பிரண்டை மருத்துவ பயன்கள் |  Pirandai Health Benefits in Tamil

 பிரண்டை மருத்துவ பயன்கள் |  Pirandai Health Benefits in Tamil

நம்மை சுற்றிலும் எத்தனையோ நோய் தீர்க்கும் இயற்கை மூலிகைகள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் நமக்குதான் அதன் அருமை தெரிவதில்லை.

உண்மையில் இவற்றை சரியாக பயன்படுத்தினாலே மருத்துவமனைக்கு செல்ல அவசியமே இருக்காது. அந்த வகையில் இங்கே பிரண்டை தாவரத்தின் நன்மைகள் பற்றியும் இதில் என்னென்ன சத்துக்கள்  உள்ளது. இது எப்படி பயன்படுத்துவது? என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

நிறைய பேர் இந்த பிரண்டையை பயன்படுத்த தயக்கம் காட்டுவார்கள். காரணம் இதை சுத்தம் செய்யும் பொழுது கைகள் அரிக்கும் என்பதால் அது மட்டுமல்ல சிலருக்கு இதை சாப்பிடு பொழுதும் அரிப்பு ஏற்படும். இதனாலும் நிறைய பேர் சாப்பிட காட்டுவார்கள்.

உண்மையில் இந்த பிரண்டை சித்தர்கள் வழிகாட்டிய, மிக மிக அற்புதமான மூலிகையாகும். இது நமக்கு, ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கக் கூடியது.

pirandai benefits for pregnancy in tamil

பிரண்டை சுத்தம் செய்வது எப்படி

இதை சுத்தம் செய்யும் பொழுது அரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் இங்கே பார்ப்போம். பொதுவா இந்த பிரண்டையை சுத்தம் செய்யும் முன்பு கைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டால்  அரிப்பு ஏற்படாது.

அதே போன்று கையுறையும் அணிந்து கொள்ளலாம். அதே போன்று சமையலில் பயன்படுத்தும் பொழுது எண்ணெய் ஊற்று நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதனால் சாப்பிடு பொழுது, அரிப்பு ஏற்படாது.

பிரண்டை மருத்துவ பயன்கள் |  Pirandai Health Benefits in Tamil

பிரண்டைத் துவையல் செய்வது எப்படி?

முதலில் பிரண்டையை, நன்றாக சுத்தம் செய்து அதை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிரண்டையை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது அதன் பச்சை நெறம் மறைந்து இளம் மஞ்சளாக வரும் வரை நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாண சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஐந்து வரமிளகாய், சிறிது பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து இதனுடன் பத்து சின்ன வெங்காயம், ரெண்டு பல் பூண்டு , சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு இதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, ரெண்டு தேக்கரண்டி தேங்காய் துருவல்  மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி வைத்துள்ள பிரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது,இது ஆறியவுடன்  ஒரு   மிக்ஸி  ஜார்க்கு மாற்றி பதமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பிரண்டைத் துவையல் தயார்.

இந்தத் துவையலை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உண்மையாகவே நிறைய நன்மைகளைப் பெற முடியும். இதை  சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அதே போன்று, இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிட்டு வரலாம்.

பிரண்டை தீமைகள்

குடற்புழு பிரட்சனை 

சில குழந்தைகளுக்கு எவ்வளவுதான் பார்த்து, பார்த்து நல்ல சத்தான உணவை கொடுத்தாலும் அவர்கள் உடல் மெலிந்து வெளுத்துப் போய், ரத்த சோகையுடன் காணப்படுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் வயிற்றில் இருக்கும் குடற்புழுதான். குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள, ஊட்டச்சத்துக்களை புழுக்கள் உறிஞ்சி வாழ்வதால், நாளடைவில் குழந்தைக்கு சத்துகள் கிடைக்காமல் போய்விடும். இதனால், ரத்த சோகை உண்டாகும்.

இந்த குடல் புழுக்களைப் போக்கும், அருமையான மருந்து இந்த பிரண்டைத் துவையல். அது மட்டுமல்ல இந்த பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்புகள் உறுதியாக வளரும்.

பிரண்டை மருத்துவ பயன்கள் |  Pirandai Health Benefits in Tamil

இதய ஆரோக்கியம் 

ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்தால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வது தடைபட்டு இதய வால்வுகள் பாதிப்படைந்து இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் வல்லமை இந்த பிரண்டைக்கு உண்டு. எனவே இதய நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவருமே அடிக்கடி இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலப்படும்.

Pirandai Health Benefits in Tamil

செரிமான பிரட்சனை 

மன அழுத்தம் மற்றும் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வயிறு செரிமான சக்தி இழந்துவிடும். இந்த நேரங்களில் இதை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி தூண்டி விடும்.

அஜீர கோளாறுகள் நீங்கும். எனவே வாரத்தில் இரண்டு முறை இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் நீங்குவதோடு தேகமும் வலுப்பெறும்.

எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள்

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்பு பகுதிகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும் இதன் காரணமாக பலர் முதுகு வலி, கழுத்து வலியால் அவதிப்படுவார்கள்.

மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி, சளியாக, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி இறுகி முறுக்கிக் கொள்ளும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையைக் கூட அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட பிற துவையல் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறந்த பலனைத் தரும்.

அதே போன்று எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது. அதாவது பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வந்தால் எலும்புகள் விரைவில் கூடும்.

இது உடைந்து எலும்புகளைக் கூட ஒட்ட வைக்கும் தன்மை கொண்டதால் இதனை வஜ்ரவல்லி என்று சித்தர்களால் அழைக்கப்பட்டது. கால்சியம் சத்து நிறைந்த மூலிகை இதுவாகும்.

பிரண்டைப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடக்கிறது.

பிரண்டை மருத்துவ பயன்கள்

சர்க்கரை நோய் 

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் பிரண்டையும் ஒன்று.

இதில் நிறைந்துள்ள காரத்தன்மை உடலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுப்பதோடு சர்க்கரை நோயாளிகள் இழக்கும் பலத்தை மீண்டும் பெற உதவுகிறது.

நுரையீரல் ஆரோக்கியம்

பிரண்டைத் தண்டுகளை நன்கு அரைத்து அந்த சாற்றை ஆஸ்துமா மற்றும் பிற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

முக்கியமாக நுரையீரல் மற்றும் சுவாச குழாயில் தங்கியிருக்கும் நச்சுகளையும் வெளியேற்றக்கூடியது.

மலச்சிக்கல், மூல நோய்

மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக ரத்த மூலத்திற்கு இந்த பிரண்டை ஒரு கைகண்ட மருந்தாகும்.

இளம் பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை நெய்விட்டு நன்றாக வதக்கி அரைத்து  கொள்ள வேண்டும்.

இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாக பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு காலை, மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் மூலம் குணமாகும்.

பிரண்டை மருத்துவ பயன்கள்   Pirandai Health Benefits in Tamil

மாதவிடாய்  பிரச்சனை

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டையை சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லண்ணெய்  கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வர வேண்டும்.

இதனால் மாதவிடாய் ஒழுங்காக வரும். அதுமட்டுமல்ல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி இவற்றிற்கும் நல்ல தீர்வைத் தரும்.

உடல் சுறுசுறுப்பு

பொதுவா எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் உடல் சுறுசுறுப்பாக  இருப்பது மிக முக்கியம். ஆனால் சிலர் எப்பொழுது பார்த்தாலும் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக  இருப்பார்கள்.

எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் தள்ளிப் போடும் மனநிலையிலேயே இருப்பார்கள்.

இவர்கள் வாரம் இரண்டு முறை இந்த பிரண்டைத் துவையலை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். முக்கியமாக ஞாபக சக்தி அதிகரிக்கும், மூளை நரம்புகளும் பலப்படும்.

 மேற்கண்ட நன்மைகளை பெறுவதற்கு கீழே உள்ள அமேசான் வலைத்தளத்தில் உடனே ஆர்டர் செயுங்கள். 

உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

ORDER LINK

Click to Buy

Click To Buy

Click To Buy

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினையே கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning