நல்லெண்ணெய் மருத்துவ பயன்கள் Nallennai Benefits in Tamil

 நல்லெண்ணெய் மருத்துவ பயன்கள் |  Nallennai Benefits in Tamil

தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய்.

“வைத்தியனுக்கு கொடுப்பதை வானியனுக்கு கொடு” என்ற பழமொழியும் உண்டு. அதாவது, நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பது இதன் பொருள்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இட்லி பொடி மற்றும் மற்ற உணவுகளோடும், கலந்து சாப்பிடலாம்.

இவாறு அன்றாட நமது உணவுகளில் நல்லெண்ணெயை இருக்குமாறு பார்த்துக் கொண்ட நமக்கு கிடைக்கக்கூடிய அபார நன்மைகளை பற்றி பார்ப்போம் .

பெயர் காரணம்

பொதுவாக எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் எள்ளு எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்று சொல்வதற்கு காரணம் மற்ற எண்ணெய்களை விட சிறந்தது என்று எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

gingelly oil uses in tamil

செரிமானம்

செரிமான சீராகும். நல்லெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று செரிமானம் சீராக நடைபெறும்.இதனால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

எலும்பு

எலும்புகள் பலமடையும். நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் துத்தநாகம் வளமாக இருப்பதால் Austria forest போன்ற எலும்புமச்சை நோய் வராமல் தடுக்கும். எலும்புகளும் வலுப்பெறும்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்கள் அதிகம் நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதனால்தான், பெண்கள் பருவம் அடையும் போது நல்லெண்ணெயை குடிக்க கொடுப்பார்கள்.

nallennai oil benefits in tamil

சருமம் பளபளப்பாகும்

சருமத்தின் பொலிவை அதிகரிக்கக்கூடிய குழாயின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆற்றல் இந்த நல்லெண்ணெய்க்கு உண்டு.

நல்லெண்ணெயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சருமம் பளபளப்பாகும்.

கெட்ட கொலஸ்ட்ரால்

இந்த நல்லெண்ணெய் கெட்ட கொலஸ்ட்ரால் ஐ குறைக்கும். நல்லெண்ணெயில், லெசித்தின் எண்ணும் பொருளும், லினோனிக் என்னும் அமிலமும் இருப்பதால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

முக்கியமாக, நல்லெண்ணெயை, சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் உண்டாவது தடுக்கப்படும். உடல் சூடு குறையும்.

ஆஸ்துமா குணமாக

நல்லெண்ணெயில்,ஆன்டி பாஸ்மோல் நிறைந்து காணப்படுவதால், சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும். அதிலும், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

நல்லெண்ணெய் மருத்துவ பயன்கள்

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது, இருதயத்திற்கு நல்ல பாதுகாப்பு அளிப்பதோடு, இருதய நோய் வராமலும் தடுக்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு தடுக்கப்படும். நல்லெண்ணெயில் அதிகப்படியான மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடுவதால், நீரிழிவு நோய் வருவது தடுக்கப்படும்.

உடல் சூடு

உடல் சூட்டினால் வயிற்று வலி மற்றும் சிறுநீர் பிரியும் போது எரிச்சல் போன்ற பிரச்சனையினாலே அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெயை சிறிது அடிவயிற்றில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நல்லெண்ணெய் பயன்கள்

புற்றுநோய்

நல்லெண்ணெய் புற்றுநோய் செல்களை அழிக்கும். நல்லெண்ணெயில் பைரேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் இருப்பதால் இதனை உணவில் சேர்க்கும் போது உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மேலும்

நல்லெண்ணெயை கொண்டு வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வர உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்படும்.

மேலும் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்வு தடுக்கப்படும். உடல் புத்துணர்ச்சி பெறும்.கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அன்றாட உணவில் நல்லெண்ணெய் இருக்குமாறு பார்த்துக் கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் மட்டுமில்லாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

இதனையும் படிக்கலாமே

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil(Opens in a new browser tab)

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

3 Comments

  1. Pingback: fortnite hacks

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning