சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் | How to Control Sugar in Tamil
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். உண்மையில் ரத்த சர்க்கரை சீராக இருக்கும்வரை எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கத் தவறினால் இதய நோய்கள், கண் பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, கால்களில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மோசமான நிலைக்கு கொண்டு போய்விடும்.
எனவே இரத்த சர்க்கரையை கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
திரிபலா பொடி
திரிபலா பொடி ஒரு பாராம்பரிய மருந்து ஆகும்.நெல்லிக்காய் , கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்தகலவை ஆகும்.
சர்க்கரை நோயாளிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தாகும். இது கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து உடலில் குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
திரிபலாவில் உள்ள துவர்ப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அது மட்டுமல்ல இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இரத்த சோகையை போக்கக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. அதே போன்று, அல்சர்ஐயும் குணமாக்கும்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி திரிபலா பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டியது அவசியம்.
மஞ்சள்
மஞ்சள் ஆக்சிஜன் ஏற்ற பண்புகள் மற்றும் கிளைசெமிக் பண்புகள் உடலில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
முக்கியமாக இதில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள்,பொட்டாசியம், துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் இரும்பு சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இவை நீரிழிவு நோய் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.
எனவே சர்க்கரை நோயாளிகள் அவ்வப்பொழுது மஞ்சள் பால் குடித்து வரலாம்.
எலுமிச்சை
சிட்ரஸ் பழமான எலுமிச்சையில், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமாக உள்ளது. உடலில் தேவையான அளவு வைட்டமின் சி இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயம் வெகு குறைவு என்கின்றன சில ஆய்வுகள்.
அந்த வகையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவில் பாதியை, ஒரு எலுமிச்சை கொடுத்து விடும்.
உண்மையில் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோயை தடுக்க நினைப்பவர்களுக்கும் நல்லது என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் சொல்கிறது.
அது மட்டுமல்ல இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் மாற்றத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒருமுறை சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை ஜூஸ் குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.
வெந்தயம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்துவிடும்.
இதற்கு ஒருதேக்கரண்டி வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில், வெறும் வயிற்றில் அந்த ஊறிய வெந்தயம் மற்றும் தண்ணீர் இரண்டையும் அப்படியே சாப்பிட்டு விட வேண்டும்.
அதே போன்று இந்த வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. உண்மையில் வெந்தயத்தை முளைக்கட்டும் பொழுது இதன் மருத்துவ நன்மைகள் பல மடங்காக கிடக்கிறது.
இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சில நாட்களிலேயே ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். மேலும் வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ, சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கக்கூடியது.
நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரைப்பை மற்றும் சிறுகுடலில், கார்போஹைட்ரேட் குளுக்கோஸ்ஆக மாற்றப்படுவதின் வேகம் குறைக்கின்றது.
இதனால் உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.
எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள் மற்றும் வாழைப்பூ, அவரைக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், புடலங்காய், சுரைக்காய், சௌசௌ, முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிஃப்ளவர் இவற்றில் தினமும் ஒன்று இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நாவல் பழம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பயமில்லாமல் சாப்பிடக் கூடிய பழங்களில் இந்த நாவல் பழமும் ஒன்று. அதே போன்று இதன் விதைகளும் சர்க்கரை நோயாளிகளுக்கான அருமருந்தாக பயன்படுகிறது.
நாவல் பழ விதையின் பொடியை தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை கட்டுப்படும். இது கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.
மேலும் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகளும் நீங்கும். மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, விட்டமின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு அத்தனை நல்லது.
பாதாம் பருப்பு
இது சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கும் வராமல் தடுக்கக்கூடியது.
பொதுவாக பாதாம் பருப்பு சாப்பிட்டு வருபவர்களுக்கு இன்சுலின் உணர்திறன் அதிகரித்து விடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
அதே போன்று சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பொழுது உடலில் இருக்கும் மெக்னீசியமம் சிறுநீரில் சென்றுவிடும். இதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவுகிறது.
முக்கியமாக பாதாமில் mono and saturated கொழுப்பு உள்ளதால் இது இதய நோய் வராமல் தடுக்கக் கூடியது.
பாகற்காய்
பாகற்காய்யில் கீரையை விட அதிக அளவில் கால்சியமும், இரும்பு சத்தும், போதுமான அளவ பீட்டா கரோட்டின்னும் உள்ளது.
முக்கியமாக பாகற்காய் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே வாரத்தில் இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
வெண்டைக்காய் ஊறிய தண்ணீர்
இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த நீரை பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்தி வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
மேலும் எலும்புகளும் வலிமை பெற்று எலும்புப்புரை வராமல் தடுக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
நெல்லிக்காய்
இது ரத்தத்தில் சர்க்கரை அளவே கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த உணவாகும். இதில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும், உடலை இன்சுலின்க்கு இணங்க செய்யவும் உதவக்கூடிய குரோமியம் என்கிற கனிமம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து, தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து இப்படி குடிக்கும் பொழுது ரத்தமானதும் சுத்தமாகிவிடும். இதனால், சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனையும் படிக்கலாமே
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- தோல் நோய் சித்த மருத்துவம் | Skin Allergy in Tamil)
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
- அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
4 Comments
Comments are closed.