மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு | Motion Problem in Tamil
மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் மலச்சிக்கல்தான் பல நோய்களுக்கு மூல காரணமாகவும் இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இன்றைக்கு நமது மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கம் என்றும் சொல்லலாம்.
முதியவர்கள் எடுத்துக்கொண்டால் இவர்களுக்கு வயது ஏற, ஏற, செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். அதுமட்டுமல்ல முதுமையில் உணவுமுறை மாற்றம் உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது இவையும் காரணமாக சொல்லலாம்.
மேலும், மூட்டு வலி, இடுப்பு வலி உள்ள முதியவர்கள் மலம் கழிப்பதை தவிர்ப்பதால் அவர்களுக்கு எளிதில் மலச்சிக்கல் வருகிறது.
மலசிக்கலுக்கான காரணம் என்ன ?
பொதுவாக நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் அதிக வியர்வையால் நாம் அருந்துகின்ற தண்ணீர் வியர்வையாக வெளியேறி விடுகின்றன.
எஞ்சியுள்ள நீர்மம் பெருங்குடலால் உறிஞ்சப்படுவதால் மலம் கெட்டியாகி விடுகிறது. மேலும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும், எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதாலும், உணவில் காய்கறிகள், பழங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதாலும், நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடாததாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் அதிக இரசாயன செயல்முறை செய்யப்பட்ட உணவு மைதா உணவில் செய்யப்பட்ட உணவுகளான, பரோட்டா, பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அதே போன்று மது, புகைப்பழக்கம், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
முக்கியமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தவுடன் கழிவறைக்கு சென்று விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டு மலம் கழிப்பதை தள்ளிப் போடக் கூடாது.
தீர்வு
எவ்வளவு வேலை இருந்தாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க கூடாது. பொதுவாக, எந்த ஒரு பிரச்சனைக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும். அதே போன்று மலச்சிக்கலையும் கண்டிப்பாக முற்றிலும் குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் மலச்சிக்கலைப் போக்கும் எளிதான சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
எலுமிச்சை தேன்
முதலில் எலுமிச்சை பழம் ஒரு டம்ளர், குடிக்கும் நிலையில் உள்ள சூடான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால் போதும் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உடலும் சுத்தமாக இருக்கும்.
உலர்ந்த திராட்சை
உலர்ந்த திராட்சையில் உள்ள நார்ச்சத்து மற்றும் டார்டாரிக் அமிலம் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே தினமும் கொஞ்சம் உலர்ந்த திராட்சையை இரவு படுக்கும் முன்பு மென்று சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் சூடான வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும்.
அதே போன்று உலர் திராட்சையை நன்றாக கழுவி பசும்பாலுடன் போட்டு, காய்ச்சி ஆற வைத்து அப்படியே சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்துவிடும்.
மேலும் இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்
சீனா புல்
இது ஒரு கடற்பாசி. பொடியாக நாட்டு மருந்து கடைகளில் கிடக்கிறது. தண்ணீரில் போட்டால் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு உப்பி பறித்துவிடும்.
இதை அளவான தண்ணீரில் சேர்த்து வேக வைத்தால் அல்வா போன்று வந்துவிடும். இதை இரவு படுக்க செல்லும் முன்பு இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவிட்டு படுத்தால் காலையில் மலம் எளிதாக கழியும்.
விளக்கெண்ணெய்
இது மற்ற எண்ணெய்களை போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும், பிசுபிசுப்பு தன்மையுடனும் காணப்படும். நம் முன்னோர்கள் குழந்தைகளை அடிக்கடி விளக்கெண்ணெய் குடிக்க வைத்து மலத்தை வெளியேற வைத்து வயிற்றை சுத்தமாக வைத்திருந்தார்கள்.
கிராமப்புறங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாக பயன்படுத்துகிறார்கள் எனவே, காலையில் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும்.
நல்ல தரமான கலப்படம் இல்லாத எண்ணெயாக பார்த்து வாங்க வேண்டும்.
வெந்தயம்
அஞ்சரை பெட்டியில் முக்கிய இடம் பிடிக்கும் வெந்தயம், உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கலையும் போக்கக்கூடியது.
இதற்கு முதல் நாள் இரவு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் தண்ணீரையும் குடித்துவிட வேண்டும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலைப் போக்கிவிடும்.
சீரகம்
ஒரு தேக்கரண்டி சீரகத்தை வேண்டிய அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தாலும் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
கடுக்காய் பொடி
மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. தினமும் காலையில், வெறும் வயிற்றில், அரை தேக்கரண்டி கடுக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும்.
உண்மையில் இது ஒட்டுமொத்த வயிற்றையுமே சுத்தம் செய்யும். எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடியது.
திரிபலா பொடி
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மூன்றும் கலந்த திரிபலா பொடியும் மலச்சிக்கலை போக்கக்கூடியது. இதை தினமும் இரவில் அரைதேக்கரண்டி அளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் முற்றிலும் சரியாகும்.
இந்த திரிபலா பொடி சர்க்கரை நோய் உள்பட பல நோய்களை போக்கக்கூடியது.
கீரை வகைகள்
மலச்சிக்கல் தீவிரமாக உள்ளவர் பசலைக் கீரை, முளைக்கீரை, முருங்கைக் கீரை, இதில் ஏதேனும் ஒன்றை தேங்காய் சீரகம் சேர்த்து உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும்.
மேலும்
நீர்மோர், இளநீர், நீராகாரம், இவற்றை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படுவதை, தடுக்க முடியும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குறைந்தது எட்டு முதல், பத்து டம்ளர் தண்ணீராவது தினமும் குடிக்க வேண்டும்.
அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
5 Comments
Comments are closed.