எலும்பு பலம் பெற | Bone Strength Food in Tamil

எலும்பு பலம் பெற | Bone Strength Food in Tamil

நமது உடலின் அஸ்திவாரமே எலும்புகள்தான். நாம் நடப்பதற்கு உட்காருவதற்கு ஓடுவதற்கு என எந்த செயல் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம்.

இந்த எலும்புகள், பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

இன்னும், சொல்லப் போனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வைரஸ் , பாக்டீரியாக்களுடன் போர் புரிந்து உடலை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் வெள்ளை அணுக்கள் இரண்டுமே எலும்பு மஜ்ஜையில் தான் உற்பத்தியாகின்றன.

அதேபோன்று நமது காதில் உள்ள மிக சிறிய எலும்பு காதில் ஒளி அதிர்வலைகளை ஏற்று காது கேக்கும் திறனை செய்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் எலும்புகளானது ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.

பொதுவாக எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் போதும் என்று நினைப்போம்.

உண்மையில் வேறு சில முக்கிய சத்துக்களும் இதற்கு தேவை. விளக்கமாக தெரிந்து கொள்ள இறுதிவரை தொடர்ந்து படியுங்கள்.

கால்சியம் உணவுகள் மட்டுமல்ல, வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துள்ள உணவுகளும் முக்கியம்.

அது மட்டுமல்ல நாம் தெரியாமல் செய்யும் சில செயல்களும் நம் எலும்பின் வலிமையை குறைக்கிறது. எனவே, நமது உணவுமுறை மற்றும் நம் பழக்கவழக்கங்களில் முறையான மாற்றம் செய்தாலே நமது வயதான காலத்திலும், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

எலும்புக்கு சத்தான உணவுகள்

கால்சியம் நிறைந்த உணவுகள்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. நூறு மில்லிகிராம் அத்திப்பழத்தில் இருபத்தி ஆறு மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எனவே, தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம். அ

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையில் பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

பேரீச்சம் பழம்

நூறு மில்லி கிராம் பேரிச்சம் பழத்தில் முப்பத்தி ஒன்பது மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் சத்தும் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் என்பதால் தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வரலாம்.

கேழ்வரகு

நூறு கிராம் கேழ்வரகில் 35 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. சிறுதானியங்களில் அதிக கால்சியம் சத்தைக் கொண்டது, இந்த ராகி. எனவே, அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை சாப்பிட்டு வரலாம்.

bone strength food items in tamil

கருப்பு உளுந்து

கருப்பு உளுந்திழும் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே கருப்பு உளுந்து, சுண்டல் சாப்பிட்டு வருவது நல்லது.

கொள்ளு

கொள்ளிலும் கால்சியம் அதிகம் உள்ளதால் அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடித்து வந்தாலும் எலும்புகள் வலுவாகும்.

ஆரஞ்சு பழம்

வைட்டமின் டி மற்றும் நிறைந்த ஆரஞ்சு பழங்களை, அடிக்கடி சாப்பிட்டு வரலாம். பொதுவாக கால்சியம் சத்தை குடலால் உறிஞ்ச வைட்டமின் டி சத்து தேவை.

சொல்லப் போனால் போதுமான வைட்டமின் டி இல்லாமல் போனால் உடல் பத்து முதல் பதினைந்து சதவீதம் கால்சியத்தை மட்டுமே உறிஞ்ச முடியும்.

ஆனால்,வைட்டமின் டி போதுமான அளவு இருக்கும் பொழுது நாற்பது சதவீதம் வரைகால்சியம் சத்தை உறிஞ்ச முடியும்.

முட்டை

முட்டையில் புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன. எனவே வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க தினமும் ஒரு முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலனைப் பெற முடியும்.

அதிலும், முட்டையின் மஞ்சள் கருவில்தான் இந்த சத்து வளமாக உள்ளது.

மீன்

மீன்களில் மத்தி,கானான் கெளுத்தி, சூறை போன்ற கடல் மீன்களில், ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் மட்டுமல்ல விட்டமின் டியும் பலமாக உள்ளது.

மேலும், கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் உள்ளதால் இந்த வகை மீன்களை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வைட்டமின் டியை எளிதாக பெற முடியும்.

சூரிய ஒளி

சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.

அதே போன்று, எலும்புகளை ஆரோக்கியமாக உருவாக்க பாஸ்பரஸ் சத்து முக்கியம். இது எலும்புகளுக்கு மட்டுமன்றி உடலுக்குத் தேவையான ஆற்றலையும் உற்பத்தி செய்வதில் உதவி செய்கிறது.

உடைந்த எலும்பு கூட

பால்

பாலில் கால்சியம் சத்தோடு பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே போன்று பாலில் இருந்து பெறக்கூடிய தயிரிலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து நிறைந்துள்ளது.

பீன்ஸ்

ஒரு கப் பீன்ஸ்சில் இருநூறு முதல் இருநூத்தி இருபது மில்லி கிராம் அளவு வரை பாஸ்பரஸ் உள்ளது.

எனவே மேற்கண்ட உணவுகளை நம் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே எலும்பின் வலிமை அதிகரிக்கும்.

எலும்பின் வலிமையை பாதிப்பவை

காபி

காபி அதிகமாக குடிப்பதால் எலும்புகள் பலவீனம் அடையும். காரணம், காபியில் உள்ள அதிக அளவு காஃபின் எலும்புகளில் இருக்கும் கால்சியத்தின் அளவை குறைக்கிறது.

எனவே காபியை அளவாக குடிக்க வேண்டும். அதே போன்று உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் எலும்புகள் பலவீனம் அடையும்.

உப்பு

அதிக உப்பு சாப்பிடுவதால் கால்சியம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இதன் காரணமாக எலும்புகள் படிப்படியாக பலவீனம் அடையத் தொடங்கும்.

குளிர்பானம்

அதிக குளிர்பானத்தை குடித்து வந்தாலும் ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு குறைகிறது. இதனால் எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்காது. இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.

மது & புகைப்பழக்கம்

அதிக மது அருந்துவதால் உடலில் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைகிறது. முக்கியமாக புகைப்பிடித்தல் எலும்பு செல்களை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாகவும் எலும்புகள் பலவீனம் அடைய தொடங்குகிறது.

பின்விளைவுகள்

உண்மையில் தொடர்ந்து இந்த குறைபாடு நீடித்தால் எலும்புகள் பலவீனமாகும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசைவலி ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதே போன்று கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே எலும்புகள் ஆரோக்கியமாக வலிமையாக இருக்க இங்கே சொன்ன உணவு முறைகளையும் செயல்களையும் தவிர்த்தாலே எலும்புகள் வயதான பிறகும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning