மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து | Piles Home Remedy in Tamil

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து | Piles Home Remedy in Tamil

மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்து இருந்தாலே அதற்கு அடுத்த நிலை பைல்ஸ் என்று சொல்லப்படும் மூல நோய்தான். மலவாயில் புண் ஏற்படுவதால் சரியாக உட்கார முடியாது.

மலவாயில் கழிவுகளை வெளியேற்றிய பின்னரும் வெளியேற்றும் பொழுதும் கடுமையான வலி ஏற்படுவதோடு ரத்தப்போக்கு அரிப்பு போன்ற ஏற்படும்.

இதனால் எப்பொழுதும் ஒரு வித கவலை இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம்.

எனவே மலச்சிக்கல் வந்தால் அதனை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட வேண்டும். மூல நோயை நிரந்தரமாக குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை இப்பொழுது பார்ப்போம். இதன் மூலம் மூலை நோய் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

piles home remedy in tamil

மாதுளைத்தூள்

இந்த செவப்பு நிற மாதுளை பழத்தின் தோல் மூல பிரச்சனைய சரி செய்யக்கூடியது. அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்து வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

மஞ்சள்

மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் தன்மை இதில் அதிகம் எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து தினமும் குடித்து வந்தால் மூல பிரச்சனை இயற்கையாகவே சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை

நீர் வறட்சியும் மூலத்திற்கு பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால் உடலில் வறட்சி குறைந்து மூலம் சரியாகிவிடும்.

veli moolam treatment in tamil

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி அதனை இரவில் படுக்கும் பொழுது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு மீதியை, மாலையில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் மூல பிரச்சனை சரியாகிவிடும்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூலத்தினால் ஏற்படும் ரத்தப்போக்கை சரிசெய்து விடலாம்.

அதுமட்டுமல்லாமல் அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும். முக்கியமாக மூல நோய் உள்ளவர்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்சத்து உணவுகள்

காராமணி பயிர், உளுத்தம் பருப்பு, ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய், பீன்ஸ், பசலைக் கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும். மேலும் உலர் பழங்களில் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளது.

இது உணவுப் பொருட்கள் செரிமானம் அடையும் பொழுது உண்டாகும் திரவத்தை குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

மூலம் நோய்க்கு எளிய மருந்து

மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் கிழங்குகளில் கருணை கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இங்கே சொல்லப்பட்டவைகளை மூல நோய் உள்ளவர்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக மூல நோயிலிருந்து நிரந்தர விடுதல பெற முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

3 Comments

  1. Pingback: evaporator

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning