தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா  தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
பனி பயிரான தேங்காய் இவுலகில் வெப்பமண்டல நாடுகளில் மட்டுமே வளர்கின்றது.

இவ்வுலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாட உணவிற்கும் மற்றும் மருத்துவத்திற்கும் இளநீர், தேங்காயினை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ள இயற்க்கை உணவான தேங்காயினை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் நமக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

கிருமி நாசினியாக விளங்குகிறது

நுண் கிருமிகளானது அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளின் வெளிப்புறத்தில் நுண் கிருமிகள் உள்ளன.

இவை சமயங்களில் நம்மை தொற்றிக்கொண்டு உடல்நல பாதிப்புகளையும் உண்டாக்கிறது.
தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது.

தேங்காயில் இருக்கும்மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலங்கள் நமது இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுதோடு உடலில் பறவி இருக்கின்ற நூன் கிருமிகளையும் அழித்து உடலை தூய்மையாக வைக்கிறது.

பற்களை வலுவடைய செய்கிறது

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று என்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் இருப்பதற்கு தேங்காயில் உள்ள வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இது பற்களுக்கு பளபளப்பு தன்மையை கொடுக்கின்றது.

சருமம் பளபளப்பு பெறுவதற்கு

சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மிக சிறந்த இயற்க்கை மருந்தாக உள்ளது.

தோலின் தோற்றமானது பளபளப்பு தன்மையுடன் இருப்பதற்கு நாள்தோறும் சிறிதளவு தேங்காயினை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

இதில் இருக்க கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் இரத்தத்தில் கலந்து பளபளப்பான தோற்றத்தினை கொடுக்கும்.சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது தேங்காய்.

மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல், அரிப்பு போன்ற தொற்றுக்கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேங்காய் சரி செய்கிறது.

கூந்தலினை பராமரிக்க

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ,முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தியானது குறைவது போன்ற பிரச்சனைகளினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது தேங்காய். மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து, பளபளப்பான, அடர்த்தியான, கருப்பு நிறம் கொண்ட முடியை தேங்காய் தரும்.

தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினாலும் நமது கூந்தலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நார்ச்சத்து நிறைந்தது

நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளைக் காட்டிலும் தேங்காய் அறுபத்தி ஒரு சதவீதம் நார்ச்சத்து கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது.

இதனை பச்சையாக நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது.

அதிக அளவில் குளுக்கோசினை கணையத்தில் உற்பத்தி செய்து உடலுக்கு அதிக சக்தியினை தருகிறது.

தேவையற்ற கொழுப்புகளையும் கரைகிறது. பெரும்பாலானோர் தினசரி எதாவது ஒரு கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்கிறோம்.

முறையான உடற்பயற்சி மற்றும் உணவு பழக்கங்கள் இல்லாதவர்ககுக்கு ,இந்த கொழுப்புச்சத்து நாளடைவில் உடலில் அதிக அளவு சேர்ந்துகொண்டு தொந்தியைப் ஏற்படுத்துகிறது.

தொப்பை போடுகிறது மற்ற இடங்களில் படிக்கின்ற கொழுப்பை காட்டிலும் வயிற்றுப்பகுதியில் படுகின்ற கொழுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வயிற்றில் கொழுப்பு படிந்து தொந்தி உள்ளவர்கள் பச்சை தேங்காயினை அடிக்கடி சாப்பிட்டு வாழ்ந்தால் போதும்.

காக்கா வலிப்பு குணமடைய

ஹேப்பிலெஃப் ஸி என்பது கால் கைகளில் ஏற்படும் வழிப்பு பிரச்சனை. இது காலப்போக்கில் காக்காய் வலிப்பு என தமிழில் அழைக்கின்றனர்.

நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகளினால் காய் கால் வலிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும்.

குறிப்பாக ஒன்று முதல் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளில் இந்த குறைபாடு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

இதற்கு முக்கிய காரணம் கீட்டோன் சத்து குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கார்போஹைட்ரேட் சத்து குறைவாக இதில் உள்ளது.

நன்மை தரக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் அதிக அளவில் உள்ளது.

இளமையான தோற்றத்திற்கு

இதனை தினம்தோறும் சாப்பிடுவர்களுக்கு கீட்டோன் சத்தானது அதிக அளவில் கிடைப்பதனால் கை, கால் வலிப்பு நோய் குறைகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமலும் அளவுக்கு மீறிய உடல் உழைப்பினை செய்பவர்களுக்கும் முதுமையான தோற்றமானது இளம் வயதிலேயே வந்து விடுகிறது.

இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும்.

தேங்காயில் சைட்டோகைநீட்டின் சைனீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

இவை நமது இரத்தத்தில் ஆக்ஸஜன் அளவை சரியாக பராமரித்து உடலுக்கு பலத்தை தருவதோடு, இளமையான தோற்றத்தையும் தருகிறது.

சிறுநீரக தொற்று குணமாக

மனிதர்களிலேயே மிகவும் வேதனைக்கு உள்ளாக்கிய நோய்களில் ஒன்று சிறுநீரக தொற்று நோயாகும்.

இந்த நோய் ஏற்பட்டால் சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், சிறுநீரகங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

அந்த நபர் ஒருவரை பாதிக்கப்பட்டு ஒவ்வொரு முறை நீர் களிக்கும்போதும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது. தேங்காயில் கிருமிநாசினி வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த சிறுநீரக தொற்றுநோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது.

நீர் சத்து நிறைந்தது

கோடை காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்பு சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு தேங்காய் ஒரு சிறந்த நீர் சத்தை வழங்கும் ஒரு உணவாக உள்ளது. தேங்காயில் கால்சியம், பொட்டாசியம், மெக்னிசியம் போன்றவை உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை கொடுக்கும்.

அடிக்கடி தேங்காயை மென்று திண்ப தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.

சீரான அளவில் இரத்த ஓட்டத்தினை வைத்து கொள்வதுடன் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

ஆகவே, தேங்காயை அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related Posts

2 Comments

  1. Pingback: trustbet

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning