திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இந்த மூன்று காய்களும் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவை.
ஒரு சிலர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி, மலச்சிக்கல் இது போன்ற பல நோய்கள்னால அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு மருந்து இந்த திரிபலா.
பல நோய்களுக்கான ஒரு மருந்து இந்த திரிபலா. திரிபலாவை சித்தர்கள் காயகல்ப மூலிகை என்று கூறுகின்றனர்.
காயகல்பம் என்றால் என்ன?
பொதுவாக நம் உடல் முழுவதுமே ஒரு ஏழு வகையான திசுக்களால் ஆனது. தசை ஒரு வகை திசுக்களானது. எலும்புகள் ஒரு வகை திசுக்களால் ஆனது. நரம்பு மண்டலம் ஒரு வகை திசுக்களானது.
நம் உடலில் இருக்கக்கூடிய இருதயம், கணையம், சிறுநீரகங்கள் என, ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு விதமான திசுக்களால் ஆனது.
இப்படி உடலில் இருக்கக்கூடிய ஏழு வகையான திசுக்களையும் எந்த ஒரு உணவு ஊட்டமளித்து பலப்படுத்தி நீண்ட நாள் பாதுகாக்கிறதோ அதைத்தான் சித்தர்கள் காயகல்ப மூலிகை என்று கூறுகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரிபலாவை தினமும் நாம் சாப்பிட்டு வரும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன யாரெல்லாம் இந்த திரிபலாவை சாப்பிடலாம் என்பதனை பற்றி பார்ப்போம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து திரிபுலா. சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவ முறைகள் மலச்சிக்கலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடிய ஒரு சிறந்த மருந்து இந்த திரிபலா.
மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இரவு உணவுக்கு பிறகு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து குடித்து வர இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த கழிவுகளையும் வெளியேற்றி மலச்சிக்கலை வந்து குணமாக்கும்.
இது மட்டுமில்லாமல், வயிற்றில் இருக்கக்கூடிய குடல் புழுக்களையும், கிருமிகளையும் அழித்து வெளியேற்றக் கூடியது இந்த திரிபலா.
இதன் மூலமாக நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக உடலில் போய் சேருவதோடு வயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் என செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் குணமாக்கும்.
எனவே செரிமான மண்டலம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையால அவதிப்படுபவர்களுக்கும், மிகச்சிறந்த ஒரு மருந்து, இந்த திரிபலா.
உடல் எடை
அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது திரிபலா.
திரிபுலா உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
குறிப்பாக உடல் எடைக்கு காரணமாக இருக்கக்கூடிய கொழுப்புகளை குறிவைத்து அளிக்கக்கூடியது இந்த திரிபலா.
இதன் மூலமாக நல்ல கட்டுக்கோப்பான உறுதியான உடலமைப்பையும் தரக்கூடியது இந்த திரிபலா.
எனவே அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் இந்த திரிபலாவை தினந்தோறும் சாப்பிட்டு வர நல்ல கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
ரத்த சோகை
பொதுவாகவே, புதிய சிவப்பணுக்கள் எலும்புகளில் இருக்கக்கூடிய எலும்பு மச்சிகள்லதான் உருவாகும்.
இந்த எலும்பு மச்சிகளுக்கு தேவையான ஊட்டம் அளித்து புதிய சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவக்கூடியது இந்த திரிபலா.
இது மட்டும் இல்லாமல் திரிபாலால பொடியில் இருக்கக்கூடிய நெல்லிக்காயில் வைட்டமின் சி யும், இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளது.
இந்த சத்துக்கள் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை எளிதில் குணமாக்கும்.
இரத்த சர்க்கரை
இரண்டாம் வகை சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது திரிபலா.
திரிபலாலவில் இருக்கக்கூடிய தான்றிக்காய் கணையத்தை தூண்டி இன்சுலின் உற்பத்தி அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
எனவே சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த திரிபலாவை தினமும் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு சர்க்கரை நோயினால் வரக்கூடிய இருதய அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை மங்குதல், போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக் கூடியது திரிபலா.
பற்களை பலமாக்கும்
திரிபுலாலநுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு இதில் அதிக அளவில் உள்ளது.
