எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

தமிழர்கள் அதிகம் உண்ணும் உணவுகளில் ஒன்று தான் எள்ளு. இது உலகிலேயே மிகப் பழமையான எண்ணெய் விதைப் பயிர்களுள் ஒன்று. மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்னரே எள்ளு பயிரிடப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் இது முதலில் பயிரிடப்பட்டு பின்னர் பிற நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. எப்பேர்ப்பட்ட சூழலிலும் வளரும் தன்மை உடையது. ஆகையால் இது ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற தேசங்களிலும் பயிரிடப்பட்டது.

எள்ளு விதைகளில் தான் மற்ற எண்ணெய் விதைகளை விட அதிக எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும். எள்ளு பயிரிடும் முறை மற்றும் பராமரிப்பு முறை மற்ற பயிர்களை விட மிக எளிது.

உயிர் பிழைக்கப் பயன்படும் பயிர் என்று இதைக் கூறுவர். எனவே, இத்தகைய பண்புகள் கொண்ட இந்த எள்ளின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

மூச்சு பிரச்சனைகள்

இன்றைய காலகட்டத்தில் காற்று மாசுபாடு அதிகமாகக் காணப்படுகிறது, ஆகையால் பல்வேறு மூச்சு பிரச்சனைகளை மனித உடல் சந்திக்கிறது.

அதில் ஒன்று தான் காசநோய். இந்நோய் மூச்சுக் காற்றை சுவாசிக்கச் சிரமத்தை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள்ளு சாப்பிட்டு வந்தால் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் குறையும்.

எலும்புப் பிரச்சினைகள்

உடலின் எலும்புகள் பலமடைய தினமும் எள்ளினை உண்ண வேண்டும். செம்பு சத்து எள்ளில் அதிகம் உள்ளதால் இது இரத்தத்தில் பிராணவாயு அதிகம் ஓடச் செய்து, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்யும்.

மூட்டுத் தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சனைகளுக்கு எள்ளு சிறந்த மருந்து.

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

சிறுநீரகப் பிரச்சினை

உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையைச் சுத்திகரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரக உறுப்பில் சிலருக்கு வயது காரணமாகவும் மற்றும் போதிய தண்ணீர் அருந்தாமையினாலும் சிறுநீர் கழிப்பதில் மிகச் சிரமம் ஏற்படும்.

அப்படிப்பட்ட பிரச்சினை உடையவர்கள் தினமும் உணவில் அல்லது தனியாகச் சிறிதளவு எள்ளு எடுத்துக்கொண்டால் வலியில்லாமல் சிறுநீர் கழிக்கலாம்.

மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சினையான சிறுநீரகக் கல் உருவாவதையும் இது தடுக்கும்.

புண்கள் மற்றும் காயங்கள்

சிறு பிள்ளைகள் விளையாடும்போது வெட்டுக் காயங்கள் ஏற்படும், அல்லது பொதுவாக மனிதர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது சகஜம்.

ஆனால் அக்காயத்தை அப்படியே விட்டால் சீழ் வைத்து மிகுந்த வேதனையைத் தரும். அப்படிப்பட்ட காயங்கள் ஏற்பட்டால் எள்ளு சாப்பிட்டு வருவது நல்லது.

எள்ளில் உள்ள இயற்கை சத்துக்கள் காயங்கள் உள்ள இடங்களில் வெகுவாக செயல்பட்டு புண்களை ஆற்றுகிறது.

மேலும் எள்ளு பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பு போன்ற பிரச்சனைகளைப் போக்கும்.

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

இரத்த அழுத்தம்

சர்க்கரை நோய் மற்றும் எள்ளு விதைகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எள்ளு விதைகளில் வெளிமச்சத்து அதிகம் உள்ளதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமச்சத்து தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க எள்ளு விதைகளில் அல்லது எள்ளு எண்ணெய்யை பயன்படுத்தலாம், ஏனெனில் எள்ளில் துத்தநாதச்சத்து அதிகம் உள்ளது.

இது நெகிழ்வான சருமத்தைச் சரி செய்து பாதிக்கப்பட்ட சரும திசுக்களைப் புதுப்பிக்கும்.

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

இதய ஆரோக்கியம்

எள்ளு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உயிர்வளி இணைவு எதிர்ப்பி மற்றும் பற்பல சத்துக்கள் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய் எதிர்ப்பு சத்தான பைட்டிக் அமிலம் எள்ளு விதைகளில் உள்ளன. எள்ளில் பைட்டோஸ்டெரால்கள் மற்றும் வெளிமச்சத்து நிறைந்துள்ளது.

எனவே இதனை அன்றாடம் எடுத்துக்கொண்டால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறையும்.

பதற்றம் மற்றும் மன அழுத்தம்

கனிமச்சத்துக்கள் சுண்ணாம்பு மற்றும் வெளிமச்சத்து உள்ளதால், எள் உண்பவர்களுக்குப் படபடப்பு மற்றும் மன அழுத்தம் குறைந்து காணப்படும்.

மன அமைதியை அதிகரிக்கும் உயிர்ச்சத்துகள், டிரிப்டோபான் மற்றும் தியாமின் முதலியன உள்ளதால் செரடோனின் என்னும் தூக்க சுரப்பி உற்பத்திக்கு உதவும்.

எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil

கண்களின் ஆரோக்கியம்

கண்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்குத் தினமும் கருப்பு எள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதால் நல்ல பார்வை திறன் கிடைக்கும்.

தலைமுடியின் ஆரோக்கியம்

எள்ளு விதைகளில் உள்ள சத்துக்கள் தலைமுடியின் வேர்களைத் திடப்படுத்தி ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தினமும் எள் எண்ணெய்யைத் தலைமுடிக்குப் பயன்படுத்தி, மற்றும் எள் உட்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கண்டிப்பாக படிக்கவும்.

Peoples Search

ellu health benefits in tamil, எள்ளு தீமைகள், ellu urundai benefits in tamil, sesame seeds benefits in tamil, ellu urundai benefits in tamil, எள் உருண்டை பயன்கள், ellu urundai benefits, ellu health benefits in tamil, white sesame seeds in tamil, black sesame seeds in tamil, ellu in tamil

 

Related Posts

2 Comments

  1. Pingback: sideline

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning