புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits

புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits

அறுசுவை உணவுகளில் ஒன்றுதான் புளிப்பு சுவை. நம்முடைய மூதாதையர்கள் தினசரி அவர்கள் பயன்படுத்திய புளியை நாம் பெரிதளவில் பயன்படுத்துவதில்லை. ஆனால் புளியில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன.

இந்தப் புளியானது தென்னிந்திய சமையலில் அதிக அளவில் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். நாம் அனைவரும் அறிந்த ஒன்று என்னவென்றால் சுவைக்காக மட்டுமே புளி பயன்படுத்துகிறோம் என்று.

ஆனால் இந்த புளி எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது. சரும பிரட்சணிகளை தடுக்கிறது. இந்த புளிக்கரைசலை தினசரி சேர்த்து வருவதன் மூலமாக எண்ணற்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

புளி மருத்துவ பயன்கள் Tamarind Medical Benefits

வயிற்று உபாதைகள்

கிராமபுறங்களில் இன்றளவிலும் புளியினை சிறந்த மலமிளக்கியாக பயன்படுத்துகின்றனர். நமது இந்தியரின் மருத்துவ கலாச்சாரம் ஆனது ஆப்பிரிக்கா கண்டம் வரை புகழ் பெற்றுள்ளது.

இதில் உள்ள நார்ச்சத்து டார்டாரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மலச்சிக்கலைப் போக்குகிறது.

மேலும் தீராத வயிற்றுப்போக்கு பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் புளியமரத்தின் இலையினை சாப்பிட்டு வருவதன் மூலம் குணமாகும்,

அலர்ச்சி

புளிய மரத்தில் உள்ள புளி மற்றும் அதனுடைய இலைகள் ஆகியவை அழற்சியை எதிர்க்கும் பண்புகள் உடையது.

நீண்டநாள் உள்ள அலர்ஜி காரணமாக தான் உடலுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்பட காரணமாகின்றது. இந்த அலர்ஜியை சரி செய்ய புளியினை கொண்டு டீ போட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

அனைவருக்கும் ஒரு சந்தேகம் ஏற்படும் புளியில் கொண்டு டி வைப்பதா? ஆமாம். இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று! மேலும் சுவையாகவும் இருக்கும்!

புளி மருத்துவ பயன்கள் Tamarind Medical Benefits

ஆன்டி-செப்டிக்

இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக விளங்குகின்றது. புளியினை கொண்டு ஏராளமான நோய்களை சரி செய்யலாம். வெப்பமண்டல பகுதிகளில் ஏற்படக்கூடிய நிமோனியா, மலேரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஆகிய தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.

ஆகவே அனைவரும் தாராளமாக இந்த புளியை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

உடலில் ஏதேனும் வீக்கங்கள் ஏற்பட்டால் புளியை நன்றாக அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம் குணமாகும்.

இதய ஆரோக்கியம்

புலோவநாயுடுகள், பாலிஃபீனால்கள் ஆகியவை புளியில் அதிக அளவில் உள்ளன. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடியது.

இது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகப்படுத்துகின்றது.

மேலும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் அனைத்தையும் கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.

மேலும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது. ஆகவே நமது இதயம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இதயத்தில் படிந்துள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

புளி மருத்துவ பயன்கள் Tamarind Medical Benefits

கல்லீரல்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் விரும்பி அருந்தும் உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட். இந்த உணவினால் மிக முக்கியமாக பாதிக்கப்படக்கூடிய ஒரு உறுப்பு கல்லீரல் தான்.

ஏனென்றால் இந்த கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை அனைத்தையும் வெளியேற்றி உணவின் செரிமானத்தின் செயலை சரியாக செயல்பட உதவுகின்றது.

கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் உடலில் அப்படியே தங்கி விட்டாள் என்ன ஏற்படும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே கல்லீரலில் உள்ள நச்சுக்களை அனைத்தையும் நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க கூடிய ஒரு சிறந்த உணவு புளி தான்.

மேலும் இந்த புளியானது ஆல்கஹால் மற்றும் கொழுப்புகள் கல்லீரலில் இருந்து வெளியேற்ற மிகவும் பயன்படுகின்றது.

கர்ப்பகால பெண்கள்

பெண்கள் கர்ப்ப காலத்தில் பெரும்பாலும் அவதிப்பட கூடிய ஒன்று காலையில் எழுந்ததும் வாந்தி குமட்டல் அதீத பசி உணர்வு ஆகியவையாகும்.

இதற்காகத்தான் நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாக புளியினை பயன்படுத்தி வருகின்றனர்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவில் புளி சேர்த்து வருவதன் மூலமாக குமட்டல், வாந்தி உணர்வுகள் சற்று குறையும்.

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கல் பிரச்சினைகள் சற்று குறையும்.
ஏனென்றால் இந்த புளி சிறந்த மலமிளக்கி.

புளி மருத்துவ பயன்கள் Tamarind Medical Benefits

முகப்பரு

மேலும் புளியானது முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கும் பயன்படுகின்றது.

அனைவருமே நமது முகத்தினை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால் ஒரு சில காரணங்களினால் சரும தொற்று அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு புளி சிறந்தது. முகத்தில் அலர்ஜி மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் புளி சாற்றினை தடவி வருவதன் மூலமாக சருமத்தில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும்.

புளி மருத்துவ பயன்கள் Tamarind Medical Benefits

உடல் எடை

உடல் எடை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் உடலில் உள்ள கொழுப்புகளை சரியாக பயன்படுத்த முடியாமல் போவதாலும் மேலும் மெட்டபாலிசம் மெதுவாக செயல்வடுவதாலும் உடல் பருமனானது அதிகரிக்கின்றது.

இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க நாம் தினசரி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பாக இருப்பதற்கு புளியானது ஒரு சிறந்த உணவாகும். இது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி தேவையான கொழுப்புகளை ஒழுங்குபடுத்தி அதனை செயல்பட உதவி புரிகிறது.

ஆகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கின்றது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning