முதுகு வலி குணமாக | Muthugu Vali Remedy in Tamil

முதுகு வலி குணமாக | Muthugu Vali Remedy in Tamil

முந்தைய காலகட்டத்தில் முதுகு வலியானது முதியவர்களுக்கு மட்டுமே இருந்த ஒரு பிரச்சனையாக இருந்தது.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது.

முதுகு வலி ஏற்படக் காரணங்கள்

இந்த முது வலி எதனால் ஏற்படுகின்றது என்றால் ஒரு இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்கள் வாகனத்தில் நீண்ட தூரம் உட்கார பயணிப்பவர்கள் மற்றும் சக்திக்கு மீறி வேலையினை செய்பவர்கள் அதாவது அதிகமான எடையுள்ள பொருட்களினை மாடிப்படியில் தூக்கிச் செல்வது அல்லது வெகு தூரத்திற்கு தூக்கிச் செல்வது. கடின உடற்பயிற்சி இது போன்ற காரண முதுகு வலியானது ஏற்படுகின்றது.

மேலும் நாற்காலியின் மேல் கால் மேல் கால் போட்டு உட்காருவதனாலும் முதுகு வலியானது ஏற்படுகின்றது.

முதுகு வலிக்கு காரணமாக உள்ள உணவுப் பொருட்கள் என்னவென்று பார்த்தால் பருப்பு வகைகள்தான்.

பருப்பு வகை உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனால் முதுகு வலி ஏற்படும். உடம்பில் இருந்து வெளியேறக்கூடிய காற்று, சிறுநீர், மலம், வாந்தி, தும்மல், ஏப்பம் ஆகியவற்றை வெளியே அடக்குவதன் மூலமாகவும், முதுகு வலியானது ஏற்படுகிறது.

முதுகு தண்டுவடம் வலி

முதுகுவலி குணமாக

1.தேவையான பொருட்கள் மிளகு, ஐந்து கிராம்பு மற்றும் ஒரு கிராம் அளவிற்கு சுக்கு.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி மேற்கண்ட பொருட்களினை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்த பின்னர் அந்த நீரினை பருகி வருவதன் மூலம் முதுகு வலி குணமாகும்.

2.இரண்டு வெற்றிலையை எடுத்து அதை நன்றாக சாறு பிழிந்து சிறிதளவு தேங்காய் எண்ணெயில் கலந்து சூடுபடுத்த வேண்டும்.

சூடு படுத்திய தேங்காய் எண்ணெய்யினை மிதமான சூட்டில் எடுத்து முதுகு வலி ஏற்படக்கூடிய இடங்களில் மசாஜ் செய்து வருவதன் மூலமாக, முதுகு வலி, நீங்கும்.

3.வாத நாராயண கிடைத்தால் விளக்கெண்ணெயில் நன்றாக இந்த இலையை வதக்கி முதுகு வலி உள்ள இடங்களில் நன்றாக ஒத்தனம் கொடுத்து வருவதன் மூலமாக முதுகு வலியானது குணமடையும்.

moochu pidippu home remedies in tamil

4.முதுகு வலி உள்ளவர்கள் கொள்ளு ரசத்தினை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம். இதனால் முதுகு வலியானது குணமாகும்.

5.உறங்குவதற்கு முன்னர் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் மற்றும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து பருகி வரலாம்.

இவாறு முதுகுவலி ஏற்பட கூடிய நாட்களில் சாப்பிட்டு வருவதன் மூலம் முதுகு வலி குணமாகும்.

6.ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி பொரித்த சீரகத்தினை இந்த நீரில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

இந்த தண்ணீர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது பருத்தியால் நெய்த துணியில் முதுகு வழி உள்ள இடங்களில் ஒத்தனம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வருவதன் மூலமாக,முதுகு வலி குணமடையும்.

7.ஒரு நபர் அமரும் அளவில் உள்ள பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரினை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பெரிய பாத்திரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதன் மூலமாக முதுகு வலி குணமடையும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

4 Comments

  1. Pingback: trustbet
  2. Pingback: Dan Helmer

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning