ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil

ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil

ஆஸ்துமா என்பது பொதுவான உடல்நலப் பிரச்சனை. இன்றைய கால கட்டத்தில் நிறைய பேர் சுவாசக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆஸ்துமா, பரம்பரை மற்றும் தூசு நிறைத்த சுற்றுப்புறத்தினாலும் கூட ஒருத்தருக்கு வரலாம். இதற்க்கு நிரந்தரமான தீர்வு கிடையாது.

ஆனால் முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதினால் கட்டுப்பாடோடு வைத்து கொள்ளலாம்.

அது மட்டும் மட்டும் இல்லாமல் ஆஸ்துமா நோயாளிகள் சரியான உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.
அதிலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ள உணவுகளை அதிகமா சாப்பிடுவைத்து ஆஸ்துமாவை கட்டுப்பாட்டோட வைத்து கொள்ள உதவும்.

இப்பொழுது ஆஸ்துமா இருப்பவர்கள் எந்த உணவுகளை சாப்பிடலாம்? எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதனை பற்றி பார்ப்போம்.

மூச்சு விடுவதில் சிரமம்

கேரட்

வைட்டமின் எ மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகமாக உளள்து. இது ஆஸ்துமாக்கு மட்டும் இல்லாமல் சருமத்திற்கும் நல்லது.

சிவப்பு குடைமிளகாய்

இது நுரையீரலை நன்றாக செயல்பட வைக்கும். இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

பொதுவாக ஆஸ்துமா இருப்பவர்களுக்குவைட்டமின் டி குறைவாக இருக்கும்.

ஆகவே அவர்கள் அதிக அளவுல் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் இல்லாமல் ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது. அதனால் தினமும் பாகற்காய் ஜூஸ் குடிச்சிட்டு வந்தால் உடல் சுத்தமாகுவது மட்டும் இல்லாமல் ஆஸ்துமாவையும் கட்டுப்பாட்டோட வைத்துக் கொள்ளும்.

ஆஸ்துமா முற்றிலும் குணமாக

 

வைட்டமின் சி

வைட்டமின் சி உள்ள பழங்களான கிவி, ஆரஞ்சு போன்றவை நுரையீரல்ல இருக்க வீக்கம் அலர்ஜியை சரி செய்யும்.

இதனால் மூச்சுத்திணறல் தடுக்கப்படும். கொய்யாப்பழத்தில் அலட்சிய எதிர்ப்பு பொருள் அதிகமாக இருப்பதினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது சிறந்த உணவுப் பொருள்.

மிளகாய்

மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துற சுவாச குழாயில இருக்கிற சளியை நீக்குறதுக்கு மிளகாயை உணவுல சேர்த்துக் கொள்வது நல்லது.

இதில் இருக்க ஆன்டிஆக்ஸிடென்ட் இதுக்கு நல்ல நிவாரணத்தை தரும்.

பூண்டு, இஞ்சி

பூண்டும், இஞ்சியும் அற்புதமான நுண்ணுயிர்க்கொல்லி. ஆஸ்துமாவுக்கு எதிராக சிறப்பா செயலாற்றும்.

இரண்டுமே மிகச்சிறந்த அழற்சி எதிர்ப்பு ஆக செயல்படக் கூடியவை.

அதிமதுரம்

இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறையில் மிக முக்கியமான இடத்தை வகிக்குது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் சீன மருத்துவத்திலயும் மிகச் சிறந்த மருந்தாக அதிமதுரம் கருதப்படுது.

நுரையீரலின் நுண் துளைகள்லயும் மூச்சுக் குழாயிலயும் மிகச் சிறப்பா செயல்பட்டு ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

மக்னீசியம்

உடலில் மக்னீசியம் குறைபாடு இருப்பவர்கள் ஆஸ்துமா பிரச்சனையினால் பாதிக்க படுகின்றனர் பல ஆய்வுகள் கூறுகின்றது.

குறிப்பாக குழந்தைகளுக்குத்தான் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. நம் மூச்சு மண்டல வழிப்பாதையை சீராக்குவதில் மக்னீசியம் முக்கிய பங்கு வகிக்குது. எனவே மக்னீசியம் அதிகமா இருக்க கூடியம் மஞ்சள் நிற பழங்கள் எடுத்து கொள்வது நல்லது.

சாப்பிடக்கூடாத உணவுகள்

ஆஸ்துமாவுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் இருக்க மாதிரி சாப்பிடக்கூடாத உணவுகளும் உள்ளது.

பனிக்காலத்தில் மட்டுமாவது இவற்றை தவிர்ப்பதன் மூலமாக ஆஸ்துமாவின் கடுமையை எதிர்கொள்ளலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள் இயல்பாவே நெஞ்சுல் கபத்தை உருவாக்கும் சளி எனும் திரவத்தை பெருக்கும் இயல்புடையது.

அளவுக்கு அதிகமாக இதை பனிக்காலத்தில் எடுத்துக்கொள்வதினால் சளி, நெஞ்சடைப்பு, மூக்கடைப்பு, மூச்சுத்திறல் போன் , பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

எனவே பால் பொருட்களிடம் இருந்து கவனமாக இருப்பது நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு அது ஆஸ்துமாவை தூண்டும். அதே போன்று சோயா பொருட்கள் மற்றும் கோதுமையும் சில சமயங்கள்ல ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.

வாழைப்பழம், பப்பாளி, அரிசி, சர்க்கரை போன்றவை உடலில் சளியை உருவாக்கும் உணவுகள்.

ஆஸ்துமா என்றால் என்ன

டீ, காபி

மேலும் காபி, டீ, சாஸ் மற்றும் மதுபானங்கள் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை, சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தும்.

நட்ஸ்

நட்ஸ் ஆரோக்கியமான உணவுப் பொருள்தான். இருந்தாலும் அது ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறவங்க சாப்பிட்டால் அது ஆஸ்துமாவை தீவிரமாக்கி நிலைமையை மோசமாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு

Fast food, பதப்படுத்தப்பட்ட உணவுகள், junk foods எனப்படும் நொறுக்குத்தீனிகள் இது எல்லா வகையிலேயும் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை.

குறிப்பாக ஆஸ்துமா இருக்கவங்கள் பனிக்காலங்களில் இவற்றிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

இதுல் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட் எனும் மாவு சத்து நிறைந்து இருப்பதினால் இவை மூச்சுக்குழாயின் நுண்துளைகளை மிக மோசமா பாதிக்கின்றது.

மேலும்

நல்ல முட்டைகள் சிட்ரஸ் பழங்கள், கோதுமை மற்றும் சோயா பொருட்கள் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த பொருட்களை டயட்டில் இருந்து நீக்குறது நல்லது.

எனவே ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள், பரோட்டா உள்ளிட்ட, மைதா உணவுகளை பனிக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.

மீன், இறால், நண்டு போன்றவை உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்

 

Related Posts

10 Comments

  1. Pingback: พอด
  2. Pingback: ks quik 2000
  3. Pingback: Dan Helmer
  4. Pingback: lucabet88
  5. Pingback: socom 16
  6. Pingback: stiiizy Gummies

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning