அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil

அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil

உலகிலேயே மிகப் பெரிய இன்றளவும் அசைக்க முடியாத ஒரு கோவில் என்றால் அது Cambodia நாட்டில் உள்ள அங்கோரி என்னும் இடத்தில் தமிழ் வழியில் வந்த மன்னனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் எனும் இந்து ஆலயம்தான்.

angkor wat history in tamil

தோற்றம்

இன்றைக்கு இருக்கும் அறிவியல் அறிஞர்கள் கூட கண்டு வியக்கும் ஒரு பிரம்மாண்டமான படைப்பு இது.

சுமார் ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இக்கோவிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்.

கோவிலை சுற்றிலும் மிகப் பெரிய அகழி, பிரம்மாண்டமான மதில் சுவர், உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், திரும்பிய திசையெல்லாம் சிற்பங்கள் என அங்கோர்வாட் ஓர் உலக அதிசயமாகவே காட்சியளிக்கிறது.

இந்த கோவிலின் ஒரு பக்கம் சுற்றுச்சுவரே சுமார் மூன்று புள்ளி ஆறுகிலோமீட்டர் என்றால் என்றால், இந்த கோவில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்த ஒரு தொழில்நுட்பம் வாய்ந்த கேமராவிலும் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை.

கோவிலை முழுமையாக படம் பிடிக்க வேண்டும் என்றால் பூமியில் இருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேலே வானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும்.

suriya kadavul kovil ulla idam

இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட சுமார் முந்நூறு வருடங்களாவது ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகின்றர்.

அப்படி இருக்க எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் இருபத்தி ஏழு ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போதே பிரமிக்க வைக்கிறது தமிழனின் திறமை.

யாரால் கட்டப்பட்டது?

இவ்வளவு பிரம்மாண்டமான அங்கோர்வாட் கோவிலை கட்டியவர் தமிழ் வழியிலிருந்து வந்த மன்னரான இரண்டாம் சூரியவர்மண்.

இந்த இரண்டாம் சூரியவர்மனை பற்றி அறிய வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. இவ்வுலகில் உள்ள எல்லா இனங்களுமே ஒரு காலத்தில், யுத்தம் செய்த இனங்களே.

நம் தமிழ் இனமும் பல புகழ்பெற்ற போர்களை சந்தித்தது. உலகின் பல பகுதிகளை வென்று நீண்ட நெடிய நிலப்பரப்பை தன் ஆட்சியும் செய்தது.

இதற்கு சான்றாக விளங்குபவர்கள் கடல் கடந்து ஆட்சி புரிந்த சோழர்களே.

 

cambodia temple history in tamil

சோழர்கள் எப்படி கம்போடியா சென்றார்கள்

கிபி பதினோறாம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆட்சி செய்த கமர் மன்னரான முதலாம் சூரியவர்மன் தன் எதிரியான சந்திரலிங்கா என்ற அரசை வீழ்த்த தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னரான ராஜ ராஜ சோழனே உதவியை நாடினார்.

ராஜ ராஜ சோழனும் இதற்கு ஒப்புக் கொண்டார். இதனை அறிந்த தந்திரலிங்காவின் அரசு ஸ்ரீ விஜய பேரரசிடம் உதவியை நாடினார்கள்.

இதனால் சோழப் பேரரசுக்கும், ஸ்ரீ விஜய பேரரசுக்கும் ஏற்பட்ட போரில் ஸ்ரீ விஜய பேரரசு மற்றும் சம்பரலிங்கா பேரரசு ஆகிய இரண்டும் படுதோல்வியை அடைந்தது.

சோழர் மற்றும் கெமர் ராஜ்யங்கள் மாபெரும் வெற்றியை பெற்றனர். இதனையடுத்து சோழர்கள், கம்போடியாவின் பல பகுதிகளில் ஆட்சியை நிறுவினார்கள்.

அதன் பின்பு கம்போடியாவை ஆட்சி செய்த எமர் மன்னர்கள் சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் இந்து சமயத்தினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

இவ்வாறாக கி. பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் அருள்மொழி வர்மனான ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் வழித்தோன்றலாக வந்தவரே இந்த இரண்டாம் சூரியவர்மன்.

மூன்று அடுக்கு தோற்றம்

இக்கோவிலை மேலிருந்து பார்க்கும் போது மூன்று அடுக்குகளாக தோற்றமளிக்கிறது.

முதல் அடுக்கில் உள்ள சுவர்கள் இராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன.

நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவ தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாக காட்சி தருகிறது.

இக்கோவிலுக்கு நான்கு பிரம்மாண்டமான நுழைவு வாயில்களும் உள்ளன. கெமர் மற்றும் நமது திராவிட கலைகளை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவிலை வகையில் கம்போடிய அரசு கம்போடிய தேசியக் கொடியில் இதனை தேசிய சின்னமாக பொறித்துள்ளது.

cambodia angkor wat temple history in tamil

தனிச்சிறப்பு

இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட்டை முதலில் ஒரு விஷ்ணு தல வழிபாட்டுக் கோயிலாகத்தான், கட்டினார்.

பின்னர் இரண்டாம் சூரியவர்மன் இறந்த பின்பு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதனை புத்த கோவிலாக மாற்றினார்.

எனவே அன்றிலிருந்து இன்று வரை அங்கோர்வாட் புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைய தொடங்கிவிட்டது.

பின்னர் ஆயிரத்தி தொள்ளாயிரங்களில் இங்கு வந்த French இக்கலை பொக்கிஷத்தை கண்டறிந்து உலகிற்கு அறிவிக்கும் வகையில் மரங்கள் வளர்ந்து சிதைவுற்ற நிலையில் இருந்த இக்கோவிலை பழைய பானி மாறாமல் சீரமைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு UNESCO அமைப்பு அங்கோர்வாட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததுடன் இதனை சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.

உலகிலேயே மிகப் பெரிய கலை வடிவமாக கருதப்படும் இக்கோவிலை பார்க்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

வானளவு பெருமை கொண்ட தமிழினத்தின் புகழை தமிழன் மறந்து தவிக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் தமிழனின் பெருமையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும் வென்ற காவியமாக விளங்குகிறது இந்த அங்கோர்வாட்.

இத்தனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

1 Comment

  1. Pingback: naga356

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning