வெள்ளரிக்காய் எவ்வளவு நோய்களுக்கு மருத்துனு தெரியுமா
நம்முடைய, அன்றாட உணவுகளில் காய்களுக்கு முக்கிய இடம் உண்டு. இதில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து சாப்பிடக் கூடியவை. சில வகையான காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடலாம். இப்படி பச்சையாக சாப்பிடக்கூடிய காய்களில் ஒன்றுதான் இந்த வெள்ளரிக்காய்.
இதன் ருசியை போன்றே இதில் சத்துக்களும் ஏராளம். வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீஸ், தாமிரம், பொட்டாசியம் இப்படி ஏகப்பட்ட, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், இதில் உள்ளன.
பொதுவாக எல்லாரும் நினைப்பது இது நீர்க்காய் என்பதால் தாகம் போக்க உதவும். வேறு பெரிதாக இதில் என்ன நன்மைகள் என்ன இருக்கப் போகிறது? என்று. உண்மையில் இது கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பது மட்டுமல்ல உடலில் உள்ள பல மோசமான நோய்களைக் குணப்படுத்தக் கூடியது.
அந்த வகையில் இங்கே தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் குணமாகிறது. யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.
நச்சுகள் வெளியேற
எங்கும் எளிதாக கிடைக்கும் இந்த வெள்ளரிகாயில் 95% நீர் சத்து உள்ளது எனவே கோடையில் ஏற்படும் அதிக நீர் இழப்பை ஈடு செய்ய தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அதிலும் இது உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் சிறுநீரகத்துக்கு அனுப்பி சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
உண்மையில், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறினாலே சருமம் பொலிவாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் உடலில் உள்ள நச்சுகள்தான், பல மோசமான நோய்களுக்கு காரணம்.
இந்த வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் ஒரு பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
இளமையான தோற்றம்
இது ரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது. முக்கியமாக சரும நோய்களுக்கு முக்கிய காரணம் ரத்த சுத்தமின்மைதான்.
மேலும் இதில் உள்ள நீர் சத்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.
உடல் எடை குறைய
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்று. ஏனென்றால் இதில் நீர் அதிக அளவிலும் கலோரியானது கருவாகவும் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளதால் சாப்பிட்டா உடனே வயிறு நிறைந்தது போன்ற உணர்வானது ஏற்படும். இதனால் மற்ற நொறுக்குத்தீனிகளின் மீது நாட்டம் ஏற்படாது. இதனால் உடல் எடை விரைவாக குறைய ஆரம்பிக்கும்.
உடல் சூடு
உடல் சூட்டையும் தணிக்க கூடியது. பொதுவாக நம் உடலின் செயல்பாட்டிற்கு, நீர்சத்து மிக முக்கியம். அந்த வகையில், அதிக நீர்ச்சத்து கொண்ட இது உடல் வறட்சியை போக்குவதோடு உடல் செயல்பாட்டையும் அதிகரிக்கும்.
பொதுவாக உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரலாம். முக்கியமாக, வெயில் காலத்தில் நிறைய பேருக்கு பெரும் அவஸ்தை கொடுக்கும் சிறுநீர் எரிச்சலையும் போக்கக்கூடியது.
ஈறுகளில் வலி
இந்த வெள்ளரிக்காயை கடித்து மென்று சாப்பிடு பொழுது இந்த வெள்ளரி சாறு பல் ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
அதாவது ஈறுகளில் ஏற்படும் வலி வீக்கம் இவற்றை குணமாக்கும்.
வாய் துர்நாற்றம்
முக்கியமாக வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவும். வாய் துர்நாற்றம் இருக்க கூடியவர்கள் தினசரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் வாய் துர்நாற்றம் என்பது முற்றிலும் நீங்கும்.
இதே போன்று, வாய் துர்நாற்றம் ஏற்பட, வயிறு புண்ணும், ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில், இதை தினமும் சாப்பிடு பொழுது, வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும்.
பளபளப்பான தோற்றம்
இதில் சிலிக்கான் சத்தும் உள்ளதால் நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாக்கும் திடமாகவும் வைத்திருக்கும்.
அதே போன்று இதில் உள்ள சல்பர், சிலிக்கான் இரண்டும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்தை, மேம்படுத்தும்.
சிறுநீரக ஆரோக்கியம்
இந்த வெள்ளரிக்காயை கேரட் சாறு உடன் சேர்த்து அருந்தும் பொழுது உடலில் யூரிக் அமிலம் குறைவதால் கீழ்வாத பிரச்சனைகள் குறையும்.
முக்கியமாக யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மலச்சிக்கல்
தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், இதிலுள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது.
எனவே, தீவிரமான மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் விடுபடலாம்.
சர்க்கரை நோய்
வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு கணையதில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் இந்த வெள்ளரிக்காய் சாற்றில் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த காயாகும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவது மிகுந்த பலனைத் தரும்.
உப்பு வியாதி
இந்த வெள்ளரிக்காய் சுரைக்காய் போன்றே உடலில் உள்ள தேவையற்ற உப்பை வெளியேற்ற உதவுகிறது.
உண்மையில் இரத்த அழுத்தம் உட்பட பல நோய்கள் உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுதால் தான் உண்டாகிறது. எனவே முடிந்த வரையில் சமையலில், உப்பை குறைத்து பயன்படுத்துவதே நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
வெள்ளரிக்காயில் பாக்டீரியா மற்றும் வைரஸ் மற்றும் மற்ற நுண்கிருமிகளை அழிக்க கூடிய அழற்சி எதிர்ப்பு பண்பானது நிறைந்து இருப்பதனால் தொற்று நோய்கள் எளிதில் நம்மை தொற்றாமல் பாதுகாக்கும்.
கண்கள் ஆரோக்கியம்
எனவே தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே போன்று கண்களில் வெப்பம் அதிகமானால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும்.
அந்த வகையில் இந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் கண்களின் கருவிகளின் வளர்ச்சி ஊக்குவிப்பதோடு கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டுவிடாமல் பாதுகாக்கும்.
அதே போன்று வெள்ளரி துண்டை கண்களின் மேல் ஒரு பத்து நிமிடங்கள் வைத்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். கருவளையமும் நீங்கும்.
முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதைத் தடவி இருபது நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் அந்தப் பகுதிகள் பொலிவடையும்.
எனவே கோடையில் எங்கும் எளிதாக கிடைக்கும் இந்த வெள்ளரிக்காயை அடிக்கடி அல்லது தினமும் கூட வாங்கி நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுங்கள். பல நோய்கள் நம்மை நெருங்காது.
இதனையும் படிக்கலாமே
- பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil
- பலா சுளை இலை அடை செய்வது எப்படி | Jackfruit Adai Recipe Tamil
- காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil
- பாரிஜாதம் மருத்துவ பயன்கள் | Parijatham Palnt in Tamil
- கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
- சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா?
- உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 10 உணவுகள்
- காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
SECRET CODE : CLICK
2 Comments
Comments are closed.