கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil இதில் உள்ள சத்துக்கள் என்ன என்ன என்பதனை பற்றி முதலில் காண்போம்
- நார்ச்சத்து
- வைட்டமின் சி
- வைட்டமின் பி
- மாங்கனீஸ்
- பொட்டாசியம்,
- இரும்புச்சத்து
- ரைபோபிளவின்
கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று காரும் கருணை மற்றொன்று காராக் கருணை.காரும் கருணையினை பிடிகருணை என்றும் அழைப்பர்.
கருணைகிழங்கில் உள்ள சத்துகள் அனைத்தும் நமது உடலில் உள்ள பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து நமது உடலின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
செரிமான பிரச்சனை
நமது உடலில் செரிமானமானது சீராக இருந்தால் தான் நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். ஒரு சிலருக்கு சாப்பிடக்கூடிய உணவானது சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும்.
இதன் காரணமாக மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை தீர்க்க இயற்கை தந்த உணவு வகைகளில் இந்த கருணைக்கிழங்கு செரிமானத்திற்கு ஏற்றது.
உடல் எடை குறைய
அதிக உடல் எடை பிரச்சினையினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கருணைக்கிழங்கு சிறந்த ஒரு உணவு.
இந்த கருணை கிழங்கு உடல் எடையை குறைப்பதற்கு சிறப்பாக உதவுகின்றது. குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது மிக விரைவில் குறையும்.
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
பசியின்மை
சாதாரணமாகவே மனிதர்களுக்கு சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் பசி உணர்வானது ஏற்பட்டால் அவர்களின் உடலானது ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.
ஒரு சில காரணங்களினால் பசியின்மை பிரச்சனை ஏற்பட்டு சரியாக உணவு சாப்பிட முடியாமல் போய், உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.
இந்த கருணைக்கிழங்கை பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றில் இருக்கக்கூடிய அமில சுரப்பை சீராக்கி பசியின்மை பிரச்சினையை போக்குகிறது.
இதயம்
நமது இதயமானது ஆரோக்கியமாக இருந்தால் தான் நீண்ட நாட்கள் நாம் உயிர் வாழ முடியும்.
இந்த இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு கருணைக்கிழங்கினை வாரத்தில் குறைந்தது இரண்டும் முறையாவது சாப்பிட்டு வருவதன் மூலமாக மாரடைப்பு, இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.
பித்தம்
உடலில் வாதம், பித்தம் கபம் ஆகிய மூன்று அதிகரிப்பதால் உடலில் தலைவலி, மயக்கம் இது போன்ற உபாதைகள் ஏற்படும்.
இந்த கருணைக்கிழங்கு பித்தத்தின் அளவினை சீராக வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை உடையது. பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உடையவர்கள் அடிக்கடி இந்த கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மேலும் இது பித்த கற்கள் உருவாவதை தடுக்கின்றது.
வலிமையான எலும்புகள்
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்று. இந்த கருணைக்கிழங்கில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் எலும்புகளின் வலிமை குறைவாக இருப்பவர்கள் இந்த கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வருவது நல்லது.
மாதவிடாய்
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உடலளவிலும் மற்றும் மனதளவிலும் சோர்வடைந்து உதாளின் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
இந்த தருணங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடைகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் மற்றும் குடலில் உள்ள புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கினாள் சமைக்கப்பட்ட உணவினை சாப்பிடுவதன் மூலமாக குடலில் ஆசனவாயில் உள்ள புண்களை விரைவில் ஆற்றுகிறது.
நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.
மேலும்
மூலம் நோய் உள்ளவர்களுக்கு கருணைகிழங்கானது சிறந்த இயற்கை குணமுடைய மருத்துவ உணவாக இருக்கிறது.
இந்த கிழங்கில் உள்ள துவர்ப்புச் சுவை இரத்த குழாய்களைச் சுருங்க செய்கிறது.
கிழங்குகளில் மிக சுலபமாக ஜீரணமாகவும் தன்மை கொண்டது.
குடலில் கிருமி சேராமல் இருக்கவும் வயற்றில் உள்ள உணவு அழுகாமல் வெளியேற்றுகிறது .
உடலில் கொழுப்பு அதிக அளவில் சேராமல் தடுக்கின்றது. இக்கிழங்கு கல்லீரலை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
இதனையும் படிக்கலாமே
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- கரும்பு சாறு நன்மைகள் | Sugarcane Juice Benefits in Tamil
- கொத்தவரங்காய் பயன்கள் | Kothavarangai in Tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பச்சை பட்டாணி பயன்கள் | Pachai Pattani in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
இந்த தகவலினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click
கிராம்பின் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் Click
1 Comment
Comments are closed.