பச்சை கற்பூரம் பயன்கள் | Pachai Karpooram Uses in Tamil

பச்சை கற்பூரம் பயன்கள் | Pachai Karpooram Uses in Tamil

பச்சைக் கற்பூரம் ஆன்மிகத்திலும் மருத்துவத்திலும் அழகு சார்ந்த ஆரோக்கியத்திலும் உணவு ஆகியவற்றில் பெரிதும் பயன்படுகின்றது.

முந்தைய காலகட்டங்களில் நம் முன்னோர்கள் இந்த பச்சை கற்பூரத்தினை ஒரு பிரதான பொருளாக கருதினர் இந்த பச்சை கற்பூரம் என்பது ஒருவகையான தாவர குடும்பத்தினைச் சார்ந்தது.

மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் தீப ஆராதனைக்கு பயன்படுத்தப்படும் கற்பூரமும் இந்த பச்சை கற்பூரமும் வேறு வேறு.

பச்சை கற்பூரம் என்றால் என்ன

பூர்வீகம்

இந்த பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் இதுபோன்ற நாடுகளில் விளையக்கூடிய ஒரு வகையான கற்பூர மரத்தின் கட்டைப் பகுதியில் இருந்து கிடைக்கக்கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையப்படாத மர பட்டையிலிருந்து கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இனிப்பு உணவுகளுக்கு சுவையினை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு பிரத்தியோகப் பொருள்தான் இந்த பச்சை கற்பூரம்.

பச்சைக் கற்பூரம் என்று சொன்னாலே அனைவருக்கும் தோணுவது என்னவென்றால் உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படுவது என்றுதான்.

பச்சைக் கற்பூரம் உணவாக மட்டுமில்லாமல் மருத்துவத்திலும் பயன்படுகின்றது.

பச்சைக் கற்பூரம் பயன்கள்

  • சளி பிரச்சனை சரியாகும்
  • சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்
  • உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
  • பாதத்தில் உள்ள வெடிப்புகள் அனைத்தும் நீங்கும்
  • சிறந்த கிருமி நாசினியாக உள்ளது
  • நேர்மறை எண்ணங்களினை வளர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது
  • சிறந்த நறுமணம் தரக்கூடிய ஒன்று

pachai karpooram uses

உணவினை பதப்படுத்துதல்

பச்சைக் கற்பூரங்களை உணவில் பயன்படுத்துவதன் மூலமாக, உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்க மிகவும் உதவுகிறது. ஏனென்றால் உணவு கெட்டு போக வழி வகுக்கக் கூடிய பங்கஸ் எனப்படுகின்ற கிருமிகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் நாம் உணவுகளை கெட்டுப் போகாமல் பதப்படுத்த ரீப்ரிஜிரேட்டரை பயன்படுத்துகின்றோம்.

ஆனால் நமது முன்னோர்கள் முந்தைய காலகட்டங்களில் இந்த பச்சை கற்பூரங்களை பயன்படுத்தி உணவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாத்தனர்.

சுவையினை கூட்ட

இதனை உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது உணவின் சுவையே அதிகாரிப்பது மட்டுமில்லாமல் அதில் உள்ள நோய் தேற்று கிருமிகளை அழித்து உடலில் நோய்கள் எதுவும் வராமல் பாதுகாக்கின்றது.

Pachai Karpooram Uses in Tamil

வழிபாட்டு தலம்

பெரும்பாலும் நாம் கோயில்களுக்கு வழிபடச் செல்லும் பொழுது நமக்கு கொடுக்கக்கூடிய தீர்த்தங்களில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு இவை இரண்டும் சேர்ந்திருக்கும்.

எதற்காக என்றால் சுவை அதிகரிப்பதற்கும், மருந்தாகவும் பயன்படுத்தினர் நமது முன்னோர்கள்.

மருத்துவகுணம்

பச்சைக் கற்பூரத்தினை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலமாக சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சளி தொல்லைகள், அலர்ஜி, சைனஸ் பிரச்சனை போன்ற தொல்லைகளிலிருந்து விரைவில் விடுபடலாம்.

உடல் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது மண் பாத்திரத்தில் துளசி, கிராம்பு,தேன் மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை கலந்து வைத்து மறுநாள் காலை எழுந்தவுடன் குடித்து வரவேண்டும்.

மேலும் பேச்சு வராமல் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு இந்த தண்ணீரினை கொடுத்து வருவதன் மூலமாக விரைவில் பேச்சு வரும்.

ஆன்மீகத்தில் பச்சை கற்பூரம்

இது பணத்தினை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்டதனால் பூஜை அறையில் வைப்பதன் மூலமாக வீட்டில் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்கும்.

தேவையற்ற செலவுகள் எதுவும் வராது என்ற கூற்று அனைவரும் மத்தியிலும் உள்ளது.

மேலும் பணப்பெட்டி, பீரோ, கல்லாப்பெட்டி இது போன்ற இடங்களில் வைப்பதினால் செல்வம் பெருகும், தொழில் விருத்தி அடையும் என்ற நம்பிக்கையையும் இன்றளவில் உண்டு.

pacha karpooram benefits in tamil

பக்க விளைவுகள்

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நமது முன்னோர்கள் கூற்றுப்படி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்.

அந்த வகையில் பச்சைக் கற்பூரம் உணவிற்கும் அல்லது மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பொழுது ஒரு மில்லி அளவு கூட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அதிகமாகும் பட்சத்தில் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning