முளை கட்டிய பயறு பயன்கள் | Mulaikattiya Pachai Payaru Benefits in Tamil

முளை கட்டிய பயறு பயன்கள் | Mulaikattiya Pachai Payaru Benefits in Tamil

முளை கட்டிய பயறு  நமக்கு கிடைத்த ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். ஒரு தானியத்தை முளைகட்டும் பொழுது அதில் உள்ள வைட்டமின் சத்துகள் முளைவிடும் பொழுது பன்மடங்காகிறது.

இதை நாம் சாப்பிடு பொழுது உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

சாதாரண தானியங்களில் உள்ளதை விட இருபது மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் இதில் இருந்து கிடைக்கும்.

பச்சைப்பயறை எப்படி முளைகட்ட வேண்டும்?

முழு பச்சை பயிரை நன்றாக சுத்தம் செய்து ஒரு நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு நன்கு ஊறிய பயிரை வடித்துவிட்டு ஒரு காட்டன் துணியில் கட்டி, தனியாக வைத்துவிட வேண்டும்.

அடுத்து பனிரெண்டு மணி நேரத்திற்குள் அந்த ஊறிய பயிர் முளைகட்ட ஆரம்பித்து விடும். இதை பச்சையாகவே சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

முளை கட்டிய பயறு பயன்கள்

எப்பொழுது சாப்பிடலாம்?

எப்பொழுது சாப்பிடலாம் என்று கேட்டால் காலை நேரத்தில் சாப்பிடலாம். இதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் மற்ற உணவுகளையோ அல்லது காபி, டீ எதுவாக இருந்தாலும் சாப்பிட வேண்டும்.  அதே போன்று மாலை நேரத்தில் சாலட் போன்றும் சாப்பிட்டு வரலாம்.

முளைகட்டிய பயிரில் உள்ள சத்துகள்

முளை கட்டிய பயறு சாதாரண பயிர்களை விட, ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக, வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஈ , வைட்டமின் கே போன்றவை உள்ளன.

முக்கியமாக இதில் புரதச்சத்தும் அதிகமாக இருக்கும். மேலும் நியாசின், தியாமின் போன்ற சத்துகளுடன் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவு உள்ளன.

அதே போன்று இதில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம், இரும்பு சத்து, துத்தநாகம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

முக்கியமாக இது நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல எந்தவித நோய் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

இதுபோன்று முளைகட்டிய பயிர்கள்ல இருந்து வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து மிக அதிக அளவில் பெற முடியும். சொல்லப்போனால் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள் தாதுக்கள், அமினோ அமிலங்கள் இப்படி முளைக்கட்டும் போது அதிக அளவில் கிடைக்கின்றன.

உண்மையில் முளை கட்டிய பயறு  ஒரு முழுமையான உணவு என்றே சொல்ல வேண்டும். இந்த முளைகட்டிய பாசிப்பயரில் அதிக புரதச்சத்து இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.

பயன்கள்

உடல் பொலிவாகும். எலும்புகள் வளர்ச்சி பெரும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். பொதுவா, உடல் பலம் இழந்து சோர்வாக இருப்பவர்கள் முளைவிட்ட சாப்பிட்டால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

இந்த முளைகட்டிய பாசிப்பயறை அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல் உலர் திராட்சை சேர்த்து, காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக இளைஞர்கள் உடல் வலிமைக்காக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், பெரியவர்கள் வரை, அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புத உணவு இது.

mulaikattiya payaru vagaigal

குறைந்த கலோரி

முளைகட்டிய பச்சை பயிர் குறைந்த அளவு கலோரிகளை கொண்டது. காரணம் பயிர் முளைவிட்ட பிறகு இதில் மாவு சத்து குறையும்.

எனவே, எடை குறைக்க நினைப்பவர்களும் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்கள் கொழுப்புகளை வெளியேற்றுவதில் இந்த முளைகட்டி தானியங்கள் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது. இவற்றில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடென்ட் இருப்பதால் உடலில் உள்ள சுரப்பிகளை சீராக செயல்பட வைக்கிறது.

ரத்த சோகை

இரும்பு சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சியும் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் இதனை தினசரி எடுத்து வந்தால்,விரைவில் ரத்த சோகை நீங்கும்.

அதே போன்று உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முளைகட்டிய பயிரை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைய இதிலுள்ள பெப்டைட்கள் உதவி செய்கிறது.

இதய ஆரோக்கியம்

விதைகள் முளைக்கும் பொழுது இந்த பெப்டைட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

இது உடலில் உள்ள, கெட்ட கொலஸ்ட்ரால் ஐ குறைத்து நல்லகொலஸ்ட்ரால்ஐ அதிகரிக்கின்றன.

அதே போன்று இது உலர் கிளிசரேட்கள் எனப்படும் மற்றொரு ரத்த கொழுப்பு குறைக்க உதவுகிறது. எனவே, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் இந்த முளைக்கட்டி பெயர் மிக நல்லது.

mulaikattiya payaru benefits tamil

செரிமானம்

இந்த முளைகட்டிய பச்சைப்பயிரில் கரையாத நார்சத்துக்கள் வளமாக உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது.

இதில் உள்ள அதிக நார்ச்சத்து பெருங்குடலை சுத்தம் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

மலச்சிக்கலை தடுக்க உணவில் போதுமான அளவு கரையாத நார்ச்சத்து இருப்பது அவசியம்.

இந்த முளைகட்டிய பயிரில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்ட் இருப்பதால் கண் பார்வை தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

இதில் உள்ளவைட்டமின் ஏ சத்து, கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.

பெண்கள் ஆரோக்கியம்

இதை பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் சருமத்தை பாதுகாத்து பொலிவாக வைக்க உதவுகிறது.

புற்றுநோய்

இந்த முளைகட்டிய பச்சைப்பயிரில் ஆக்ஸிஜன் ஏற்ற அளவு முளைக்காத பயிரை விட அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

இதற்கு காரணமான கலவைகள்,உடல் முழுவதும் ஃப்ரீ ரேடிக்கல் செயல்பாட்டை குறைக்க உதவுகிறது. இதனால்,புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ்ன் வெளியீட்டை குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

முக்கியமாக, முளைக்க பயிரை சாப்பிட்ட பிறகு உடலுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். காரணம் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். இதை பச்சையாக மட்டும்தான் சாப்பிடலாமா? அல்லது அவித்து சாப்பிடலாமா?என்று.

பொதுவாக அசிடிட்டி உள்ளவர்கள் அல்சர் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான், சாப்பிட வேண்டும்.

முக்கியமாக பயிரை நன்றாக சுத்தம் செய்யாமல் முளை விடுவதற்காக தண்ணீரில் ஊற வைக்கும் பொழுத, பாக்டீரியாக்கள் , உருவாக, வாய்ப்புகள் அதிகம்.

எனவே தானியங்களை நன்றாக சுத்தம் செய்து மற்றும் ஊற வைக்க சுத்தமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.

அதே போன்று சிலருக்கு பச்சைப்பயிறு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். பச்சைப்பயிறு ஒவ்வாமை உடையவர்களுக்கு மூச்சுத்திணறல், அரிப்பு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவர்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது.

பச்சைப்பயறை மட்டும் முளைகட்டி சாப்பிடாமல் வெந்தயம், கொள்ளு, கேழ்வரகு, உளுந்து என்று மற்ற தானிய இதேபோன்று முளைகட்டி சாப்பிட்டு வரலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உண்மையிலேயே உடலில் மிகப் பெரிய நல்ல மாற்றத்தை உணர முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

2 Comments

  1. Pingback: rich89bet
  2. Pingback: sex loan luan

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning