கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Kambu Health Benefits in Tamil
இன்று பலரும் சிறுதானியங்கள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சிறுதானியங்களில் அதிக சத்துக்கள் கொண்ட வரிசையில் கம்பு மிக முக்கியமானது.
பலருக்கும் கம்பு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். ஆனால் இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது? இதை எப்படி சாப்பிட வேண்டும் சாப்பிட்டால், எந்தெந்த குறைபாடுகள் நீங்கும்? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? இப்படி நிறைய சந்தேகங்களுக்கு இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.
கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Kambu Health Benefits in Tamil
கம்பில் உள்ள சத்துக்கள்
இந்த கம்பில் இறைச்சி முட்டை போன்ற அசைவ உணவுகளுக்கு இணையாக புரத சத்து அதிக அளவு நார்ச்சத்தும் மிகக்குறைந்த அளவு கொழுப்பு சத்தும் உள்ளது.
அதே போன்று இதில் அதிக அளவு வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம்,தாமிரம், துத்தநாகம், குரோமியம் போன்ற தாதுக்கள் வளமாக நிறைந்துள்ளது.
இரும்பு சத்து
உண்மையில் பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவு இது. முக்கியமாக அதிக இரும்பு சத்து கொண்டுள்ள உணவுகளில் கம்பும் ஒன்று.
பொதுவாக இரும்பு சத்து குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு மனவளர்ச்சியும் பாதிக்கிறது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுகிறாரகள்.
எனவே வளரும் குழந்தைகளுக்கு கம்பில் செய்த உணவுகளை சாப்பிட பழக்குவது நல்லது.
பெண்கள் ஆரோக்கியம்
பெண்கள் கம்பு உணவை சாப்பிட்டு வருவது நல்லது. காரணம் இவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் மற்றும் பிரசவ காலங்களில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால் இவர்களுக்கு ரத்த சோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
எனவே இவர்கள் கட்டாயம் கம்பு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து தசைகளுக்கு நல்ல இருக்கத்தை தந்து உடல் வலிமையை அதிகரிக்கும்.
உடல் எடை குறைய
கம்பில் உள்ள pidic அமிலம், கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கிறது.
இந்த கம்பில் மற்ற தானியங்களை போன்று, அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. எனவே இதை சாப்பிடு நீண்ட நேரத்திற்கு பசி தாங்கும்.
இப்படி வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் கண்ட கண்ட உணவுகளின் மேல் நாட்டம் ஏற்படாது. இதனால் குறைவான கலோரிகளை சாப்பிட வழிவகுப்பதால் எடை குறைய உதவுகிறது.
நோய் எதிர்ப்புசக்தி
இதில் உள்ள அதிக அளவு பீட்டா கரோட்டின் தோல் மற்றும் கண்பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதே போன்று, இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு திறன் மேம்பட்டு உடலை நோய்கள் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளும்.
இளமை தோற்றம்
இது ரத்த அணுக்களில் ஆக்சிஜன் பயன்பாட்டை அதிகரித்து சுருக்கங்களைத் தடுத்து சரும பொலிவைக் கொடுக்கும். இதனால் முதுமை வர தாமதமாகும்.
கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Kambu Health Benefits in Tamil
தலைமுடி ஆரோக்கியம்
இன்று பலரும் சந்திக்கும், பொதுவான ஒரு பிரச்சனை முடி உதிர்தல். பொதுவா முடி வளர்ச்சிக்கு உதவும் கரோட்டின் என்ற புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் பொழுது முடி உதிர்தல் நிற்கும்.
பித்த அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
அதே போன்று இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் உடல் செல்களில் சேதம் விளைவிக்கும் ஃபிரீ ராடிக்கல் உடன் போராடக்கூடியவை.
இதய ஆரோக்கியம்
கம்பில் உள்ள மெக்னீசியம் சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் பொட்டாசியம் நிறைந்த கம்பு இதயத்தின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதனால் தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், மாரடைப்பு போன்ற, கடுமையான இதயம் சார்ந்த நோய் தடுக்கலாம்.
சர்க்கரை நோய்
நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமான கம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது.
அரிசி மற்றும் கோதுமை இவற்றுடன் ஒப்பிடும் பொழுது இந்த கம்பு மிக குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது.
வகை இரண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பை உணவில் சேர்த்து வர ரத்த சர்க்கரையின் அளவே கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மலசிக்கல்
வயிற்றுப்புண் செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வேளை உணவாக கம்பு எடுத்துக் கொண்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி செரிமானம் துரிதமாகும்.
நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இதனால் குடலும் தூய்மையாகும்.
கல்லீரல் ஆரோக்கியம்
அரிசி, சோளம், கோதுமை போன்ற இவற்றில் பசையம் உள்ளதால் வீக்கம், வாய்வு, குடல் எரிச்சல் போன்ற இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால் இந்த கம்பில் பசையம் கிடையாதுஉண்மையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை கம்பு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Kambu Health Benefits in Tamil
கம்பு உணவுகள்
இந்த கம்பை கொண்டு கூழ், கஞ்சி, களி, தோசை, இட்லி, லட்டு, உப்புமா, இடியாப்பம் என்று, அரிசியில் செய்யக்கூடிய, அத்தனை உணவுகளையும், இதிலும் செய்து சாப்பிடலாம்.
இதனை வடித்து வெள்ளை சாதத்திற்கு பதிலாகவும் சாப்பிடலாம்.
உண்மையில் இது போன்ற சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தால் குச்சி ஊன்றும் வயதிலும் கூட யாருடைய உதவியும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வாழ முடியும்.
இதனையும் படிக்கலாமே
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
- கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
7 Comments
Comments are closed.