ஆளி விதை பயன்கள் | Aali Vithai Health Benefits inTamil

 ஆளி விதை பயன்கள் | Aali Vithai Health Benefits inTamil

இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு பொருள் ஆளி விதை. நிறைய பேருக்கு இது எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது பற்றிய புரிதல் இருக்காது. உண்மையில் இந்த ஆளிவிதையை மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இங்கே ஆளி விதையின் நன்மைகள் பற்றியும் இதை யாரெல்லாம் சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக் கூடாது? என்பதை பற்றியும் தெளிவாக இங்கே பார்ப்போம்.

ஆளி விதையில் உள்ள சத்துக்கள் 

இந்த ஆளி விதையில் நிறைய மருத்துவ நன்மைகள் உள்ளது. இதில் சத்துக்கள் என்று பார்த்தால் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் ஈ போன்றவை, வளமாக உள்ளது.

ஆளி விதை பயன்கள்

ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் 

முக்கியமாக நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களும், இதில் நிறைய உள்ளன.

இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலமானது பெரும்பாலும் அசைவ உணவுகளில் கிடைக்கக்கூடியது.

ஆனால் ஒரு சில சைவ உணவுகளிலும்  காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆளி விதைகளில் அதிகமாகவே கிடக்கிறது.

சொல்லப்போனால் தாவர உணவுகளில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது இந்த ஆளி விதை.

நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்த கொழுப்பு அமிலங்களை நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.

புரத சத்து 

ஏராளமான புரதசத்தும் நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இந்த ஆளி விதையை சாப்பிட்டால் தேவையான புரத சத்தும் கிடைத்துவிடும்.

 Aali Vithai Health Benefits inTamil

கொலஸ்ட்ரால் 

இதில் அதிக அளவில் நார்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ் நார்ச்சத்து, ஒமேகா மூன்று என்ற நல்ல கொழுப்பு. இந்த மூன்றும் உயிர் ஆற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களாகும்.

இந்த மூன்று சத்துக்களும் ரத்தக் குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது.

இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். எனவேதான் இந்த ஆளி விதைய இதயத்தின் நண்பன் என்று கூறப்படுகிறது.

ஆளி விதை பயன்கள் | Aali Vithai Health Benefits inTamil

இதய ஆரோக்கியம் 

பொதுவா நாம் சாப்பிடு சில உணவுகளில் ஒமேகா மூன்றும், நார்ச்சத்தும் உள்ளன. ஆனால் லிக்னான்ஸ் கிடையாது.

ஆளி விதையில் மட்டுமே இது உண்டு. சொல்லப்போனால் இந்த லிக்னான்ஸ் உடலில் சேர்ந்ததுமே உயர் ரத்த அழுத்தமும் இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கும்.

 Aali Vithai images

மலசிக்கல் 

உண்மையில் ஜீரண மண்டல ஆரோக்கியத்திற்கு இந்த ரெண்டு வகையான நார்ச்சத்தும் அவசியம். இதனால் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த ஆளிவிதையை சேர்த்துக் கொள்ளும் பொழுது இதிலுள்ள நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள அனைத்தையும் விலக்கி வெளியேற்றிவிடும்.

இதில் உள்ள தாவர இரசாயனங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்  போன்று செயல்பட்டு புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி 

முக்கியமாக இதில் ஆல்பா லினோ லெனிக் அமிலம் மற்றும் லிக்னான்ஸ் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலைத் தாக்கும் அலர்ஜி  நோய்களானமுடக்கு வாதம், சொரியாசிஸ் போன்றவை வராமல் தடுக்கும்.

உடல் எடை குறைய 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஆளி விதைய அவசியம் சாப்பிட வேண்டும். பொதுவா எடை அதிகம் உள்ளவர்களுக்கு எப்பொழுது பார்த்தாலும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும்.

இதனால் இவர்கள் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் உடல் எடை மேலும் அதிகரிக்கும்.

ஆனால் இந்த ஆளி விதையில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளதால் இதை சாப்பிடு பொழுது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் நொறுக்குத்தீனிகளின் மேல் நாட்டம் ஏற்படாது.

முக்கியமாக இதில் உள்ள லிக்னான்ஸ் தேவையற்ற கொழுப்புகளையும்  குறைக்கும் என்பதால் உடல் எடை வேகமாக குறையும்.

ஆளி விதை பயன்கள் | Aali Vithai Health Benefits inTamil

எலும்புப்புரை நோய் 

இது ஆண்களுக்கும் ஏற்படும் என்றாலும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனையாகும்.

அதாவது பெண்களின் பிரத்யோக ஹார்மோனான ஈஸ்டரோஜன் சுரப்பு மாதவிடாய் நின்றவுடன், இதன் சுரப்பும் குறைவதால் எலும்பு தேய்மானம் உட்பட எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த ஆளி விதையில் உள்ள பைட்டோ ஈஸ்டரோஜன்கள் இந்த பிரச்சனைகளே வராமல் தடுக்கக்கூடியது.

எனவே மாதவிடாய் நின்றால்  கட்டாயம் ஆளி விதைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

மேலும் கருப்பை செயலிழப்பு ஏற்படுவதையும் தடுக்கும் எனவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆளி விதை பயன்கள்  Aali Vithai Health Benefits inTamil

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் ஆளிவிதையை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு மாதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும்.

இதன் மூலம் மாதவிடாய் பிரச்சனை உள்பட பல உடல்நலப் பிரச்சனைகள் குணமாகும்.

சரும ஆரோக்கியம் 

இதில் உள்ள  வைட்டமின் ஈ சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கிய அவசியமானதாகும்.

அதே போன்று இதில் உள்ள ஒமேகா மூன்று  கொழுப்பு அமிலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஆளி விதை பயன்கள் | Aali Vithai Health Benefits inTamil

ஆளி விதை எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த ஆளிவிதையை அப்படியே சாப்பிடக் கூடாது. காரணம் அது. ஜீரணமாகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனால் சாப்பிட்ட பலனும் கிடைக்காது.

எனவே இந்த ஆளி விதையை, நன்கு அரைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது. பொடியாக்கி சாப்பிடும்  பொழுது இதன் முழு நன்மைகளும் உடலுக்கு கிடக்கிறது.

அதே போன்று இதை வறுத்து பொடியாக்கி, பொடியை மோரில் கலந்தோ அல்லது தண்ணீர் பால் இவற்றில் கலந்து சாப்பிடலாம்.

முக்கியமாக இதை சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் வாயுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடும்.

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப கட்டத்தில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 ஆளிவிதையை சாப்பிடக் கூடாது? 

இந்த ஆளி விதைய யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்த்தால் குறைந்த இரத்த அழுத்தம் குறைந்த இரத்த சர்க்கரை வயிற்றுப் போக்கு உள்ள பொழுது ஹார்மோன்பிரச்சனைகள், ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆளிவிதையை சாப்பிடு பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உங்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகு சாப்பிடுவது நல்லது.

இதனையும் படிக்காமலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: websites

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning