பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Garlic Benefits in Tamil
பூண்டு உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் கணக்கில் அடங்காத மருத்துவ நன்மைகளை கொண்டது.
இதற்கு முக்கிய காரணம் பூண்டில் அதிக அளவு தாதுக்களும், விட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் உள்ளன.
சொல்லப்போனால் இதை ஒரு மூலிகை பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். பூண்டை முறையாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
உண்மையில் தினமும் பூண்டு சாப்பிடு பொழுது நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் மிகுந்த பலம் பெறுகிறது. அந்த வகையில் பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்? எத்தனை சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட வேண்டும். என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அதன் காரத்தன்மை தெரியாமல் இருக்க எப்படி சாப்பிட வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.
சளி பிரச்சனை
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அடிக்கடி சளி பிடிக்கும். எதிர்ப்பு சக்தி பொருத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது.
இதில் உள்ள அல்லிசின் என்ன பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் நெருங்க விடாமல் செய்யக்கூடியது. அதாவது பூண்டில் உள்ள அல்லிசின் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக்.
இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்து நுரையீரலை காக்க உதவுகிறது மேலும் சுவாசா பாதை தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கும்.
எனவே ஆஸ்துமா சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது.
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Garlic Benefits in Tamil
வயிற்றுப்புழுக்கள்
பொதுவாக வயிற்றில் உள்ள புழுக்கள் நாம் சாப்பிடு உணவை இந்த புழுக்கள் சாப்பிட்டுவிட்டு தன்னை வளர்த்துக் கொண்டு நம்மை நோயாளியாக மாற்றி விடும்.
எனவே தினமும் ஒரு பச்சை பூண்டு பல்லை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்து வெளியேறி புழுக்களும் வெளியேறிவிடும்.
நீரிழிவு நோய்
உடலின் வளர்ச்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய்தான் இந்த நீரிழிவு நோய். இது ஏற்பட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைதான்.
இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இயற்கை கொடுத்த வரம் பூண்டு என்பது முற்றிலும் உண்மை.
எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு பூண்டு பல்லை பச்சையாக சாப்பிட்டு வரும்பொழுது இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும்.
இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டு ஒரு நல்ல மருந்து. அதிலும் பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் நைட்ரிக் ஆக்சைடை அதிகரிக்க உதவி செய்கிறது.
இதன் விளைவாக இரத்தக் குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால் இதய விரிவாக்கம் மற்றும் இதய சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
பொதுவாக இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் உட்சுவர் குறுகல் அடைவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள அதிக அளவு கொழுப்பு தமனிகளில் படிந்து விடுவதே ஆகும்.
இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபெறுகிறது. இதனை தடுக்க ரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Garlic Benefits in Tamil
கொலஸ்ட்ரால்
இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் மாரடைப்பும் ஏற்படக்கூடும்.
எனவே எல்டிஎல் கொழுப்பு இதய குழாயான தமனிகளில் படிந்து, அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உடலில் கொழுப்பு கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அது மட்டுமல்ல உடலில் ரத்தஉறைவு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதையும் தடுக்கும்.
செரிமான பிரச்சனை
நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் பொழுது அஜீரணம் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்தக் கோளாறு ஏற்படும்.
எனவே செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடித்து வருவது நல்லது.
காரணம் பூண்டு உணவில் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
கர்ப்பிணி பெண்கள்
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை போன்றவையும் கட்டுக்குள் இருக்கும்.
மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.
கல்லீரல்
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தால் அது கல்லீரலை பலவீனமாக்கி விடக்கூடும். மிக முக்கிய உறுப்பான கல்லீரல்தான் நமது உடலில் பல வேலைகளை செய்து வருகிறது.
எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். அந்த வகையில் கல்லீரலில் கொழுப்பு படிவதை பூண்டு தடுக்கிறது.
மேலும் இது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.
அதே போன்று இதில் இருக்கும் அல்லிசின் மற்றும் செலினியம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவும்.
மேலும்
அதே போன்று பூண்டை சாப்பிடு பொழுது ஏற்படும் காரத்தன்மையை போக்க பூண்டை சிறிய துண்டு துண்டாக வெட்டி ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விட்டால் அதன் காரத்தன்மை குறைந்துவிடும். அதன் பிறகு சாப்பிடலாம்.
முக்கியமாக நாட்டு பூண்டை பயன்படுத்துவதே நல்லது. உண்மையில் இது போன்ற எளிதில் கிடைக்கும் உணவில் கவனம் செலுத்தினாலே பின்னாளில் மிகப் பெரிய நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இதனையும் படிக்கலாமே
- தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tamil
- காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil
- பாரிஜாதம் மருத்துவ பயன்கள் | Parijatham Palnt in Tamil
- பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil
- சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா?
- காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்
- இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
- கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
4 Comments
Comments are closed.