சோம்பு டீ பயன்கள் | Sombu Tea Benefits in Tamil
பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிற சோம்பு பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இதற்கு அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் உண்டு.
சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி இதை சேர்க்காத உணவுகளே இல்லை என்று சொல்லலாம். இது உணவிற்கு மணத்தை கொடுப்பதோடு நிறைய மருத்துவ நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
சோம்பு டீ தயாரிக்கும் முறை
இந்த சோம்பை கொண்டு டீ தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நமது உடலில் பல அற்புதங்கள் செய்யக்கூடியது.
இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்து அதில் ஒரு தேக்கரண்டி சொம்பு சேர்த்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
பிறகு அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக குடித்து வந்தால் மூளை, நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
அஜீரணம்
உங்களுக்கு அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் இந்த சோம்பு டீயை தினமும் குடித்து வரலாம். இது இரைப்பை நொதிகளின் உற்பத்தி ஊக்குவிப்பதால் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கிறது.
மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் மலச்சிக்கல் அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
செரிமானம் மேம்பட
எனவேதான் அதிகமாக சாப்பிடும் பொழுது சிறிது சோம்பை சாப்பிடக் கொடுக்கிறார்கள். இன்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பு தருவதை பார்த்திருப்பீர்கள்.
குறிப்பாக, மசாலா நிறைந்த அசைவ உணவுகளை சாப்பிடு நாட்களில், கட்டாயம் இதை எடுத்துக் கொள்ளலாம். செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலும் ஏற்படாது.
உடல் ஆரோக்கியம்
இந்த சோம்பில் உள்ள பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் தமனிகள் வழியாக ரத்தம் சீராக செல்ல அனுமதிக்கிறது.
எனவே இந்த சோம்பு டீயை சாப்பிட்டு வரும் பொழுது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வகையான நோய்களைத் தடுக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த சுத்திகரிப்பு
இந்த சோம்பு teaயை குடித்து வரும் பொழுது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலங்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
உடல் அமைப்பு
இது வயிற்றை சுற்றியுள்ள, தேவையற்ற சதைப் பகுதி கரை தொப்பையை குறைத்து, சரியான உடல் அமைப்பை தருகிறது.
உடல் எடை
முக்கியமாக இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும்.
கண்பார்வை
இந்த டீயை குடித்து வரும் பொழுது, கண்பார்வையை மேம்படுத்தும். காரணம் இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
முக்கியமாக நாம் சாப்பிடு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் திறம்பட உறிஞ்சுவதற்கும் இந்த சோம்பு டீ உதவுகிறது.
பெண்கள் ஆரோக்கியம்
பெண்களை மாதவிடாய் காலங்களில் இந்த டீயை குடித்து வரும் பொழுது மாதவிடாய் வலி இருக்காது. முக்கியமாக இது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையையும் சரி செய்கிறது.
புற்றுநோய்
இது வயிறு, சருமம், மார்பக புற்றுநோய் போன்ற, புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. காரணம் இது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியான free radicalகளை உடலை விட்டு வெளியேற்றுகிறது.
அதேபோன்று, உடல்ல இருந்து நச்சுகளை முற்றிலும் வெளியேற்றுவதால் சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதையும், தடுக்கிறது.
வாய் துர்நாற்றம்
இதற்கு, நம் உணவு குழாயில், குடிகொண்டுள்ள பாக்டீரியாக்கள்தான் காரணம். இந்த பாக்டீரியாக்களை, எதிர்த்து போராடும் ஆற்றல் இந்த சோம்பிற்கு உண்டு.
தைராய்டு
தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சோர்வு நீங்க, காலை, மாலை டீ. காபி குடி நிறுத்திவிட்டு இந்த சோம்பு டீயை குடித்து வந்தால் நல்ல மாற்றங்களை காண முடியும்.
எனவே இங்கே சொன்னது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சோம்பு டீயை தொடர்ந்து குடித்து பாருங்கள் நிச்சயம் பலன்கள் கண்கூடாக தெரியும்.
இதனையும் படிக்கலாமே
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
- மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
3 Comments
Comments are closed.