நரம்பு தளர்ச்சி குணமடைய என்ன செய்ய வேண்டும் | Narambu Thalarchi Solution in Tamil
நம்முடைய மனதிற்கு அடுத்தபடியாக நம் சந்தோஷம், துக்கம் என அனைத்திலும் பங்குபெறக்கூடியது நம்முடைய நரம்பு மண்டலம்தான்.
இன்று நிறைய பேருக்கு நரம்புத்தளர்ச்சி பற்றிய பயம் இருந்து கொண்டே உள்ளது. உண்மையில் சில ஊட்டச்சத்து குறைபாட்டினால்தான் இந்த நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது.
சரியான ஊட்டச்சத்து உள்ள உணவினை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை முற்றிலும் சரி செய்ய முடியும்.
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்
நம் உடலில் உள்ள உணர்ச்சி நரம்புகள்தான் தகவல்கள் பரிமாற காரணமாகும். இந்த நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது கைகள் அல்லது பாதங்கள் மரத்துப்போகும்.
அதே போன்று சிறுநீரை வெளியேற்றும் வரை அதை அடக்குவதற்கு பல்வேறு தசைகள் மற்றும் நரம்புகள் ஒன்றிணைந்து வேலை செய்கிறது.
ஆனால் ஒருவர் சிறுநீரை அடக்க முடியாமல் சிரமப்பட்டால் அவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
அதே போன்று நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூர்மையான வலி எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படும். இந்த வகையான வலியானது கைகள் அல்லது பாதங்களில் ஏற்படக்கூடும்.
மற்ற வலிகளை விட இந்த வகை வலி சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த வலியானது இரவு நேரத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும்.
இது அதிகமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடும். அதே போன்று ஒருவர் நடக்கும் பொழுது தடுமாறி நடந்தால் அதற்கு காரணமும் நரம்பு பாதிப்புகள்தான்.
முக்கியமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கை நடுங்குதல் மற்றும் பதட்டத்திற்கு புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே காரணமாகும்.
அடிக்கடி தலை வலி கடுமையாக வந்தால் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்று தலை வலி வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதிலும் கழுத்துடன் தொடர்புடைய நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது கடுமையான தலைவலியை சந்திக்கக்கூடும்.
அதே போன்று சிலருக்கு கைகள் நடுங்குவது வேகமாக செயல்பட முடியாமல் போவது, சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தால் நரம்பு தளர்ச்சி உள்ளது என்று அர்த்தம்.
அதே போன்று,உணர்வின்மை, கவலை, அழுத்தம், கவனம் செலுத்துவதில் சிரமம், குமட்டல், பதட்டம், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை இப்படி பல பிரச்சனைகளை சொல்லலாம்.
இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆண்மைக்குறைவு, சிறுநீரை அடக்கும் தன்மை குறைதல், தலைச்சுற்று, மயக்கம், கை, கால் நடுக்கம், கோபம், அவசரம், பதற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.
செவ்வாழை
நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு படுக்க போகும் முன்பு ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும். இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.
ஆண்மை குறைபாடு இருந்தாலும் நீங்கும். முக்கியமாக இன்று பல இடங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட hybrid பழங்களே கிடைக்கின்றன.
அதனால் உண்மையான பழங்களாக பார்த்து வாங்கி சாப்பிட்டால்தான் இதன் பலன்கள் கிடைக்கும்
பிரண்டை
இதுவும் நரம்பை பலப்படுத்துவதும் உணவாகும். எனவே பிரண்டையை துவையலாக வாரத்தில் மூன்று நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்முடைய இறந்த செல்கள் அனைத்தையும் புதுப்பித்து நம்முடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்கிறது.
அதிலும் பிரண்டையில் பிஞ்சான தண்டுகளாக பார்த்து வாங்கி உரித்து சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி துவையல் சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைக்கீரை
இந்த முருங்கைக்கீரையில்,வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்ற அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளதால் நரம்பு மண்டலம் வலிமை அடைய உதவுகிறது.
எனவே வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கைக்கீரையை சமைத்தோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வர நல்ல பலனை பெற முடியும்.
மேலும் முருங்கைப் பூவை, பசும்பாலில் ஊற வைத்து காய்ச்சிக் குடித்து வந்தால் நரம்பு மண்டலமும் இனப்பெருக்க மண்டலமும் சேர்ந்து பலமடையும்.
அதேபோன்று பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரைகளை உணவில் சேர்த்து வந்தாலும் நரம்புகளுக்கு நல்லது.
கருப்பு உளுந்து
உளுந்தில் நம்முடைய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
மிக முக்கியமாக உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ நம் நம்முடைய ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் நூறு சதவீதம் பலப்படும் என்பது உண்மை.
