நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்| Nellikai Health Benefits in Tamil
வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் போக்கக்கூடியது திரிபலா சூரணம். இந்த திரிபலா தயாரிப்பில் மிக முக்கிய இடம் பிடிப்பது நெல்லிக்காய்.
நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்
இதன் ஒவ்வொரு நன்மையுமே வியப்பை தரக்கூடியது என்பது முற்றிலும் உண்மை. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்காயில் சத்து என்று பார்த்தால் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ்,நார்ச்சத்து, புரதம் மற்றும் பல சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
எனவேதான், இந்த நெல்லிக்காயை இயற்கை மருத்துவங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடக் கூடாது? எப்படி சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? தினமும் ஒன்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
வைட்டமின் சி
இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிக அளவில் உள்ளது. ஆரஞ்சை விட இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சிஅதிகம் உள்ளது. அதாவது ஒரு நெல்லிக்காய் இரண்டு ஆரஞ்சு பழத்திற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.
ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டால் வைரஸ் மூலம் பரவும் நோய்கள் உட்பட எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது.
முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது மிக அவசியம்.
இரும்பு சத்து
இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் அதாவதுஇரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
இன்று பலரும் இந்த ரத்த சோகையால் அவதிப்படுகிறார்கள். முக்கியமாக ரத்தமும் சுத்தமாவதால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்| Nellikai Health Benefits in Tamil
தலைமுடி உதிர்தல்
இரும்பு சத்து குறைவாக இருந்தால் தலை முடி கொட்டும் பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே அதிகம் முடி கொட்டுகிறது என்பவர்களும் இந்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவது அவசியம்.
முக்கியமாக நெல்லிக்காய் தலைமுடியை கருமையாக செழிப்பாக வளர வைக்கும் என்பதால்தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் தயாரிப்பிலும், தலைமுடி வர்ணம் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்க ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம் இது நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.
எனவே ரத்த சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மலச்சிக்கல்
முக்கியமாக குடல் இயக்கம் சிறப்பாக இயங்க நெல்லிக்காய் பயன்படுகிறது. உண்மையில் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
இவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வரும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும்.
அதே போன்று சாப்பிட்ட உடனேயே மலம் கழித்தல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கம் சீராகி இந்த பிரச்சனை நீங்கும்.
கண்கள் குளிர்ச்சி
உடலுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது. முக்கியமாக பார்வை மேம்படும். நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கண்களை பாதுகாக்கும்.
இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால் பார்வை மேம்படுவதோடு கண்களிலிருந்து தண்ணீர் வருவது கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை வராமல் தடுக்க உதவும்.
இதய ஆரோக்கியம்
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை நீக்கி இதயத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
அந்த வகையில் இதயத்தை பாதுகாக்கும் நண்பன் என்றும் இதை சொல்லலாம்.
நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்| Nellikai Health Benefits in Tamil
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் இதய தசைகளை வலிமையாக்கும் இந்த நெல்லிக்காய் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
நெல்லிக்காயில் இரும்பு சத்து இருப்பதால் இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வரும்பொழுது புதிய ரத்த செல்கள் உருவாகி மாரடைப்பு, பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.
கல்லீரல் ஆரோக்கியம்
இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென் உடலின் மூளை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுக்கும்.
ஆஸ்த்துமா
நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயித்தில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரை குணப்படுத்தலாம்.
நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்| Nellikai Health Benefits in Tamil
எலும்பு பலம் பெற
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வரும் பொழுது எலும்புகள் பலமாகும். காரணம், இதில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால் எலும்புகள் உறுதியாகும்.
புற்றுநோய்
இந்த நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடியது. மேலும் ஆய்வுகளிலும் நெல்லிக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக இதன் சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால்முதுமை தோற்றம் ஏற்படாது.
உடல் எடை குறைய
அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடை குறைய காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றுடன் இஞ்சி சாறு சேர்த்து அருந்தி வந்தால் தேவையற்ற எடை குறையும்.
நெல்லிக்காய் எப்படி சாப்பிடக் கூடாது?
நிறைய பேர் நெல்லிக்காயை அதிக எண்ணெய், காரம், உப்பு சேர்த்து, ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள்.
இப்படி சாப்பிடும் பொழுது இதன் மருத்துவ நன்மைகள் எதுவும் நமக்கு கிடைக்காது.
நெல்லிக்காய் எப்படி சாப்பிட வேண்டும்?
எனவே நெல்லிக்காயை பச்சையாக சுவைத்து சாப்பிடலாம். ஜூஸ் போட்டு சாப்பிடலாம். அல்லது துண்டு செய்து, கீற்றுகளாக சாப்பிடலாம்.
அதே போன்று சுத்தமான தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
சிறுநீரக கல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. காரணம் இதில் கால்சியம் ஆக்சைடு அதிகம் உள்ளதால் தவிர்ப்பது நல்லது.
அதே போன்று ரத்த சர்க்கரை மிக உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதால் குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட நன்மைகளை பெறுவதற்கு கீழே உள்ள அமேசான் வலைத்தளத்தில் உடனே ஆர்டர் செயுங்கள்.
உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
ORDER LINK
இதனையும் படிக்கலாமே
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
- மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
10 Comments
Comments are closed.