ்துமா, வரட்டு இருமல், மார்புசளி காசநோய் தொந்தரவு இருப்பவர்கள் தினமும் இருபது சுண்டைக்காய் வற்றலை சிறிது நல்ல எண்ணையில் பொரித்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
மேலும்
சிறுவயதிலேய ஏற்படுகின்ற ஊட்டச்சத்து குறைபாடு சரிசெய்ய கூடியது இந்த சுண்டைக்காய்.
எனவே குழந்தை பருவத்தில் இருக்கும் பொழுதே குழந்தைகளுக்கு சுண்டைக்காய் உணவில் சேர்த்து சாப்பிட பழக்கப் படுத்த வேண்டும்.
மேலும் இதில் உள்ள இரும்புசத்தானது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதால் உடல் முழுவதிற்கும் தேவையான ஆக்ஸஜன் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
புளித்த ஏப்பம் உடல் சோர்வு, மூட்டு வலி இவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.
பார்வை திறன் அதிகரிக்கவும் , நினைவாற்றல் கூடவும் இது உதவும்.
இதில் உள்ள தயாமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும், சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்க கூடியது.
காய்ச்சல் உள்ள பொழுது அதிக அளவு சுண்டக்காய் சாப்பிட்டு வர காய்ச்சல் குறையும்.
சுண்டைக்காய் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்.
இதை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் நடுக்கம், உடல் சோர்வு, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.
இதனைத் தடுக்க நெய்யில் வறுத்த சுண்டக்காயினை சோற்றில் நன்கு பிசைந்து சாப்பிடுவதனால் விரைவில் நல்ல பலன் கொடுக்கும்.
சுண்டக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டக்காய் வற்றலை பயன்படுத்தலாம்.
இதனையும் படிக்கலாமே உளர் திராட்சை சாப்பிட்டால் நமக்கு கிடைக்க கூடிய நன்மைகள் என்ன
English
Here we have Sundakkai benefits in Tamil. It is also called a Sundakkai uses in Tamil or Sundakkai maruthuva kunam in Tami or Sundakkai nanmaigal in Tamil or Sundakkai maruthuva gunangal in Tamil or turkey berry benefits in tamil or sundakkai health benefits in tamil or sunda vathal benefits in tamil or sundakkai vathal benefits in tamil or sundakkai vathal health benefits in tamil
8 Comments
Comments are closed.