உண்மையில் இது நம்முடைய எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம் மற்றும் தசை நார் மண்டலம் ஆகிய அனைத்தையும் பலப்படுத்துகிறது.
முக்கியமாக வயதானவர்களுக்கு தங்களுடைய வயசு முதிர்வின் காரணமாக வரும் நரம்பு பலவீனத்தை, உளுந்தை கொண்டே சரி செய்ய முடியும்.
மிக முக்கியமாக கருப்பு உளுந்தை தோல் நீக்காமல் தோலுடன் முழு உளுந்தாக பயன்படுத்த வேண்டும்.
ராகி, வெந்தயம், கொள்ளு
இது ஒரு நரம்புத்தளர்ச்சி போக்கும் மிக அருமையான உணவாகும். அதாவது ராகி, வெந்தயம், கொள்ளு. இது மூன்றையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு இதை தண்ணீரில் வைத்து முளைகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
இப்படி சாப்பிடு பொழுது இதன் மீது தேன் கலந்தும் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் எடுத்து வரும் பொழுது நரம்புத்தளர்ச்சி நீங்கி பழைய நிலைக்கு திரும்புவீர்கள்.
உங்களுக்கு தினமும் எடுக்க முடியவில்லை என்றாலும் வாரத்தில் ஐந்து நாட்களாவது எடுத்துக் கொள்ளுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மீன் உணவுகள்
பொதுவாக நரம்புத்தளர்ச்சி என்பது வைட்டமின் B 12 குறைபாட்டாலும் ஏற்படக்கூடும். இந்தவைட்டமின் B 12 சைவ உணவைக் காட்டிலும் அசைவ உணவுகளில்தான் அதிகம் உள்ளது.
இந்த சத்தானது இதயத்திற்கு வலு சேர்ப்பதோடு நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மாத்தி மீன் சாலமன், கெளுத்தி, சூறை போன்ற மீன்களில், ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களோடு, வைட்டமின் B 12 சத்து நிறைந்துள்ளது. அதே போன்று இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் என்பது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நம்முடைய உடல் உறுதிக்கும், நரம்பு செல்கள் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது.
ஜாதிக்காய்
நரம்பை பலப்படுத்த ஜாதிக்காய் உதவும். எனவே இரவு படுக்க செல்லும் முன்பு ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வரும் பொழுது மன அழுத்தத்தைப் போக்கி நரம்புகள் வலிமை அடையும்.
மேலும் நல்ல தூக்கத்தையும் தரும். குழந்தை பேரின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச்சிறந்த மருந்தாகும்.
மாதுளை பழம்
மாதுளை பழம் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் ஒரு அற்புதமான மருந்தாகும். எனவே தினமும் ஒரு மாதுளை பழத்தை படுக்க செல்லும் முன்பு சாப்பிட்டு வர வேண்டும்.
இப்படி, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரம்பு பாதிப்புகள் அனைத்தும் ஒருசேர குணமாகிறது. ஒரு மண்டலம் என்பது நாற்பத்தி எட்டு நாட்களாகும்.
இதிலுள்ள சத்துக்கள் நரம்பு மண்டலத்திற்கு ஒரு அற்புதமான சக்தியைக் கொடுக்கிறது. மேலும் நரம்பு மண்டல பாதிப்பால் தூக்கமின்மையுள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பந்தமான தாம்பத்திய குறைபாடுகளைப் போக்கவும் உதவுகிறது.
பேரீச்சம் பழம்
இதை தினமும் பசும்பாலுடன் சேர்த்து பருகி வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும். தசை நார்கள், நரம்புகள் அனைத்தும் ஒரு சேர பலனடைகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெற முடியும்.
அமுக்கிரா கிழங்கு பொடி
இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது மிக மிக அற்புதமான மருந்து. இந்த அமுக்கிரா கிழங்கு பொடியை அரை தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டு
இது வாத நோய், நரம்புத்தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனச்சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு, இவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
மேலும் இது பலகீனமான உடலுக்கு புதுத் தெம்பைத் தரும். இதயத்துடிப்பை சீராக்கும். மன உளைச்சலைப் போக்கக் கூடியது.
தவிர்க்க வேண்டியவை
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்க, தவிர்க்க வேண்டியவை என்று பார்த்தால் மது மற்றும் புகை பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
அதே போன்று துரித உணவுகள் மற்றும் துரித உணவுகளை குறைத்துக் கொண்டு இயற்கை உணவுகளின் மேல் கவனத்தை செலுத்த வேண்டும்.
மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சியும் நீங்கும். உங்கள் ஆரோக்கியம், பல மடங்கு நிச்சயம் அதிகரிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil
- வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil
- அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
9 Comments
Comments are closed.