இந்து உப்பு பயன்கள் | Himalayan Rock Salt Benefits
இந்து உப்பு பயன்கள் | Himalayan Rock Salt Benefits இந்து உப்பு இதன் நன்மைகள் தீமைகள் பற்றி இங்கு காண்போம்.
உப்பு உருவாகும் விதம்
இந்து உப்பு என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் . இந்துப்பு அல்லது இமயமலை உப்பு என்று அழைக்க படுகிறது .
உண்மையில் இந்தியவை விட அதிகமா பாகிஸ்தானில் இருந்து தான் இது வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு வகையான பாறை உப்பு.
இது இந்தியா மற்றும்பாக்கிஸ்தான் நாடுகளில் பெரும்பாலும் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த உப்பை பொறுத்தவரையிலும் வெட்டி எடுத்த உடனே, நம் பயன்பாட்டுக்கு வருவதில்லை.
இதனை நீரிலும், இளநீரிலும் பதப்படுத்தப்பட்டு, அதற்குப் பிறகுதான் பயன்பாட்டிற்கு வருகிறது.
பயன்கள்
நம்ம சாதாரணமா பயன்படுத்துகிற உப்பில் உள்ள வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு. இந்த இந்து உப்பும் சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது.
நம்ம கடல் உப்பு சுத்தமான வெள்ளை நிறத்துல இருக்கும். ஆனால், இந்த இந்து உப்பு பொறுத்த வரைக்கும் வெள்ளை நிறத்தோட, கொஞ்சம் பழுப்பு நிறமும் கலந்த தோற்றத்தில் இருக்கும்.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் , இந்த இந்து உப்புக்கு பெரிய இடம் உண்டு. இதற்க்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது.
இது பசியை தூண்டும். மலத்தை இழக்கும். சாதாரண உப்பில் இருப்பது போலவே, இந்து உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கை அயோடின் சத்து, நித்தியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட பல நுண் சத்துக்களும் அடங்கியுள்ளன.
நம் அன்றாடம் பயன்படுத்துகிற உப்புக்கும் இந்து உப்பிற்கும் என்ன வித்தியாசம் என்றால் நம்ம சாதாரணமா பயன்படுத்துற உப்பு பித்தத்தை அதிகரித்து, தலை கிறுகிருப்பு ,பித்த வாந்தி மற்றும் மயக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆனால் இந்துப்பை பொறுத்தவரைக்கும் பித்தத்தை ஏற்படுத்தாது.
இது பித்தத்தையும் கபத்தையம் சமன் செய்து, சளி, இருமல் வராமல், தற்காத்துக் கொள்ளும். அதே போன்று, இந்துப்பு நம்முடைய செரிமான சக்தியை அதிகரித்து.
கண் பார்வை மற்றும் இதயத்தையும் பாதுகாக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உடலுக்கு உறுதியை தருவதுடன், மனச்சோர்வு போக்கி, உடலில் நீர்ச்சத்தினை தக்க வைக்க உதவும். இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். நிம்மதியான உறக்கத்தை தருவதுடன், தைராய்டு பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைகிறது.
இந்துப்பை நாம் சாதாரணமா சமையலுக்கும் பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்தில் இந்துப்பானது சமையலுக்கு மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்துப்பு குளிரும்
இந்துப்பை உடல்ல தேய்த்து சிறிது நேரதிற்கு பிறகு குளித்தால் உடல் அசதி நீங்கி, மனமும், உடலும் புத்துணர்ச்சி பெரும். இந்துப்பு கலந்த இளம் சூடான நீரால் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் போன்றவை சரியாகும்.
மூலம் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.இத்தனை நன்மைகள் இந்த இந்து உப்புல அடங்கி உள்ளது. உப்பு இருக்கும் இடத்தில் எந்தவித கிருமிகளும் அண்டாது.
சிறந்த வலி நிவாரணி
கால்களில் முள் குத்திய இடத்தில முள்ளினை எடுத்த பிறகும் வலி இருந்தால் வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் பாதங்களை அரை மணி நேரம் வரை வைத்திருந்தால் போதும். இப்படி செய்வதால் வலியானது உடனடியாக நீங்கி விடும்.
கால் ஆணித்தொல்லை உள்ளவர்களும் இவாறு செய்யலாம். கால் வெடிப்பு உள்ளவர்கள். இரவில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கால்களை அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
இப்படி செய்வதால் பாதங்களில் உள்ள வெடிப்பு உடனடியாக நீங்கி விடும். இருமல் மற்றும் தொண்டாய் கரகரப்பு ஏற்படும் பபோது வெதுவெதுப்பான உப்புக்கரைசலை, தொண்டையில் படும்படி அண்ணாந்து கொண்டு கொப்பளிக்கலாம்.
இப்படி செய்ததால், தொண்டை கரைகரப்பு உடனடியாக நீங்கி விடும். உப்பு பற்களை பளிச்சிட வைக்கவும் உதவுகிறது. வாரம் ஒருமுறை எலுமிச்சை பழச்சாறு கலந்து பல் துலக்கி வந்தால் பல்லில் உள்ள கறைகள் எல்லாம் மறைந்துவிடும்.
துணிகளில் கரை ஏற்படும் பொழுது, உப்புத்தூளை கொண்டு கரை படிந்த இடத்தில தேய்க்கவேண்டும். கரை மறைந்ததும் உப்பு நீரை கசக்கி விடுங்கள் கரை நீங்கி விடும்.
தூள் உப்பை சிறு மூட்டையாக கட்டி, அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்தால் அரிசியில் புழு, பூச்சிகள் சேராது.
வீட்டில் உள்ள furnitureகள் அழுக்காகி இருந்தால் இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து அதில் கொஞ்சம் உப்பை கலந்து துடைத்தால் பளபளப்பாகிவிடும்.
சமையலுக்கு உபயோகித்தது போக மீதி உள்ள தேங்காய் மூடி, மற்றும் எலுமிச்சை பழ மூடிகளின் மீது உப்பை தடவி வைத்தால் நாட்களுக்கும் வாடாமலும் கெடாமலும் இருக்கும்.
ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய். இது இரண்டையும் ஒரு வாலி தண்ணீரில் கலந்து கரையை துடைத்தால் தரையில் உள்ள கறைகள் எல்லாம் நீங்கி விடும்.
English Blog
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும்.
இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
4 Comments
Comments are closed.