கொள்ளு மருத்துவ பயன்கள் | Kollu Benefits in Tamil

கொள்ளு மருத்துவ பயன்கள் | Kollu Benefits in Tamil

பொதுவாக ஒரு பழமொழி உண்டு. கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது. இந்த பழமொழியை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதாவது உடல் இளைத்தவன் எள்ளு சாப்பிட்டால், உடல் தேறி வருவான் என்றும் உடல் பருமனாக உள்ளவன் கொள்ளு சாப்பிட்டால், உடல் இளைப்பான் என்ப, இதன் பொருள்.

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதே சமயம் இது வெறும் கொழுப்பை மட்டும் குறைக்கும் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் இது ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது.

kollu benefits for weight loss

கொள்ளு சூப் செய்முறை

முதலில் இரண்டு தேக்கரண்டி கொள்ளுப்பருப்பை கருகாமல் வறுத்து மிஸ்சியில் விட்டு கொரகொரப்பாக, அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு சிறிய துண்டு பட்டை, கால் தேக்கரண்டி சோம்பு, ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு இவற்றை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய பத்து சின்ன வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொண்டு இதனுடன் ஒரு கப் பருப்பு தண்ணீரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இதனுடன் அரைத்து வைத்துள்ள கொள்ளுப் பொடி, மஞ்சள் தூள் சிறிது மிளகு, சீரகப் பொடியும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும்.

ஒரு விசில்வந்த உடன் இறக்க வேண்டும். குக்கரில் உள்ள வாயு வெளியேறிய பின்னர் மல்லித்தழை சேர்க்க வேண்டும். இப்பொழுது, ருசியான கொள்ளு சூப் தயார்.

இதய ஆரோக்கியம்

கொள்ளு சூப்பை குடித்து வரும் பொழுது, நம் உடலில், அங்கங்கே தேங்கி உள்ள, கொழுப்புகள், முழுவதும் நீங்கும். முக்கியமாக ரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்கும் பொழுதுதான் இதய நோய்கள், ரத்த அழுத்தம், ரத்த ஓட்டம், சீராக இல்லாமை போன்றவை ஏற்படக்கூடும்.

அந்த வகையில் இந்த கொள்ளு சூப் குடித்து வந்தால் ரத்த நாள கொழுப்புகள் நீங்கி இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

kollu benefits and side effects in tamil

உடல் பருமன்

அதே போன்று, உடல் பருமனால் அவதிப்படுவோர் இந்த கொள்ளு சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவாக உடல் எடை குறையும்.

அதே போன்று, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மூன்று வேளை உணவில் ஒரு உணவு வேளையில், மற்ற உணவுகளைத் தவிர்த்து முளை கட்டிய கொள்ளை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சளி இருக்கும் பொழுது இதை குடித்து வந்தால் சளித்தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளும் சரியாகும். காய்ச்சலையும் குணமாக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் இது உடல் உறுப்புகளை பலம் பெற செய்து நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

சர்க்கரை நோய்

இந்த கொள்ளிற்கு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த கொள்ளு சூப்பை தினமும் ஒரு முறை அல்லது நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

எலும்பு வலிமை பெற

இதில் அதிக அளவில் நிறைந்துள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே மூட்டு வலி உள்ளவர்களும் இந்த சூப்ஐ அடிக்கடி குடித்து வருவது நல்லது.

கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள் இந்த சூப்ஐ அடிக்கடி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆண்கள் ஆரோக்கியம்

கொள்ளில் உள்ள இரும்பு சத்து அமினோ அமிலங்கள், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து மலட்டுத்தன்மை நீக்க உதவும்.

மேலும், அதிக புரதச் சத்து நிறைந்த, சிறுதானிய வகையான இது, நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள், முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை, சரி செய்யவும் உதவுகிறது.

சிறுநீரக கல்

கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும்.

கால்சியம் ஆக்சலேட் என்பதே சிறுநீரக கற்களாகும். இதனை உடைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு. எனவே சிறிய அளவில் சிறுநீரக கற்கள் உடையவர்கள் இந்த கொள்ளு சூப்பை அடிக்கடி குடித்து வந்தால் கற்கள் உடைந்து வெளியேறிவிடும்.

Kollu Benefits in Tamil

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்தும். எனவே பெண்கள் கொள்ளை சூப் போன்றோ , அல்லது ஊற வைத்த நீரையோ அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

அதே சமயம் மாதவிடாய் காலத்தில் மட்டும்,தவிர்த்தல் நல்லது.

மலசிக்கல்

இந்த கொள்ளு தானியத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் காலையில் சிறிதளவு முளைகட்டிய கொள்ளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

மூலம்

மூலநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு கொள்ளினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமடையும்.

எனவே இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த கொள்ளுப் பருப்பை சூப் போன்றோ, ஊற வைத்து தண்ணீர் போன்றோ அல்லது முளை கட்டி வைத்தோ, சுண்டல் போன்றோ, அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனையும் படிக்காமேலே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்..

Related Posts

1 Comment

  1. Pingback: Trust bet

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning