இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
Which Foods to Avoid at Night in Tamil
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவா இரவு நேரத்தில் மிக எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
உண்மையில் பகல் நேரத்தில் ஏதாவது வேலை செய்து கொண்டோ அல்லது நடந்து கொண்டோ இருப்போம்.
இதனால் கடினமான உணவுகள் கூட எளிதில் செரிமானம் ஆகிவிடும். ஆனால், இரவு நேரத்தில் அப்படி இல்லை. உடல் உழைப்பு இருக்காது. அதிலும் நிறைய பேர் சாப்பிட்ட உடனேயே படுத்து விடுவார்கள்.
இதனால் சாப்பிட்ட உணவு சரியாக செரிக்காமல் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதே போன்று சில உணவுகளை சாப்பிட்டால் சிறுநீர் அதிகமாக வந்து கொண்டே இருக்கும்.
இதனால் தூக்கம் கெட்டுவிடும். அந்த வகையில் இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
கீரைகள்
பொதுவாக கீரைகளில் சிறிய பூச்சிகள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இரவில் கீரையை சுத்தம் செய்யும் பொழுது நம்மை அறியாமல் அவையும் உணவோடு கலந்துவிட வாய்ப்புள்ளது. எனவே கீரைகளை இரவில் தவிர்த்து விடுவது நல்லது.
அது மட்டுமல்ல கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்ச்சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும். இதனால் கீரை சாப்பிடு பொழுது ஒரு வித மந்த நிலையை உருவாக்கி ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே கீரையை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
நீர் சத்துள்ள உணவுகள்
பூசணிக்காய், புடலங்காய், சுரை காய், பாவக்காய், கோவைக்காய், தர்பூசணி, சௌசௌ, வெள்ளரிக்காய் போன்ற நீர்சத்து நிறைந்த காய்களை இரவில் சாப்பிடும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை இரவில் சாப்பிடவே கூடாது.
காபி,டீ
காபி,டீ யில் உள்ள காஃபின் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும் என்பதால் தூக்கம் வராமல் செய்துவிடும்.
அதே போன்று டீயில் இருக்கும் தியோப்ரோமைன் மூளைக்கு சுறுசுறுப்பை அளித்து தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இரவு நேரங்களில் காபி,டீ யை தவிர்ப்பது நல்லது. அது மட்டுமல்ல சாப்பிட்ட உடனேயே காபி,டீ சாப்பிடு பொழுது இஹில் உள்ள காஃபின் உணவில் உள்ள சத்துக்களை உடலால் உறிஞ்ச விடாமல் செய்து விடும். எனவே காபி,டீ யை தவிர்ப்பது நல்லது.
இறைச்சி
இறைச்சியில் அதிக அளவிலான பிபுரோட்டீனும், கொழுப்பு சத்தும் இருப்பதால் இது செரிமானமாக அதிக ஆற்றல் தேவைப்படும். இரவு நேரத்தில் அவ்வளவு ஆற்ற கிடைக்காது. உண்மையில் இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும்.
ஆகையால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். முக்கியமாக வாயுத் தொல்லை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும். எனவே இரவில் இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது.
அப்படி சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்பவர்கள் இரவு ஏழு மணிக்கு முன்பாக சாப்பிட்டு விட வேண்டும். படுக்க செல்லும் முன்பு சாப்பிடக் கூடாது.
செயற்கை குளிர்பானங்கள்
அதிக அளவில் கலோரின் அளவை அதிகரிக்கும் குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டை ஆக்சைடு, பாஸ்போரிக் அமிலம்,சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள் செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
இவைகள் எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான பல உபாதைகளை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கக்கூடியது. முக்கியமாக இவற்றில் அதிக அமில சத்துக்கள் இருப்பதால் குடல் வால்வுகளை பாதிக்கிறது.
உண்மையில் இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல் தரக்கூடியது என்பதால் இரவில் மட்டுமல்ல எப்பொழுதுமே தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள்
கார வகை உணவுகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு கலோரி நிறைந்திருக்கும். இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும், நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.
இவற்றில் உள்ள அதிக அளவுகார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், உடல் பருமனையும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல இரவில் தூங்க தயாராவதற்கு ஏதுவாக உடல் வெப்பநிலை குறைய தொடங்கும். அந்த நேரத்தில் கார உணவுகளை சாப்பிட்டால் அது உடல் வெப்ப நிலையை அதிகப்படுத்திவிடும்.
அதன் தாக்கமாக ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் ஒத்துழைக்காது. எனவே இரவில் காரமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதிலும் அல்சர் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
முக்கியமாக காலை சமைத்த உணவை fridgeல் வைத்து மீண்டும் இரவு சூடுபடுத்தி சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
என்னதான் சத்தான உணவாக இருந்தாலும் அதை மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அவை சத்தை இழந்து நஞ்சாகவே மாறுகிறது.
அதிலும் இரவில் இது போன்ற மீண்டும் சூடுபடுத்திய உணவுகளை சாப்பிடு பொழுது நிச்சயம் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே இரவு தவிர்ப்பதே நல்லது.
முக்கியமாக இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம். இது உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும். அதே போன்று இது போன்ற உணவுகளால் தூக்கம் கெடவும் வாய்ப்புள்ளது.
இப்பொழுது இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இதனையும் படிக்கலாமே
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil
- அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil
- நரம்பு தளர்ச்சி குணமடைய என்ன செய்ய வேண்டும் | Narambu Thalarchi Solution in Tamil
- முதுகு வலி குணமாக | Muthugu Vali Remedy in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
அணிஅவரும் நமது வலைத்தளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
5 Comments
Comments are closed.