இது பற்களில் இருக்கக்கூடிய பல்கிருமிகளை அழித்து பற்சொத்தை ஏற்படாமல வந்து தடுக்கும்.
பற்களில் படியக்கூடிய மஞ்சள் கறை, மற்றும் ஈறுகள்ல உண்டாகக்கூடிய ரத்தக் கசிவு, போன்றவற்றையும் வராமலும் தடுக்கும்.
மேலும், பல் ஈறுகளையும் வலுவாக்கக் கூடியது திரிபுலா. ஆகவே மற்ற chemical நிறைந்த, பற்பசைகளைத் தவிர்த்துவிட்டு திரிபலா பொடியை பயன்படுத்தி வர பற்கள் பலமாகும்.
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்
ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படக்கூடிய சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளது திரிபுலா.
திரிபலா பொடி உடன் சிறிது நீர் சேர்த்து, தலையில் தேய்த்து குளித்து வர இதில் இருக்கக்கூடிய பூஞ்சை எதிர்ப்பு மற்றும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக பொடுகு, தலைமுடி உதிர்வு, போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும்.
இது மட்டும் இல்லாமல் தலைமுடி, நல்ல கருமையாக வளர்வதற்கும் உதவி செய்யும்.
இது மட்டுமில்லாமல் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது திரிபுலா.
திரிபலா பொடியை, சருமம் மற்றும் முகத்தில் முகப்பூச்சாக பயன்படுத்தி வர சரும வறட்சி சரும எரிச்சல், முகப்பருக்கள் கரும்புள்ளிகள் போன்ற சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகிறது.
இது மட்டும் anti aging properties அதிகம் நிறைந்தது, திரிபுலா. இதன் காரணமாக இளம் வயதில் ஏற்படக்கூடிய தோல் சுருக்கங்களைத் தடுத்து என்றும் இளமையான தோற்றத்தோடு இருக்க உதவியாக இருக்கிறது இந்த திரிபலா பொடி.
புற்றுநோய்
திரிபலாலவில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. செல்கள் சேதமடைவதை தடுப்பதோடு, வீக்கம் உண்டாவதையும் தடுக்கும்.
மேலும் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்கள்ஐ, உடலில் இருந்து வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கும்.
குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
கண் பார்வை
கண் பார்வை பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது திரிபலா. ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி உடன் தேன் அல்லது நெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கண் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
மேலும் திரிபுலா நீரைக் கொண்டு கண்ணைச் சுற்றிலும் மசாஜ் செய்து வர கண்களில் உண்டாகக் கூடிய எரிச்சல் , வறட்சி, கண்கள் சிவந்து காணப்படுவது, மேலும் கண்களில் உண்டாகக்கூடிய கிருமி தொற்று, கண்புரை வளர்ச்சி என கண் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும், வராமல் தடுக்கக் கூடியது இந்த திரிபலா.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய்கள் வராமல் பாதுகாக்கும் திரிபுலா. இதில் கிங் ஆப்ஃ மெடிசின் என சொல்லக்கூடிய கடுக்காய், இளமையை பாதுகாக்கக்கூடிய நெல்லிக்காய், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த தான்றிக்காய் என மூன்று சக்திவாய்ந்த மூலிகைகள் சேர்ந்தது உருவாக கூடிய திரிபலா என்பதனால் நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நோய்களையும் குணமாக்க ஒரு சிறந்த மருந்தாக உள்ளது இந்த திரிபலா.
இதன் காரணமாக life style diseaseன்னு சொல்லக்கூடிய அதிக உடல் எடை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களையும் வராமல் தடுக்கக்கூடியது இந்த திரிபுலா.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
ஒரு வயது குழந்தை முதல் நூறு வயது முதியவர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலில் எந்த ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமா இருப்பவர்களுக்கும் தடுப்பு மருந்தாக இந்த திரிபலாவை எடுத்துட்டு வரலாம்.
உடலை ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கக்கூடியது இந்த திரிபலா.
இதனையும் படிக்கலாமே
- முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
- முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakathan keerai benefits in Tamil
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
7 Comments
Comments are closed.