கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

 கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

சைவ உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவாக இருந்தாலும் சரி அதன் சுவை முழுமை பெற இறுதியாக கறிவேப்பிலை சேர்ப்போம்.

ஆனால் நம்மில் நிறைய பேர் சாப்பிட ஆரம்பித்த ஒடனேயே முதலில் அந்த கறிவேப்பிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டுதான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள்.

கடைசியில் அது குப்பைக்குத்தான் செல்லும். இந்த கறிவேப்பிலை இயற்கை கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

இதன் உண்மையான நன்மைகள் தெரியாமல் அது உணவிற்கு வெறும் மணத்தை மட்டுமே கொடுக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில், இதன் ஒவ்வொரு நன்மையும் தெரிந்தால், நீங்களும் ஆச்சரியப்படுவீங்க.

கறிவேப்பிலை பயன்கள்

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்

பொதுவாக கறிவேப்பிலையில் கால்சியம்இரும்புசத்து, நார்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்களும் மற்றும் விட்டமின்கள் A, B, C, E இவைகளும் உள்ளன. முக்கியமாக இதில் கொழுப்பு சத்து என்பது அறவே இல்லை.

 கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

சொல்லப்போனால் எல்லா உடல் நல பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மிகச்சிறந்த வீட்டு மருத்துவ பொருள் என்றால் அது கறிவேப்பிலைதான்.

இப்பொழுது இந்த கறிவேப்பிலையை எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

முடி கொட்டும் பிரச்சனை

இன்றைக்கு நிறைய பேருக்கு இளம் வயதிலேயே முடி நரைத்து விரைவிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள்.

இதற்கு காரணங்கள் நிறைய உள்ளது என்றாலும் ரசாயனம் நிறைந்த ஷாம்பு  அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணமாகும்.

இந்த நரை முடியை செலவை இல்லாமல் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முதலிடத்தைப் பெறுகிறது.

எனவே நரை முடி உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை நன்றாக கழுவி விட்டு பச்சையாக அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் போதும்.

Karuveppilai Benefits in Tamil

கண்டிப்பாக உங்கள் நரை முடி விரைவில் கருமையாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

காரணம் இதில் உள்ள அதிக இரும்பு சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நரைமுடியைப் போக்கி முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்  கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு பாதிப்படைந்த வேர்களை சீர் செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

கறிவேப்பிலையை மென்று சாப்பிட பிடிக்காதவர்கள் அரைத்து போட்டும் சாப்பிடலாம்.

ரத்த சோகை

ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள், கறிவேப்பிலையை தினமும் பச்சையாக அல்லது ஜூஸ் போன்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.

காரணம் இதில் அதிக இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் போன்றவை உள்ளது.

குறிப்பாக இதில் விட்டமின் சி  உள்ளதால் இரும்பு சத்தை உடலால் உறிஞ்ச உதவுவதால் மிகச் சிறந்த பலனைத் தரும்.

கால்சியம் சத்து

கறிவேப்பிலையில் அதிக அளவில்கால்சியம்  மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

பொதுவா கால்சியம் நிறைந்த உணவுகள்ல இருந்து கால்சியம் சத்துக்களை உறிஞ்ச மெக்னீசியம் சத்து அவசியம்.

எனவே கறிவேப்பிலையை சாப்பிடும்  பொழுது நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.

கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

கண்கள் ஆரோக்கியம் 

கறிவேப்பிலையில்  வைட்டமின் ஏ  சத்து வலமாக உள்ளது. அந்த வகையில் இந்த கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடு வரும் பொழுது வைட்டமின் ஏ  குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் நீங்கும்.

மேலும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திகண்பார்வை  கோளாறுகளை நீக்க அடிக்கடி  கறிவேப்பிலை ஜூஸ்  குடித்து வருவது நல்லது.

முக்கியமாக வயதான காலத்தில் கறிவேப்பிலை ஜூஸ் பருகி வந்தால் பார்வை கோளாறுகளை தடுப்பதோடு முதுமையில் ஏற்படும் கண்புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

சர்க்கரை நோய்

முக்கியமானது சர்க்கரை நோய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள கறிவேப்பிலை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும்.

எனவே சர்க்கரை நோய் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டோ அல்லது ஜூஸ்  போன்று சாப்பிட்டோ வந்தால் நீரிழிவு நோய் கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும்.

காரணம் இதில் உள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே ஒரு சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

அதே போன்று கறிவேப்பிலையை காய வைத்து  பொடி செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை 

நம் முன்னும் முறையற்ற கேடு தரும் உணவுகளிலிருந்து தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரித்து விடுகின்றன.

ஆனால் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கறிவேப்பிலையை ஜூஸ்  செய்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதயம்

உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் ஏற்படுகிறது.

அந்த வகையில் இந்த கறிவேப்பிலை இதயதசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

முக்கியமாக கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

எனவே வாரம் இரண்டு முறையாவது வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Karuveppilai images in tamil

கல்லீரல் பிரச்சனை 

தினமும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கும் தீவிர மது பழக்கம் உள்ளவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் அடையும். மேலும் கல்லீரலில் உள்ள தேவையற்ற கழிவுகளும் நீங்கும்

மலச்சிக்கல், மூலம் 

பொதுவாக காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம், அமர்ந்து பணிபுரிவது.

இவற்றால் முதலில் மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து மூல நோய் ஏற்படுகிறது.

இந்த மூல நோயை குணப்படுத்துவதிலும் மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் கறிவேப்பிலை சிறந்த வைத்தியம்.

இவர்கள் தினமும் கறிவேப்பிலையை ஜூஸ்  செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைகள் அடியோடு நீங்கும்.

அதே போன்று, கறிவேப்பிலையில், அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.

ருசி அறியும் தன்மை

நாக்கில் ருசி அறியும் தன்மை இல்லாமல் இருந்தால் கருவேப்பிலையுடன், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு சேர்த்து மையாக அரைத்து சூடான சாதத்தில் பிசைந்து ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் ருசி அறியும் தன்மை மீண்டும் வந்து விடும்.

கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Benefits in Tamil

 கறிவேப்பிலைஜூஸ்  எப்படி தயாரிப்பது?

ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக  கழுவி மிக்ஸியில் விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிடலாம்

பொதுவாக கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக அல்லது ஜூஸ் போன்று சாப்பிட்டு வந்தால் இங்கே பார்த்த அத்தனை நன்மைகளையும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

உண்மையில் இன்றைக்கு அனைவரையும் ஆட்டி வைக்கும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த கறிவேப்பிலையை அலட்சியமாக நினைக்காமல் இங்கே சொன்னது போன்று பயன்படுத்தி பாருங்கள். ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning