சீயக்காய் தூள் நன்மைகள் | Shikakai Powder Ingredients in Tamil
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே தங்களது தலைமுடியானது அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். முக்கியமாக பெண்கள் அவர்களின் தலைமுடியானது நீளமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.
இன்றைய கலாச்சாரத்தில் ரசாயனம் கலந்த ஷாம்புகளையும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துவதன் காரணமாக தலை முடி உதிர்தல் ஏற்படுகின்றது. தலைமுடியை ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வைத்துக் கொள்வதற்கு இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமே சீயக்காய்.
இன்றைய பதிவில் சீயக்காய் எப்படி அரைப்பது, எவ்வாறு பயன்படுத்துவது அதன் நன்மைகள் என்ன என்பதனைப் பற்றி பார்ப்போம்.
சீயக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி,வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அது மட்டுமில்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது.
சீயக்காயில் உள்ள ஒரு பொருள் தலைமுடியின் வேர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து நுண்ணுயிர் சத்துக்களையும் தந்து, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு மட்டுமில்லாமல் அடர்த்தியாக வளர்வதற்கும் உதவுகிறது.
முந்தைய காலத்தில் நமது முன்னோர்கள் சீயக்காயினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதனால் தான் நமது முன்னோர்களுக்கு தலைமுடியானது நீண்ட நாட்கள் கருமையாகவும், அடர்த்தியாகவும், வழுக்கை பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
பொடுகு பிரச்சனை
பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சுத்தமான சீயக்காயினை கொண்டு தலைமுடியை நன்றாக அலச வேண்டும்.
அவ்வாறு அலசுவதன் மூலமாக சீயக்காயில் இருக்கக்கூடிய பூஞ்சை எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்ட்டி பாக்டீரியா தன்மை தலைமுடியில் உள்ள நோய் தொற்றுகளை நீக்கி பொடுகு தொல்லையில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
காயங்கள் குணமாக
உச்சந்தலையில் ஏற்படக்கூடிய காயங்களை சீயக்காய் குணப்படுத்துகின்றது. அதற்கு சீகைக்காய் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொடி செய்த சீயக்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்ற செய்து கொள்ள வேண்டும். அதனை உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் ஊறிய பின்னர் தலையினை நன்றாக நீரில் அலச வேண்டும்.
அவ்வாறு செய்து வருவதன் மூலமாக உச்சந்தலையில் உள்ள புண்கள் குணமாவது மட்டும் இல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய அரிப்புகளும் ஏற்படாமல் இருக்கும்.
வலுவான தலைமுடி
சீகைக்காய் தலைமுடியின் வலிமையினை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொண்டது. அது மட்டும் இல்லாமல் தலைமுடி வளர்ச்சியை தூண்டக் கூடியதாக உள்ளது.
ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து சீகைக்காய் பயன்படுத்தி வருவதன் மூலம் தலை முடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தலைமுடி உதிர்தல் பிரச்சனை
தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வருவதன் மூலமாக தலை முடி உதிர்தல் நின்று, தலைமுடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும்.
நரைமுடி வராமல் தடுக்க
நரை முடி வராமல் இருப்பதற்கும், நரைமுடி வந்தவர்களுக்கும் நெல்லிக்காய், பூந்தி கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் ஊறிய பின்னர் தலையை நீரில் நன்றாக அலச வேண்டும். இதன் மூலமாக தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைத்து நரைமுடி மறைய தொடங்கும்.
சீயக்காய் வீட்டிலேயே தயாரிக்கும் முறை
சீயக்காய் ஒரு கிலோ, அரப்பு 500 கிராம், ஊறவைக்கப்பட்ட பூந்திக்கொட்டை ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் உலர வைக்கப்பட்ட பசலைக்கீரை 200 கிராம், கரிசலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி இரண்டும் தலா 100 கிராம் வீதம் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்கவும்., அவ்வளவு தான் சீகைக்காய் தயார்.
இதனையும் படிக்கலாமே
- வாந்தி நிற்க பாட்டி வைத்தியம் | How To Stop Vomiting in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tami
- கோதுமை பயன்கள் தமிழ் | Godhumai Benefits in Tamil
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increase Food in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- கை கால் மூட்டு வலி நீங்க | Mootu Vali Maruthuvam in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
8 Comments
Comments are closed.