வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்கள் | Vitamin E Capsule Uses in Tamil
கண்ட க்ரீம்களை வாங்கி, பணத்தை விரயம் செய்யத் தேவையில்ல. மேலும் இது மிகக் குறைந்த செலவில் பல அற்புதமான பலன்களைத் தருவதால் உங்கள் பணமும் மிச்சமாகிறது.
முக்கியமாக இதை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம். இப்போது, வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்ஐ எதற்கெல்லாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
இந்த வைட்டமின் ஈ என்னை இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து எண்ணெயாக பிரித்தெடுக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியம்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெயை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் சூரிய வெப்பத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படும். தோல் சுருக்கங்கள் கோடுகள் ஏற்படாது, தழும்புகள் இருந்தால் மறைந்துவிடும்.
ஃப்ரீ ரேடிக்கல்கள் அழிக்கப்படுவதால் சரும நிலைமை பாதுகாக்கப்படுகிறது. பல சரும நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் உதவுகிறது.
மேலும் தடிப்புத் தோல் அழற்சி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளில்,வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. இது தோலின் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தோலிலிருந்து நீர் இழப்பை குறைக்கிறது.
முகப்பொலிவு
இந்த எண்ணெயை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் நரம்புகள் வலுப்பெற்று, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சரும ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பொதுவாக ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே முகம் தனது இயற்கையான பொலிவை திரும்பப் பெற்று பளிச்சென்று மாறிவிடும்.
மென்மையான சருமம்
இந்த எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையற்றது என்பதால் நீங்கள் குளித்து முடித்த பிறகு இதனை உடல் முழுவதும் தடவினால் சில வினாடிகளிலேயே இந்த எண்ணெயை சரும இழுத்துக்கொண்டு மிகவும் மென்மையாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.
நகங்கள் வலிமை
நகங்களை வலிமையாக வைத்துக் கொள்ள தினமும் இரவு நகங்களில் சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணையை மஜாஜ் செய்ய வேண்டும்.
இதனால் நகங்கள் பொலிவு பெறுவதோடு வலிமையும் அடையும்.
கண் கருவளையம்
சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணையை , தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கண்ணுக்கு கீழ் தடவி மசாஜ் செய்து வந்தால் கண்ணுக்கு கீழிருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
பாத வெடிப்பு
அரை தேக்கரண்டி வாசலின் உடன், சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணெய் கலந்து பாதங்கள் மற்றும் குதிகால்களில் தடவி வந்தால் பாதங்கள் மென்மையாகும். வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.
தலைமுடி பாதுகாப்பு
தலையில் அரிப்பு ஏற்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ எண்ணெய் கலந்து தலை முடியின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்தால் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.
வறண்ட தலைமுடியைக் கூட இது மென்மையாக மாற்றும். மேலும் சூரியனால் ஏற்படும் பாதிப்புகள்ல இருந்து, தலைமுடியை பாதுகாக்கும்.
இந்த வைட்டமின் ஈ எண்ணெய் தொடர்ந்து இரவு படுக்கும் முன் முகத்திற்கு தினமும் தடவி வந்தால் நாளடைவில் முகம் வெண்மையாக, பொலிவாக பளிச்சென்று மாற ஆரம்பிக்கும்.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எப்படி வாங்குவது
இது கேப்ஸ்யூல் வடிவில், அனைத்து மருந்து கடைகளிலும் கிடக்கிறது. கீழே வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் வாங்குவதறகான லிங்க் கொடுக்கபட்டுள்ளது . மெடிக்கல் சென்று வாங்க இயலாதவர்கள் இந்த லிங்க் மூலமாக்க அமேசான் இல் வாங்கிக்கொள்ளவும்.
இதனையும் படிக்கலாமே
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil
- விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
8 Comments
Comments are closed.