வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil

வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil

வாய்ப்புண் வருவது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் அதை கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும்.

தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்பளங்கள் சில நாட்களில் உடைந்து புண்னாக ஆக மாறி வலியை ஏற்படுத்தும்.

இதனால் சாப்பிடு பொழுதும், பேசும்பொழுது, வலி அதிகமாகும். கழுத்தில் நெறி கட்டும் காய்ச்சல் வரும்.

வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அதை, எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம், எளிதாக குணப்படுத்தலாம்.

தேன்

mouth ulcer in tamil

வாய்ப்புண்ணால் உண்டாகும் வீக்கம் மற்றும் எரிச்சலை எளிதில் குணமாக்க தேன் உதவுகிறது. எனவே, வாய்ப்புண்ணில் சிறிதளவு தேனை தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.

தொடர்ந்து இது போன்று இரண்டு அல்லது மூன்று முறை அதனை செய்வதால் வாய்ப்புண் எளிதில் குணமாகிவிடும்.

சமையல் சோடா(Baking Soda)

naaku pun treatment in tamil

ஒரு தேக்கரண்டி அளவு சமையல் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு பேஸ்ட் போன்று செய்து, வாயில் புண் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

சில நிமிடம் கழித்து மறவாமல் வாயை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளில் மூன்று முறை இது போன்று செய்ய வேண்டும்.

இதனால் வாய்ப்புண் எளிதில் குணமடைகிறது. சமையல் சோடாவிற்கு, வலியை குறைக்கும் தன்மை உண்டு.

வேகமாக புண் ஆறுவதற்கான தன்மையும் உண்டு. இதன் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் தொற்றுகளில் இருந்து, வாயை பாதுகாக்கிறது.

தேங்காய் எண்ணெய்

வாய் புண் குணமாக மருந்து

தேங்காய் மருத்துவ குணங்களை நாம் அனைவரும் அறிவோம். பல விதமான தொற்றுக்களை குணமாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

வாயில் புண் இருக்கும் இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி அப்படியே விட்டுவிட வேண்டும்.

வேகமான தீர்வுக்கு ஒரு நாளில் பலமுறை இது போன்று செய்து வந்தால் தேங்காய் எண்ணெயில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் பண்பு வாய்ப்புண் வேகமாக குணமாகும்.

மஞ்சள்

vai punnu treatment in tamil

மஞ்சள் ஒரு வலி நிவாரணி என்பது நாம் அறிந்த ஒன்றே. மஞ்சள் உடன் சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து வாய் புண்ணில் தடவ வேண்டும்.

இது போன்று அடிக்கடி செய்து வந்தால் புண் விரைவில் மறையும். மஞ்சளுக்கு கிருமிகளை அளிக்கும் தன்மை உண்டு.

மேலும் இது வீக்கத்தை குறைப்பதில் சிறந்தது. ஆகவே, வலியும் வீக்கமும் உடனடியாக மறையும்.

உப்பு

நாக்கு புண் குணமாக

சிறிதளவு உப்பை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்றாக கலந்து தொண்டைக்குள் ஊற்றி சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.

ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை இதனை செய்து வருவது நல்லது. இந்த திரவத்திற்கு வாயில் இருக்கும் கிருமிகளைப் போக்கி இதமான ஒரு உணர்வைத் தரும் தன்மை உண்டு.

உப்பின் கிருமி நாசினி தன்மை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

1 Comment

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning