முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil

முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil

ஏழை எளியவர்கள் அன்றாடம் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள, எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் முருங்கையும் ஒன்று.

மனிதர்களுக்கு முருங்கை தரும் பயன்களும், சத்துக்களும் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

முருங்கை மரத்தின் இலைகள் முந்நூறு விதமான நோய்கள் வராம தடுக்க உதவுகிறது என்று தமிழ் மருத்துவம் கூறுகிறது.

இதன் அடிப்படை மருத்துவ குணங்களை நவீன மருத்துவமும் உறுதி செய்துள்ளது.

murungai keerai soup benefits in tamil

முருங்கை இலையில் உள்ள சத்துக்கள்

முருங்கை இலை நூறு கிராமில் 92 கலோரிகள் உள்ளது. இதில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம் தாமிரம், பாஸ்பரஸ்,இரும்பு, வைட்டமின் சி மற்றும் சிறிதளவு வைட்டமின் பி காம்ப்லெஸ் உள்ளது.

முருங்கை இலையில் உள்ள சத்துக்களை ஒப்பிடும் பொழுது ஆரஞ்சைப் போல ஏழு மடங்கு வைட்டமின் சியும், பாலில் உள்ளதை விட நாலு மடங்கு கால்சியமும், கேரட்டில் உள்ளதை விட நாலு மடங்கு வைட்டமினும் பாலில் உள்ளதை விட, இரு மடங்கு புரதமும், வாழைப்பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும், அதிகம் காணப்படுகிறது.

முருங்கை இலை தோற்றம்

முருங்கையின் பசுமையான இலைகள் பச்சையாகவும், சாலட்களிலும், காய்கறிகளிலும், ஊறுகாய் மற்றும் உணவிலும், அழகுபடுத்தும் பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.

முருங்கை இலையின் அமைப்பானது லேசான எடையற்ற சற்று பழுப்பேறிய பச்சையான இரட்டை இலைகளாக, அல்லது மூன்று இலைகள் அடங்கிய கூட்டு இலை கொத்துகளாக இலை காம்புகளில் காணப்படும்.

முருங்கை இலையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி புரதம், இரும்பு, மற்றும் பொட்டாசியம் குறிப்பிடத் தகுந்த அளவு உள்ளது.

முருங்கை இலைகள் கீரைகளாக சமைக்கப்படுகிறது.

murungai keerai in tamil

முருங்கை கீரை பயன்கள்

  • சாப்பிடு பொழுது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இலை சாற்று தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட குடல் பூச்சிகள் அழியும்.
  • பிரசவமான தாய்மார்கள், முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
  • உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் பதினைந்து milligram முருங்கைக்கீரைச் சாற்றுடன் தேன் மற்றும் பத்து மிளகு எடுத்து, பொடி செய்து, கலந்து, இரண்டு முறை சாப்பிட, பலன் கிட்டும்.
  • முருங்கைக் கீரையில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதால் நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்புக் கோளாறுகளைக் குறைக்கும்.
  • நீண்ட நேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்க உடலுக்கு சக்தியை தரும்.
  • முருங்கைக்கீரை உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
  • சிறுநீர் பெருக்கியாக உதவிடும்.
  • சர்க்கரை நோயாளிகள் முருங்கைக்கீரை சாப்பிடுவது பலன் தரும்.
  • குழந்தைகளிடையே அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு குறைந்த செலவில் அதிக சத்துக்களையும், முருங்கைக்கீரையினை சமைத்து சாப்பிடு பொழுது கிடக்கிறது.
  • AIDS நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முருங்கைக்கீரை உணவு மிகவும் பலன் தரக்கூடியதாகும்.

முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கீரை, ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் தேவையான அளவு வேக வைத்த துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி தக்காளி ஒன்று, வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று, தாளிப்பதற்கு சோம்பு, மிளகு, சிறிதளவு பட்டை, எண்ணெய் ஒருதேக்கரண்டி.

செய்முறை

முதலில் ஒரு வாணலில் எண்ணெயை சூடாக்கி அதில் சோம்பு, மிளகு, பட்டை மூன்றையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். அது நன்றாக வதங்கியவுடன் இந்த முருங்கை இலையையும் சேர்த்து வதக்கி, வேக வைத்த துவரம் பருப்பை தண்ணீருடன் சேர்த்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்தவுடன் இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயார்.

murungai keerai health benefits in tamil

உடல் வலிமை

முருங்கைக்கீரையை பயன்படுத்தி, நூறு யானைக்குள்ள வளத்தைப் போல் நமது உடலையும் வலுப்படுத்தும் ஒரு எளிய முறை பற்றி பார்ப்போம்.

நூறு யானை பலம் என்றால் நமது உடலானது நூறு யானைக்கு உரிய பலம் இருக்காது.

அந்த அளவிற்கு உடலை வலுப்படுத்தும் ஒரு எளிய முறையாகும். சில நபர்கள் பார்ப்பதற்கு மிகவும் உடல் மெலிந்து இருப்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாது. உடலில் வலிமை இருக்காது. உடல் பலவீனமாக இருப்பார்கள்.

அவர்களுக்கு, இந்த முறை மிகவும் உபயோகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், ஆண்மைக்குறைவு, விந்தணு சம்பந்தமான பிரச்சனைகளை, சரி செய்வதிலும் இந்த முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை ஒரு நாட்டு கோழி முட்டை சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய்.

செய்முறை

முதலில் முருங்கைக்கீரை இலையை நீரில் அலசி, சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சின்ன வெங்காயம் சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

அதன் பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை கொட்டி நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

வதக்கிய பிறகு முருங்கைக்கீரையை கொட்டி நன்கு வதக்க வேண்டும். முருங்கைக் கீரை நன்கு வதங்கிய பிறகு, ஒரு நாட்டுக்கோழி முட்டையை உடைத்து உள்ளே ஊற்றி கிண்ட வேண்டும்.

நாட்டுக்கோழி முட்டை ஓரளவுக்கு வெந்த பிறகு, இறக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை சாப்பிடுங்கள்.

murungai keerai benefits in tamil

பலன்கள்

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் உண்ண வேண்டும். அளவோடு தான் உண்ண வேண்டும். தொடர்ந்து இதே முறையில் உண்டு வந்தால் மலக்கழிவுகள், வெளியேறும். இரத்தம் சுத்தியாகும். இரத்தம் விருத்தியாகும்.

விந்து கட்டும், நரம்புகள் வளம் பெறும். எலும்புகள், வளம் பெறும். ரத்த சீராகும். சர்க்கரை நோய் குணமாகும்.

உடல் வளம் பெறும். கை, கால்கள் பலம் பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். இடுப்பு எலும்புகள், கழுத்து எலும்புகள் வழுபடும்.

பலகீனமாக இருப்பவர்களின் உடல் வளம் பெறும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆண்மை சம்பந்தமான, சகல பிரச்சனைகளும், சரியாகும்.

உள்ளுறுப்புகளை வலுப்படுத்தி, உடலுக்கு, நல்ல பலத்தை அளிக்கும்.

இந்த முருங்கைக்கீரை, பொதுவாக, அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடியதுதான். நாட்டு கோழி முட்டையும் கிடைக்கக்கூடியதுதான். அனைவரும் பயன்படுத்தி வளமான வாழ்க்கை வாழுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning