ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் | Avaram Poo Benefits Tamil
பொதுவாக ஒரு தாவரத்தின், இலை, வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படும். ஆனால் ஒரு சில தாவரத்தின் பூக்கள் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் மிக, மிக அதிக மருத்துவ நன்மைகள் கொண்டது இந்த ஆவாரம் பூ.
நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை மிக எளிதில் குணமாக்கும் ஆற்றல் இந்த ஆவாரம் போக்கு உண்டு. ஒரு பழமொழி கூட உண்டு ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்பதுண்டோ என்பதாகும். அத்தனை மருத்துவ குணம் வாய்ந்தது இந்த ஆவாரம் பூ.
ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் | Avaram Poo Benefits Tamil
மலசிக்கல்
இந்த மலசிக்கல் பிரச்சனையை நாம் சாதாரணமாக நினைக்க கூடாது.இந்த மலசிக்கல் தான் பல நோய்கள் உருவாக அடிப்படை காரணமாக உள்ளது. உண்மையில் தினமும் நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறினாலே பல நோய்கள் நம்மை அண்டாது.
இந்த மலச்சிக்கலைப் போக்கும் அருமையான மருந்து இந்த ஆவாரம்பூ. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால் இந்த பிரச்சனை அறவே அறிந்துவிடும்.
மூலநோய்
மூலநோயையும் போக்கக் கூடியது இந்த ஆவாரம் பூ. இதற்கு ஆவாரம் கொழுந்து, ஆவாரம் பட்டை, ஆவாரம் பூக்கள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை தினமும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருபது நாட்களிலேயே உள்மூலம் முதல் அனைத்து வகை மூலங்களும் குணமாகும்.
ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் | Avaram Poo Benefits Tamil
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்க்கு இந்த ஆவாரம் பூவை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆவாரம் பூ, இலை, பட்டை, காய், பிசின் ஆகிய ஐந்தையும் காய வைத்து பொடி செய்து தயாரிக்கப்படும் மருந்து ஆவாரை பஞ்சாங்கம் இந்த சூரணத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் தடைப்பட்ட இன்சுலின் சுரப்பு மீண்டும் சுரக்க ஆரம்பிக்கும்.
மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டு வலி, உடல் சோர்வு, அதிக பசி, அதிக தாகம், நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு என்று இப்படி அனைத்திற்கும் இந்த ஆவாரம் பூ கஷாயம் ஒரு அருமையான மருந்து.
எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்த சூரணத்தை வாங்கி பயன்படுத்தி பாருங்கள். பலன்கள் கண்கூடாக தெரியும்.
இந்த சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
பெண்கள் ஆரோக்கியம்
குழந்தை இல்லாத பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி விரைவில் கருத்தரிக்கும். அதுமட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி வயிற்றையும் சுத்தமாக்கும்.
அதே போன்று வயிற்றில் கிருமிகள், புழுக்கள், வயிறு மந்தம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் குணமாகும்.
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் உடல் சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, மாதவிடாய் கோளாறுகள், அதாவது அதிக உதிரப்போக்கு ஏற்படுதல் ஒழுங்கற்ற மாதவிலக்கு போன்றவை குணமாகும்.
அதே போன்று குடல்புண் வயிற்றுப் புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை அத்தனையும் தீரும். முக்கியமாக வெள்ளைப்படுதல் பிரச்சனையும் குணமாகும்.
ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் | Avaram Poo Benefits Tamil
உடல் துர்நாற்றம்
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இவர்கள் தேவையான ஆவார பூக்களை எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும்.
அரிப்பு, நமைச்சல்
ஆவாரம்பூ பொடியுடன் பச்சை பயிறு மாவு சம அளவு கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் உடலில் தேய்த்து வைத்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் குணமாகும்.
சிறுநீரக ஆரோக்கியம்
இந்த ஆவாரம் பூவிற்கு சிறுநீரகத்தை முறையாக செயல்பட வைக்கும் திறன் உண்டு. நூறு கிராம் ஆவாரம் பூவை,150 மில்லி தண்ணீரில் போட்டு, 100 மில்லி வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.
இந்த கஷாயத்தை வடிகட்டி நூறு மில்லி பசும்பாலில் கலந்து இருபது நாட்களுக்கு, குறையாமல் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம்,இயல்பாக செயல்படும்.
உடையாத கட்டிகள்
இந்த ஆவாரம் பூவை நன்றாக அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து அதை நீண்ட நாட்களாக உடையாத கட்டிகளின் மீது தடவி வந்தால் விரைவில் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.
மேலும் கட்டில் உடைந்த பின்பு ஆவாரை பஞ்சாங்க சூரணத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து சூடு செய்து புண்கள் மீது தடவி வந்தால் சில தினங்களில் ஆறி விடும்.
முகம் பொலிவு
காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து தயிர் சேர்த்து அரைத்து சிறிது நேரம் முகத்தில் பூசி வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் வழிதல் போன்றவை நீங்கி முகம் பொலிவாக மாறும்.
மேலும் இந்த ஆவாரம் பூவை உலர்த்தி பொடி செய்து தண்ணீர் விட்டு அரைத்து குழப்பி புருவத்தின் மீது பூசி வந்தால்,உடல் சூட்டினால்,கண்கள் சிவந்து போவது சரியாகும்.
இதனையும் படிக்கலாமே
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil
- விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.