ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil

ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil

ஊமத்தை எனப்படுகின்ற ஒரு அற்புதமான மூலிகை, விஷத்தன்மை உடையதாக இருந்தாலும் இது மருத்துவத்திற்கு மிகவும் முக்கியமாக உள்ளது.

இது ஒரு செடி வகையாகும். இந்த செடியில் உள்ள இலைகள், விதைகள், வேர் மற்றும் உலர்ந்த இலைகள், ஆகிய அனைத்துமே மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.

ஊமத்தைச் செடி தோற்றம் இதனுடைய இலைகள் அகன்று, கரும்பச்சை நிறத்திலும், பூக்கள் வெண்மையாகவும், காய்கள் உருண்டையாகவும், முட்களுடனும் காணப்படும்.

ஊமத்தையில் வெள்ளை, நீலம், கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் பூக்கள் உள்ளன. இவற்றில் கருப்பு நிறத்தில் பூக்கூடிய செடியே மூலிகை செடியாக கருதப்படுகிறது.ஏனென்றால் இதில் எண்ணற்ற மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன.

umathai poo image

ஊமத்தை விஷத்தன்மை உடையதனால் இது அதிகப்படியாக வெளிபூசலாகாவே பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஊமத்தை உடைய பயன்கள் என்னவென்று பார்த்தால் ஒரு சிலருக்கு நாள்பட்ட காதுவலி மற்றும் காதில் சீல் வடிதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்க பயன்படுகிறது.

ஆரம்ப கால ஆஸ்துமா உள்ளவர்கள் பயன்படுகிறது. மேலும், கண் வியாதி, பால்வினை நோய், மனநோய், ஆண்மைக்குறைவு, மாதவிடாய் இது பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

அது மட்டும் இல்லாமல் மூட்டுகள் வீக்கம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், தலையில் ஏற்படும் புழு வெட்டு,ஆறாத புண்கள் கணுக்காலில் ஏற்பட கூடிய வீக்கம் இவற்றை குணப்படுத்த உதவுகிறது.

அக்கி கட்டி

ஒரு சிலருக்கு கோடை காலங்களில் அக்கி கட்டி எனபட கூடிய கட்டிகள் ஏற்படும்.அவை குணமாக ஊமத்தை இலைகளை சிறிது வெண்ணையில் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்த பசையினை அக்கி கட்டிகளின் மீது, தடவி வருவதன் மூலம் இவைகள் விரைவில் குணமாக பயன்படுகிறது.

ஊமத்தை இலை

நாய் கடி

நாய் கடிக்கு இந்த ஊமத்தை இலை நல்ல ஒரு தீர்வாகும். ஊமத்தை இலைகளினை நன்றாக அரைத்து ஒரு வாணலியில் நல்லெண்ணெயினை விட்டு அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

நாய் கடித்த காயம் உள்ள இடத்தில் நன்றாக அரைத்து, வதக்கிய, இலைகளினை, கட்டிவர, காயங்கள், விரைவில் ஆறும்.

ஊமத்தி இலையின் சாறினை இரண்டு அல்லது மூன்று துளிகளினை எடுத்து அதனை பண வெல்லம் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நாய் கடி விஷம் முறியும்.

மிக முக்கிய குறிப்பு என்ன வென்றால் இந்த மருந்து சாப்பிட கூடிய நாட்களில் உப்பில்லாமல் பகலில் தயிர் சேர்த்தும், இரவு நேரங்களில் பால் சேர்த்து மட்டுமே சாப்பிட வேண்டும்.

பேன் தொல்லை

பெண்கள் பெருமளவில் அவஸ்தை பட கூடிய விசியம் என்னவென்றால் பேன் தொல்லை தான். இதற்க்கு ஊமத்தை இலையினை நன்றாக அரைத்து போடி செய்து செய்து வைத்து கொள்ளவேண்டும்.

இந்த பொடியினை நல்லெண்ணெயில் போட்டு காயவைத்து ஆறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் குளிப்பதற்கு முன் தலையில் நன்றாக அழுத்தி தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்குப் பின் குளித்து வருவதன் மூலமாக தலையில் உள்ள பேன்கள், ஈறுகள், பொடுகுகள் நீங்கும்.

மூலை நோய்

மூலை நோயினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த ஊமத்தையானது ஒரு அருமருந்தாகும். இந்த ஊமத்தங்காயினை நன்றாக அணலில் வாட்டி வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்து மூலத்தினால் ஏற்பட்ட புண்கள் உள்ள இடத்தில தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் குணமாகும்.

மேலும் ஊமத்தை விதைகளை நாணர்கா பொடியாக்கி நெய்யில் கலந்து அதனை நன்றாக அரைத்து மூலத்தின் நுனிப்பகுதியில் தடவி வருவதன் மூலமாக நாட்பட்ட புண்கள் குணமாகும்.

umathai benefits in tamil

சிறுநீர் கடுப்பு

சிறுநீர் கடுப்பு குணமாக நல்ல எண்ணெயில் ஊமத்தை விதையினை கலந்து வெயிலில் சில நாட்கள் வைத்திருந்து அதனை அடிவயிற்றில் தடவி வருவதன் மூலமாக உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவை முற்றிலும் குணமாகும்.

மிக முக்கிய குறிப்பு

இந்த ஊமத்தை செடியானது முற்றிலும் விஷத்தன்மை கொண்ட ஒரு செடி ஆகும். ஆகவே இந்த ஊமத்தை பயன்படுத்தும் போது மயக்கம் வரும் நிலை ஏதேனும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதன் விஷம் குறைய தாமரைத்தண்டுகளின் அடியில் கிடைக்கும் தாமரை கீழங்கினை நன்றாக அரைத்து பாலில் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடித்து வர வேண்டும்.

இவ்வாறு குடித்து வருவதன் மூலமாக ஊமத்தை செடியின் விஷமானது உடலில் இருந்து முற்றிலும் முறியும்.

இந்த ஊமத்தை மருத்துவத்திற்கு பயன்படாலும் கூட இது ஒரு விஷத்தன்மை வாய்ந்த செடியாகும். ஆகவே, இதனை பயன்படுத்திய பின்னர் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.

முக்கிய குறிப்பு

மேற்கண்ட தகவல் வாசகர்கள் பயன்படுத்துவதற்கு சொல்லப்பட்டவை அல்ல. இது அனைவரும் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது ஆகும். ஆகவே, மேற்கு கூறியவற்றை யாரும் பயன்படுத்த வேண்டாம்

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning