ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language

ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language

ஜாதிக்காய் உலகில் வேறு எங்கும் கிடைப்பதில்லை நமது நாட்டில் தான் அதிக அளவில் கிடைக்கின்றது.

ஜாதிக்காயை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நூல்களில் ஜாதிக்காயின் பயன்பாட்டினை பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன.
இது உஷ்ணத் தன்மை அதிகம் கொண்டதனால் பெரும்பாலும் பாலில் கலந்து மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

ஜாதிக்காய் பொடி பயன்கள் Jathikai Benefits in Tamil Language
Language

தூக்கமின்மை பிரச்சினை

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் நன்கு தூளாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் அரை தேக்கரண்டி அளவு சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் சரியாகும்.

ஜாதிக்காய் பொடி பயன்கள் Jathikai Benefits in Tamil Language

குழந்தை ஆரோக்கியம்

ஜாதிக்காய் ஆனது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு இந்த ஜாதிக்காய் தூளினை மிக மிக குறைந்த அளவு பாலில் கலந்து கொடுத்து வருவதன் மூலமாக குணமாகும்.

தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கின்ற குழந்தைகளுக்கு இந்த ஜாதிக்காய் பாலில் கலந்து கொடுத்து வருவதன் மூலமாக குழந்தைகள் நன்றாக தூங்குவர்.

முக்கியமாக இதனை குழந்தைகளை தூங்க வைப்பதற்காக தினந்தோரும் தரக்கூடாது.

மேலும் அதிக அளவிலும் இதை குழந்தைகளுக்கு தரக்கூடாது ஏனென்றால் சாதிக்காய் பித்தம் அதிக அளவில் கொண்ட ஒன்றாகும்.

ஜாதிக்காய் பொடி பயன்கள் Jathikai Benefits in Tamil Language

ரத்த சுத்தி

இது அமிலத்தன்மை கொண்ட ஒரு காய் ஆகும். எனவே இதனை அடிக்கடி பசும்பாலில் கலந்து உட்கொள்வதன் மூலமாக ரத்தத்தில் உள்ள விசத்தன்மை வாய்ந்த கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

மேலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் உருவாவதை தடுத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது வலுப்பெறும்.

ஜாதிக்காய் பொடி பயன்கள் Jathikai Benefits in Tamil Language

வயிற்று உபாதைகள்

நாம் தினசரி உண்ணுகின்ற உணவு நன்றாக செரிமானமானால் தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு சிலருக்கு வாயு பிரச்சனைகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றனர்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை சிறிது பாலுடன் சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக மேற்கண்ட பிரச்சனைகள் குணமாகும்.

குடல் புழுக்களால் அவதிப்படும் குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் இது நல்ல நிவாரணம் தரும்.

ஜாதிக்காய் பொடி பயன்கள் Jathikai Benefits in Tamil Language

ஆண்மைகுறைவு

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் அதிக அளவில் இருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலத்தை பாதித்து ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.

இந்த பிரச்சனை உள்ள ஆண்கள் தினசரி உறங்குவதற்கு முன்னர் ஆக பாதாம் பருப்பினை அறைத்து அதனுடன் ஜாதிக்காய் சிறிதளவு சேர்த்து பசும்பாலுடன் கலந்து ஒரு மண்டலம் குடித்து வருவதன் மூலமாக நரம்புகள் வலுப்பெறும்.

ஆண்மைக் குறைவு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning