கருவேப்பிலை பொடி பயன்கள் | Karuveppilai Health Benefits in Tamil

கருவேப்பிலை பொடி பயன்கள் | Karuveppilai Health Benefits in Tamil

இந்த கருவேப்பிலை, உணவிற்கு மனத்தை கொடுப்பதோடு நமது ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது.

உண்மையில் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்த கறிவேப்பிலை.

அந்த வகையில் இந்த கறிவேப்பிலை பல உடல் நல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை கொடுக்கிறது.

இன்றைக்கு இளைய தலைமுறையினரும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

எனவே இவர்கள் கறிவேப்பிலை போன்ற இயற்கை உணவுகள் விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

Karuveppilai Benefits in Tamil

இரத்த சோகை

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கறிவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு பச்சையாக சாப்பிட்டு வரலாம்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை அரைத்து லெமன்  சாறு கலந்து குடித்து வரலாம். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின்  எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.

காரணம் இதிலுள்ள அதிக இரும்பு சத்து மற்றும் போலிக்  அமிலம், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

அதே போன்று நாள்பட்ட ரத்த சோகை கொண்டவர்கள் உலர்ந்த கருவேப்பிலை பொடியை வெந்நீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் சிறிது கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இன்னும் நல்லது இதனால், உடலில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கி உடல்  சுறுசுறுப்பாக மாறும்.

சர்க்கரை நோய் 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள கறிவேப்பிலை மிகச்சிறந்த ஒரு இயற்கை மருந்தாகும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும்.

காரணம் இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

இதில் உள்ள முக்கிய சத்துக்கள்  இன்சுலின்  செயல்பாட்டைத் தூண்டுவதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்றும் தெரிய வந்துள்ளது.

Karuveppilai images in tamil

எலும்பு  மற்றும் பற்கள் வலிமை 

இந்த கறிவேப்பிலை அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

கால்சியம் நிறைந்த உணவுகள்ல இருந்து, கால்சியம் சத்துக்களை உறிஞ்சி, மக்னீசியம் சத்து மிக முக்கியம்.

எனவே, இந்த கறிவேப்பிலையை பச்சையாக மென்றோ  அல்லது ஜூஸ் போன்றோ சாப்பிட்டு வரும்பொழுது நம்முடைய எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும்.

நார்சத்து 

இந்த கறிவேப்பிலையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு, மிகவும் பயன் தரக்கூடியது.

உண்மையில், தினமும் நமது உணவில், போதுமான நார்ச்சத்து இருந்தாலே, செரிமான அமைப்பு சிறப்பாகசெயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை, செரிமான பிரச்சனைகள் வராது முக்கியமாக சர்க்கரை நோயும் வராது.

இதய ஆரோகியம் 

அதே போன்று, ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். முக்கியமா இதய நோய்கள் வராமல் காக்கும். இதனால்,இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம் 

கறிவேப்பிலை கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். மேலும், இதில் உள்ள,வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டுகிறது.

எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, இந்த கறிவேப்பிலை சாப்பிட்டு வருவது, நல்லது.

பொதுவா கறிவேப்பிலை மென்று சாப்பிட பிடிக்காதவர்கள் அரைத்து ஜூஸ்  போன்றும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Benefits in Tamil

கெட்ட கொழுப்பு

இந்த கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள  கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து, நல்ல பாதுகாப்பு தரும்.

 உடல் எடை

 உடல் எடை தான் பல நோய்களுக்கு காரணம். அந்த வகையில், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள, இந்த கறிவேப்பிலையை ஜூஸ் செய்து தினமும் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க முடியும்.

தலை முடி ஆரோக்கியம் 

கறிவேப்பிலை, முடி வளர்ச்சிக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று. தினமும் கருவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரை முடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சனை ஏற்படவே ஏற்படாது.

மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

முக்கியமாக  இளநரையை போக்கும் அருமையான இயற்கை வைத்தியம் இந்த கருவேப்பிலை தான். எனவே இளநரை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நன்றாக கழுவி விட்டு பச்சையாக அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் போதும்.

கண்டிப்பாக உங்கள் நரை முடி விரைவில் கருமையாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Nanmaigal tamil
Karuveppilai Nanmaigal in tamil

கண் ஆரோக்கியம் 

இந்த கறிவேப்பிலையில்  அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் மாலைக்கண் நோய் மற்றும் கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஏற்படக்கூடும்.

அந்த வகையில் இந்த கறிவேப்பிலையை சாப்பிட்டு வரும்பொழுது கண் பார்வை தெளிவாக இருக்கும்.

வயதான காலத்தில் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் பார்வைக் கோளாறுகளைத் தடுப்பதோடு முதுமையில் ஏற்படும் கண்புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

எனவே  இனி  நீங்களும் கறிவேப்பிலைதானே என்று அலட்சியமாக நினைக்காமல் இங்கே சொன்னது போன்று பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் பலன்கள் கண்கூடாகத் தெரிய ஆரம்பிக்கும்.

கண் ஆரோக்கியம் 

மேற்கண்ட நன்மைகளை பெறுவதற்கு கீழே உள்ள அமேசான் வலைத்தளத்தில் உடனே ஆர்டர் செயுங்கள். 

உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

ORDER LINK

Click To Buy

Click To Buy

 

Click To Buy

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning