அன்னாசி பழம் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பயன்கள் தீமைகள்

அன்னாசி பழம் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பயன்கள் தீமைகள்

அன்னாசி பழம் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், இதன் புளிப்பு மற்றும் இனிப்பு சேர்ந்த சுவையானது, நாவில் எச்சி ஊற வைக்கும் தன்மை உடையது.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் A, B, C,மங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

பயன்கள்

மேலும் இதில் உள்ள கொழுப்பு சத்து குறைவாகவும், நார் செத்து, புரதச்சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

அன்னாசி பழம் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் சி ஆனது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

இதில் உள்ள ப்ரோமைலின் மற்றும் வைட்டமின் சி நுண்ணுயிர் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

எனவே, அன்னாசி பழம் சாப்பிடும் பொழுது, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இதில், அதிக அளவு மாங்கனிசு சத்து நிறைந்துள்ளதனால் இது எலும்புகளை உறுதியாக்குகிறது.

மேலும் எழும்பு திசுக்களையும் வலுப்படுத்துகிறது.

அன்னாசிப்பழத்தில் உள்ள பீட்டாகரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண் பார்வையை தெளிவாக்குகிறது.

அன்னாசி பழம் மூட்டுகளில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, மூட்டுகளை வலிமையாக்குகிறது.

இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது. இது சரும செல்களைப் பாதுகாத்து சருமப் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

அன்னாசி பழம்  உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியமானது மேம்படுத்தப்படும்.

இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியமானது உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி செய்கிறது.

அன்னாசிப்பழம் சாப்பிட்டு வரும் பொழுது அதிலுள்ள ப்ரோமைலின் என்ன நொதியானது வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கிறது.

இதனால் வயிற்றில் உள்ள புழுக்கள் நீக்கப்படும்.

அன்னாசி பழம் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

அன்னாசி பழத்துடன் தேன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, அது ஒற்றை தலைவலியை குணப்படுத்துகிறது.

மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். அன்னாசிபழம் தொண்டை புண் , தொண்டையில் சதை வளர்ச்சி போன்றவற்றை சரி செய்கிறது.

அழகான குரல் வளத்தை பெற அன்னாசி பழச்சாறு உதவி செய்கிறது. அன்னாசி பழ சாற்றை தொடர்ந்து அருந்தி வரும் பொழுது வயிற்று வலி, மஞ்சள் காமாலை போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

அன்னாசிப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நருக்கி அதை தூசி படாமல் வெயிலில் காய வைத்து பின்னர் அந்த வற்றலை ஒரு டம்ளர் பாலில் ஒரு வற்றலை ஊற வைத்து தினமும் இரவு தூங்கும் முன் குடித்து வர வேண்டும்.

இதனால் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்கப்பட்டு ரத்த சோகை எனப்படும் அனிமியாவானது குணமாக்கப்படும்.

அன்னாசிப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் செரிமானத்தை மேம்படுதுகிறது. அன்னாசி பழம் சாற்றை குடித்து வரும் பொழுது அதில் உள்ள வைட்டமின் பி யானது ஹார்மோன்களின் வளர்ச்சியை சீராக்கி மனப்பதட்டம், மன சோர்வு போன்றவற்றை நீங்குகிறது.

தீமைகள்

அன்னாசியானது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தந்தாழும், இவற்றில் சில பக்க விளைவுகளும் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் அளவானது ரத்தத்தில் உள்ள இன்சுலினை அதிகரிக்கிறது.

அன்னாசிப்பழத்தை அதிக அளவு சாப்பிடும்பொழுது அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களில் கரையை ஏற்படுத்துகிறது.

அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், சிலருக்கு ஒவ்வாமைகள், அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

அன்னாசி பழமானது இரைப்பையில் செல்லும் பொழுது ஆல்கஹால் ஆக மாறிவிடுவதனால் முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

சரியாக பழுக்காத அன்னாசிப்பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மையானது கடுமையான வாந்தியை ஏற்படுத்தும்.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலின் உள்ளது.இது மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது
அதனுடன் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, வலிப்புத் தடுப்பு மருந்து மற்றும் அன்டிபையோட்டிக்ஸ் மருந்துகளின் உபயோகப்படுத்துபவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

இப்பழமானது கருச்சிதைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே கருத்தரித்த ஆரம்ப நாட்களில் இப்பழத்தை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

அன்னாசிப்பழத்தை அதிக அளவகொள்ளும் பொழுது இதில் உள்ள அசிடிட்டி தன்மையானது வாய் மற்றும் தொண்டைகளில் ஊறும் உணர்வை ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படலாம்.

எதையுமே, அளவோடு எடுத்துக் கொள்ளும் பொழுது அது உடலுக்கு, நன்மையைத் தரும். அன்னாசிப்பழத்தையும் அளவோடு எடுத்துக் கொண்டு பயன் பெறுவோம்.

இதனையும் படிக்கலாமே

கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu

தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

English Overview

Here we have அன்னாசி பழம் பயன்கள் | pineapple benefits in tamil .Its also calledஅன்னாசி பழம் நன்மைகள் or அன்னாசி பழம் or அன்னாசி பழம் பயன்கள் or அன்னாசி பழம் மருத்துவம் or pineapple in tamil or benefits of pineapple in tamil or uses of pineapple in tamil or about pineapple in tamil or pineapple or pineapple benefits in tamil or pineapple during pregnancy or pineapple outline images or pineapple tamil or pineapple nanmaigal tamil or pineapple benifits tamil or pineapple uses tamil

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning